என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharma Adi"

    • நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. .
    • 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் காலனி புதுதெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரேமகுமாரி (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பருகம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. அக்கம் பக்கதினர் வெளியே வந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 2 வாலிப ர்களையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

    வீட்டின் உரிமையாளர் பிரேமகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பிரேமகுமாரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மட்டும் உடைத்திருந்தது.இதற்கிடையில் பொதுமக்கள் திருவெண்ணை நல்லூர்போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்இதில் திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனியை சேர்ந்த கலியன் மகன் ஜெகதீஸ்வரன் (21), சரவணம்பாக்கம் காலனியை சேர்ந்த ரகு மகன் உதயா (26) என தெரியவந்தது. மேலும் 2 பேரும் வீட்டின் பூட்டை உடைத்து திருடமுயற்சி செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து அவர்களி டமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சவுந்தர்ராஜன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார்.
    • சவுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து, அரசு பஸ் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். அப்போது, திண்டிவனம் புறவழிச் சாலை தீர்த்தகுளத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, ஓசூரில் இருந்து புதுவை சென்று கொண்டிருந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் சவுந்தர்ராஜன் தனது குடும்பத்தாருடன் வந்த கார் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து, அரசு பஸ் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அரசு பஸ் டிரைவரும், சவுந்தர்ராஜனும் சமாதானமாகி அங்கிருந்து சென்றனர். இதனை அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இது திண்டிவனம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

    • மூர்த்தி (21). இவர் சேலம் இரும்பாலை அருகே உள்ள அட்டை கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார்.
    • இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வரச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (21). இவர் சேலம் இரும்பாலை அருகே உள்ள அட்டை கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நேற்று நள்ளிரவில் மாணவி வீட்டின் அருகே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதை அந்த வழியாக வந்த மாணவியின் உறவினர்கள் பார்த்து விட்டனர். இதையடுத்து வாலிபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி உறவினர்களிடம் பேசி வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசூரில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
    • அப்பு என்கிற அய்யனார் (25) என்பவர் சித்ராவை கட்டிபிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் ரோடு தெருவைச் ேசர்ந்தவர் முருகன் மகள் சித்ரா (வயது 17) இவரது தாய் ராமாயி. இவர் தாய் அரசூரில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்கின்றார். சித்ரா அவரது அம்மாவுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை கடையில் இருக்கும்போது பண்ருட்டி திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் அப்பு என்கிற அய்யனார் (25) என்பவர் சித்ராவை கட்டிபிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சிய டைந்த சித்ரா கூச்சல் போட்டார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அய்யனாரை பிடித்து தர்ம அடி கொடுத்து அரசூர் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். தகவலறிந்து வந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அப்புவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அய்யனார் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    ×