search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dharna protest"

    • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகிறோம்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மூங்கில்மடுவு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மணிகண்டன் இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திடீரென குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மூங்கில் மடுவு பகுதியில் உள்ள எங்கள் வீட்டிற்குச் செல்லும் ஓடை புறம்புக்கு வழியை அதே பகுதியை சேர்ந்த நபர் ஆக்கிரமித்துள்ளார். இந்த நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கடந்த ஜனவரி, 23-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் இதேபோல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது அதிகாரிகள் பேசும்போது ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் நம்பிக்கையுடன் சென்றோம். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு ஓடை புறம் போக்கை மீட்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகிறோம்.

    வாக்குறுதி தந்த அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளோம் என அவர் கூறினார். இதனை அடுத்து அங்கு வந்த டி.ஆர்.ஓ பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தர்ணாவில் ஈடுபட்டிருந்த மணிகண்டனின் குடும்பத்திடம் விசாரனைக்கு உத்திரவிடுவதாக உறுதியளித்தார். அதனை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் பலரும் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக கூட்ட அரங்கிற்கு வந்திருந்தனர்.
    • போராட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து பொதுமக்கள் பலரும் தங்கள் பகுதிக்கான புகார் களை தெரிவிப்பதற்காக மனுக்களுடன் மாநகராட்சி குறைதீர் கூட்ட அரங்கிற்கு வந்திருந்தனர்.

    ஆனால் மனுக்களை பெற்றுக் கொள்வதற்கு மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் என யாரும் அங்கு வரவில்லை. இதனால் சில மணி நேரங்கள் அங்கே பொது மக்கள் காத்திருந்த நிலையில் தி.மு.க. கவுன்சி லர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்களும் மனு அளிக்க வந்தபோது அவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வேறு பணிகளை செய்யச் சொல்வதாக குற்றச்சாட்டு
    • மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து முறையிட முடிவு

    கோவை,

    மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் நிரந்தர தூய்மை பணியாளர்களை பத்தாண்டுகளுக்கு மேலாக தாங்கள் செய்து வந்த பணிகளை தவிர்த்து வேறு பணிகளை செய்யச் சொல்வதாக கூறி உள்ளிருப்பு போராட்டம் 180 க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    மேலும் குப்பைகளை பிரித்தெடுக்கும் தொழில் செய்து வந்த தங்களை சாக்கடை மலம் அள்ளும் தொழிலுக்கும் தற்போது பணிஅமர்த்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் சாலை நடுவே உள்ள தடுப்புகளில் ஆபத்தான முறையில் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவதாகவும் ஓய்வு பெறும் வயதில் உள்ள தங்களை வேறு பணிகளுக்கு பணி அமர்த்துவதாக கவலை தெரிவித்தனர். மாநகராட்சி துணை ஆணையர் சிவகுமார் சமாதானம் செய்ய முற்பட்டார்.

    இருப்பினும் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்

    • பல்வேறு இடத்தில் புகார் அளித்துள்ளனர்
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவருக்கு இப்ராஹிம், ரியாஸ், பயாஸ், அயாஸ் ,அக்தர், தமிஸ் என 6 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் துணை பத்திரபதிவு அலுவலகத்திற்கு சென்று அப்துல் ரஷீத்தின் பிள்ளைகள் சொத்தின் பத்திரம் குறித்து புகார் அளித்துள்ளனர். மேலும் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் என பல்வேறு இடத்தில் புகார் அளித்துள்ளனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் ரஷீதின் மனைவி மற்றும் அவரது மகன்கள் வாணியம்பாடி துணை பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சூரமங்கலம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தது.
    • சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் சூரமங்கலம் உழவர் சந்தை முன்பாக காலை 6 மணி முதல் 8 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தது.

    போராட்டம்

    இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாகவும், முறைகேடுகளில் ஈடுபடும் வேளாண் துறை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் சூரமங்கலம் உழவர் சந்தை முன்பாக காலை 6 மணி முதல் 8 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் சேலம் மாவட்ட வேளாண் அதிகாரி இ-நாம் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளுக்கு வெளி மார்க்கெட்டுகளை விட கூடுதல் விலை நிர்ணயிப்பதாகவும், விவசாயிகள் அல்லாத நபர்களிடம் இருந்து கமிஷன் பெற்றுக்கொண்டு தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து உழவர் சந்தை மூலம் விற்பனை செய்வதாகவும், பல்வேறு முறைகேடுகள் மூலம் மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்வதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

    இந்த நிலையில் அவரையும், அவருக்கு துணை நிற்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 மாதத்தில் அவரை மாற்றவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று அருள் எம்.எல்.ஏ கூறினார்.

    • ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாரியம் மூலம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும்.
    • போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    மின்வாரியத்தின் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டு களுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு வாரியம் மூலம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்கு றுதிகளை நிறைவேற்றும் விதமாக ஒப்பந்த ஊழிய ர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் இன்று பாளை தியாகராஜ நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செய லாளர் முருகன் தொடக்க உரையாற்றினர். கோட்ட செயலாளர்கள் மந்திர மூர்த்தி, இளைய ராஜா, சிவராஜ், வேல்முருகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். திட்ட செய லாளர் கந்தசாமி, பொரு ளாளர் நாகையன் தென்காசி மாவட்ட செய லாளர் அயூப் கான் உள்ளிட்டோர் விளக்க வுரை ஆற்றினர். மாநிலச் செயலாளர் வண்ணமுத்து நன்றி கூறினார்.

    • புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
    • கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்

    ராணிப்பேட்டை:

    சோளிங்கர் அருகே உள்ள செங்கல் நத்தம் ஊராட்சி, ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 40 பேர் நேற்று கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமாபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளனர். இது சம்பந்தமாக ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீட்டை காலி செய்ய உத்தர விட்டனர். இருப்பினும் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வருகின்றனர்.

    புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை, மேலும் கிராமத்திற்கு தேவையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அரசு உத்தரவு பெற்று பணி நடைபெறும் நிலையில் அதையும் தடுத்து வருகின்றனர்.

    மழைக்காலங்களில் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி போதுமானதாக இல்லாததால் விவசாய நிலத்தில் பயிர் அறுவடை செய்யும் எந்திரங்களை எங்கள் ஊர் வழியாக வர முடியாமல் வேறு வழியாக விவசாய நிலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளவர்களை காலி செய்து எங்கள் பகுதிக்கு சாலை மற்றும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தனர்.

    இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்.

    • உசிலம்பட்டியில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு விஸ்வ இந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டத்துக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ேமடைகளை அப்புறப்படுத்துமாறு கூறினார். இதனால் போலீசாருக்கும், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மாநில அமைப்பாளர் சேதுராமன், பொறுப்பாளர் பீமாராவ்ராம் தலைமையில் விஸ்வ இந்துபரிஷத் நிர்வாகிகள் 30 பேர் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சுப்பையா தனது நிலத்தை அளக்க நில அளவை பிரிவில் பணம் கட்டியதாக கூறப்படுகிறது.
    • சர்வே பிரிவை சேர்ந்த அலுவலர்களை வாழ்த்தி பிளக்ஸ் பேனர் வைக்க சுப்பையா அனுமதி கேட்டிருந்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்கு உட்பட்ட மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் என்ற சுப்பையா. விவசாயி. இவர் தனது நிலத்தை அளக்க வேண்டும் எனக்கூறி நில அளவை பிரிவில் பணம் கட்டியதாக கூறப்படுகிறது.

    ஆனால் 10 மாதங்களை கடந்தும் நிலத்தை அளக்க சர்வேயர் யாரும் வராததால் தென்காசி தாலுகா அலுவலகம் முன்பு சர்வே பிரிவை சேர்ந்த அலுவலர்களை வாழ்த்தி பிளக்ஸ் பேனர் வைக்க அவர் அனுமதி கேட்டிருந்தார். ஆனாலும் அதன்பின்னரும் தனக்கான இடத்தை அளவீடு செய்ய வராமலும், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்காமலும் இருப்பதால் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் சுப்பையா திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    உடனடியாக சுதாரித்துக்கொண்ட அலுவலர்கள் மற்றும் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நில அளவை பிரிவு அதிகாரிகள் நேரில் வந்து அவரிடம் அளக்க வேண்டிய நிலங்களை உரிய முறையில் அளந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • 120 மாணவர்கள் பி.காம் தேர்வு. எழுதினர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் ரெட்டித்தோப்பு பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 120 மாணவர்கள் பி.காம் தேர்வு. எழுதினர். அதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாககல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர் கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் கல்லூரி நிர்வாகத்தின ரிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறு தியளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தைகைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் துக்கியாம்பாளையம் கிராமத்தில் பெரும்பா லான குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கவில்லை என, பா.ம.க ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் இரா. முருகனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • முறையாக குடிநீர் வழங்க கோரியும், வாசகம் எழுதிய பதாகையை கைகளில் பிடித்தவாறு தரையில் அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் துக்கியாம்பாளை யம் கிராமத்தில் பெரும்பா லான குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கவில்லை என, பா.ம.க ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் இரா. முருகனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்த ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்திற்கு காலி குடத்துடன் சென்றார்.

    தர்ணா

    துக்கியாம்பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்காததை கண்டித்தும், அனைத்து பகுதிக்கும் தட்டுப்பாடின்றி முறையாக குடிநீர் வழங்க கோரியும், வாசகம் எழுதிய பதாகையை கைகளில் பிடித்தவாறு தரையில் அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒன்றிய குழு தலைவர் சதீஷ்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்தழகன், அண்ணாதுரை ஆகியோர், துக்கியாம்பாளை யம் கிராமத்தில் ஆய்வு செய்து அனைத்து பகுதி களுக்கும், சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு, தர்ணா போராட்ட த்தை ஒன்றிய குழு உறுப்பி னர் உழவன் இரா. முருகன் கைவிட்டு இருக்கையில் அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார்.

    • நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
    • வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 17- வது வார்டு கவுன்சிலராக பா.ம.க.,வை சேர்ந்த சுகந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நேற்று மதியம் பேரூராட்சி அலுவலகத்திற்கு தனியாக வந்த கவுன்சிலர் சுகந்தி, பேரூராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு நின்று கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கவுன்சிலர் சுகந்தி கூறியதாவது:-எனது வார்டில் 450 வீடுகளில் 3000 பேர் வசித்து வருகின்றனர்.

    6 மாதங்களாக பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், எனது வார்டுக்கு சரிவர வருவதில்லை. பலமுறை பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளேன் .ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் எனது வார்டில் சாக்கடை தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இங்குள்ள குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தொட்டி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனது வார்டில் கொசு மருந்து அடித்து பல மாதங்கள் ஆகின்றது. ஒவ்வொரு முறையும் வந்து கூறும் போது செயல் அலுவலர் செய்து தருவதாக உத்தரவாதம் அளிக்கின்றார் .ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை. இதேபோல் தொடர்ந்தால் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் சுகந்தி யிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து பணிகளையும் செய்து தருவதாக பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×