என் மலர்
மகேந்திரசிங் தோனி | Mahendra Singh Dhoni (MS Dhoni) news updates in Tamil
- ஐ.பி.எல். சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
- தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் நினைவு பரிசு வழங்கினார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக நிதிச்ஷ் ரானா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, எம்.எஸ்.தோனிக்கு பி.சி.சி.ஐ. நினைவு பரிசு வழங்கி கவுரவித்தது.
ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நினைவு பரிசு வழங்கினார்.
- சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
- சென்னையில் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய தோல்வியாகும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அஷ்வினுக்கு பிறகு தோனி 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கியது சிஎஸ்கே ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
7 ஓவரில் 100 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய நிலையில் சிவம் தூபே அவுட் ஆனதும் தோனி வராதது ஏன்? வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பே துளியும் இல்லாமல் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே விளையாடியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோனி வருவதற்கு முன்னதாகவே அஸ்வின் (8 பந்தில் 11 ரன்கள்), ஜடேஜா (19 பந்தில் 25 ரன்கள்) களமிறங்கினர். அவர்கள் இருவரும் பெரிய அளவில் அதிரடியாக விளையாடவில்லை. 9-வது வீரராக களமிறங்கிய தோனி 16 பந்தில் 30 ரன்கள் குவித்தார்.
அவர்கள் இருவருக்கும் முன்பே தோனி களமிறங்கியிருந்தால் அவர் அதிரடியாக விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருப்பார் என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சிஎஸ்கே அணி வெற்றிக்காக விளையாடவில்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோனியின் தீவிர ரசிகர்கள் சிலர் சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. தோனி சிக்ஸ் அடித்ததே போதும் எனவும் அவர் ஆட்டத்தை பார்த்ததே சந்தோஷம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 171 இன்னிங்சில் 4,687 ரன்கள் அடித்துள்ளார்.
- எம்.எஸ்.தோனி 204 இன்னிங்சில் 4,699 ரன்கள் எடுத்துள்ளார்.
சென்னை:
18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 8-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதின.
முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் எடுத்தார். 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.
தற்போது ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்தார். எம்.எஸ்.தோனி 204 இன்னிங்சில் 4,699 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும்.
- சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர்.
ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணி சார்பில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர். ஆட்டத்தின், 5வது ஓவரின்போது நூர் அகமதின் பந்து வீச்சில் பில் சால்ட் பேட்டிங் செய்தார்.
அதிரடியாக விளையாடி வந்த பில் சால்டை, கீப்பராக நின்றுருந்த டோனி மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்து வெளியேற்றினார்.
முன்னதாக, சிஎஸ்கே - மும்பை அணி இடையேயான ஆட்டத்தின்போது சூர்யா குமார் யாதவை இதேபோன்று டோனி அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நான் இம்பேக்ட் பிளேயர் இல்லை.
- நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் இறுதி ஓவர்கள் வரை சென்று ரசிகர்களுக்கு விருது படைக்கிறது. இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதி அமலில் இருக்காது என பல்வேறு தகவல்கள் வந்தது. ஆனால் 2027 வரை இந்த விதி இருக்கும் என பிசிசிஐ தெரிவித்தது.
இந்நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இம்பேக்ட் பிளேயர் விதியை அறிமுகப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை வந்தபோது, ஐபிஎல் தற்போது நல்ல நிலையில் உள்ளது. இதற்குமேல் அதனை மேம்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. போட்டிகளும் விறுவிறுப்பாகவே உள்ளன என கூறினேன்.
ஆனாலும் அந்த விதி அமலுக்கு வந்தது. அந்த விதி எனக்கு உதவுகிறதுதான். ஆனாலும் நான் பேட்டிங்கும் செய்கிறேன். கீப்பிங்கும் செய்கிறேன். எனவே நான் இம்பேக்ட் பிளேயர் இல்லை. நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு எம்எஸ் தோனி கூறினார்.
- நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
- வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.
மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டாலும், அணிக்கான முடிவுகளை தோனி எடுப்பதாக பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கான முடிவுகளை ருதுராஜ் கெய்க்வாட்டின் பின்னணியில் இருந்து தான் எடுப்பதாக கூறப்படுவதை தோனி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பல ஆண்டுகளாக பயணிக்கிறார். அவர் மிகவும் அமைதியானவர். அவரிடம் சிறந்த தலைமைப் பண்பு உள்ளது. அதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு அவர் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார்.
இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் ருதுராஜிடம் கூறியது என்னவென்றால், நான் ஒரு அறிவுரை கூறினால் அதனை நீங்கள் கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும் என அர்த்தம் கிடையாது. நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
கடந்த ஐபிஎல் தொடரின்போது, ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் 99 சதவிகித முடிவுகளை எடுத்தது அவர்தான். பந்துவீச்சில் மாற்றங்கள், ஃபீல்டிங்கில் மாற்றங்கள் போன்ற மிகவும் முக்கியமான முடிவுகளை அவர்தான் எடுத்தார். அவருக்கு நான் உதவியாக இருந்தேன். வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.
என தோனி கூறினார்.
- ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐ.பி.எல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக விளையாடிய ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், விராட் கோலி குறித்து எம்.எஸ்.தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 50-60 ரன்கள் அவருக்கு போதாது.
எப்போதும் சதம் அடிக்க வேண்டும். அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றே இருப்பார்.
இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- 43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் ஆவார்.
பத்து அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 3-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடும் சி.எஸ்.கே. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வகையில் தோனி எந்த வரிசையில் ஆடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசிய எம்.எஸ். தோனி, "சென்னை அணிக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என்னால் விளையாட முடியும். அது என்னுடைய அணி உரிமை. நான் காயமடைந்து சக்கர நாற்காலியில் இருந்தாலும், என்னை சி.எஸ்.கே. அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொளவதை ஒட்டி தக் லைஃப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. அதில், கமல்ஹாசன், எம்.எஸ்.தோனி ஒருபக்கமும் சிம்பு, ருதுராஜ் மறுபக்கமும் இடம்பெற்றுள்ளனர்.
- இன்றைய முதல் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின். இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதோடு, தற்போது புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில், இன்று ஐ.பி.எல். தொடரில் இரு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதனிடையே போட்டியை ஒட்டி இரு அணிகள் வீரர்களும் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, களத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எம்.எஸ். தோனியை கட்டியணைத்து அன்பை பொழிந்தார். மேலும், அவரின் கைகளை தொட்டுப் பார்த்து உரையாடிக் கொண்டிருந்தார்.
மைதானத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் எம்.எஸ். தோனி கட்டியணைத்துக் கொண்டு, உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இன்றிரவு நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சீசனில் மெதுவான பந்து வீச்சால் அவருக்கு ஒரு ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையால் அவர் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட முடியவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை சூர்யகுமார் யாதவ் வழி நடத்துகிறார்.
- மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
- 2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை ஆர்சிபி பதிவு செய்தது.
இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக 2 அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியின்போது எம்.எஸ்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து ரிஷப் பண்ட் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜெயிலர் படத்தின் அலப்பறை கிளப்புறோம் பாடல் பின்னணியில் ஒலிக்கப்பட்டது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 171 இன்னிங்சில் 4687 ரன்கள் அடித்துள்ளார்.
- எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார்.
18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா படைத்துள்ள சாதனையை எம்.எஸ். தோனி முறியடிக்க உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.
ரெய்னாவின் சாதனையை இந்த சீசனில் தோனி முறியடிக்க உள்ளார். அதற்கு அவருக்கு இன்னும் 19 ரன்களே தேவை. எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும்.
ஜடேஜா இன்னும் 8 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் கைப்பற்றிய சி.எஸ்.கே. வீரர் என்ற பெருமையை பெறுவார். பிராவோ 140 விக்கெட் (116 போட்டி) வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்சிஸ் வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா 172 போட்டியில் 133 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த சீசனில் சில போட்டிகளில் ஆட வில்லை. அவர் 6 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனையை பெறுவார். மலிங்காவை (170 விக்கெட்) முந்துவார். பும்ரா 165 விக்கெட் எடுத்துள்ளார்.