என் மலர்
மகேந்திரசிங் தோனி | Mahendra Singh Dhoni (MS Dhoni) news updates in Tamil
- நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது.
- இதில் 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது:
ஐ.பி.எல். ஏலத்திலேயே சி.எஸ்.கே. அணி தோற்றுவிட்டது. நல்ல பிளேயர்களை வாங்குவதற்கு போதுமான பணம் இருந்தும் அந்த பிளேயர்களை வாங்க சிஎஸ்கே ஏன் ஆர்வம் காட்டவில்லை? கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை ஏன் சிஎஸ்கே வாங்கவில்லை?
இந்த ஐபிஎல் ஏலத்தைப் பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு.
தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சி.எஸ்.கே. அணிக்காக கேப்டன்சி, விக்கெட் கீப்பிங், பேட்டிங் என தன்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் கொடுக்கிறார். ஆனால் அணியில் இருக்கும் மற்ற பிளேயர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடுவார். சி.எஸ்.கே. நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
- முதலில் ஆடிய சி.எஸ்.கே. 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஐதராபாத் 155 ரன்கள் எடுத்து வென்றது.
சென்னை:
சேப்பாக்கத்தில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த சென்னை அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு சென்னை அணி கேப்டன் தோனி பேசியதாவது:
நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். முதல் இன்னிங்சில் விக்கெட் சற்று சிறப்பாக இருந்தது. 154 ரன்கள் எடுத்தது போதுமான ஸ்கோராக இல்லை.
இரண்டாவது இன்னிங்சில் கொஞ்சம் உதவி இருந்தது. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் தரம் இருந்தது. அவர்கள் சரியான பகுதிகளில் பந்து வீசினர். ஆனால் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக இருந்தோம்.
பிரேவிஸ் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார். மிடில் ஆர்டரில் எங்களுக்கு அது தேவைப்பட்டது என நினைக்கிறேன்.
சுழற்பந்து வீச்சாளர்கள் வரும்போது நாங்கள் சற்று சிரமப்பட்ட மிடில் ஆர்டரில் நமக்கு அது போன்ற பேட்ஸ்மேன் தேவை. பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்ய வேண்டும், அங்குதான் நாங்கள் பற்றாக்குறையாக இருக்கிறோம்.
இதுபோன்ற ஒரு போட்டியில் ஒன்று அல்லது இரண்டு பகுதிகள் இடைவெளிகளை அடைப்பது நல்லதுதான். பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படாதபோது மாற்றங்களைச் செய்யாமல் தொடர்ந்து முன்னேற முடியாது. நாங்கள் போதுமான ரன்களை பலகையில் வைக்கவில்லை என தெரிவித்தார்.
- ஐபிஎல் கிரிக்கெட்டில் எம்.எஸ். தோனியின் 274ஆவது போட்டியாகும்.
- ரோகித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக் 400 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
ஐபிஎல் 2025 தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக எம்.எஸ். தோனி களம் இறங்குகிறார். இந்த போட்டி எம்.எஸ். தோனிக்கு ஒட்டுமொத்தமாக 400ஆவது போட்டியாகும். இதன்மூலம் 400 போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
விராட் கோலி, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இதற்கு முன்னதாக 400 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
எம்.எஸ். தோனி இந்திய அணிக்காக 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்-லில் இன்றைய போட்டி அவருக்கு 274 போட்டியாகும். சாம்பியன்ஸ் லீக்கில் சிஎஸ்கேவுக்காக 24 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- 2004-ம் ஆண்டு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் தோனி.
- 2005-ல் இருந்து தோனி குறித்து ஒரு வதந்தி பரவியது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் 6 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருநாளில் தோனி 5 லிட்டர் பால் குடிக்கிறார் என்ற வதந்தி தொடர்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பதில் அளித்துள்ளார்.
2004-ம் ஆண்டு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் தோனி. அவரது அதிரடியான பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வேகமாக ஓடி ரன்களை குவித்து வந்தார்.
அப்போது தோனி ஒருநாளில் 5 லிட்டர் பால் குடிப்பதே அவரின் பிட்னஸ் மற்றும் வலிமைக்கு காரணம் என்று சில தகவல்கள் வெளியாகியது. இதனை தோனி ஒருநாளும் மிஸ் செய்ய மாட்டார் என்றும் கூறப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக தோனியிடமே கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு தோனி அளித்த பதில், எனக்கு பால் குடிக்கும் பழக்கம் உள்ளது உண்மைதான். ஆனால் ஒருநாளுக்கே மொத்தமாக ஒரு லிட்டர் அளவிற்கு தான் பால் குடிப்பேன் என்று நினைக்கிறேன். கூடுதலாக 4 லிட்டர் என்பது கொஞ்சம் ஓவர்தான். சராசரி மனிதர் தினமும் 5 லிட்டர் பால் குடிப்பது எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வரும் இந்த வதந்திக்கு தோனி முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
- சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்தார்.
- ஆயுஷ் மாத்ரே தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.
ஆயுஷ் மத்ரேவின் துணிச்சலான ஆட்டத்தை டிரஸ்ஸிங் ரூமில் நின்றிருந்த சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ். தோனி புன்னகையுடன் ரசித்து பார்த்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
- 6-வது தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை:
மும்பையில் நேற்று நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 6வது தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு சென்னை கேப்டன் தோனி கூறியதாவது:
அணியில் எதுவும் சரியாக செல்லாத நிலையில் அதற்காக உணர்ச்சி வசப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
ஒருவேளை நாங்கள் தகுதியாக முடியாத சூழல் இருந்தால் அடுத்த சீசனுக்கு சிறந்த லெவனை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த 2020 ஐ.பி.எல். சீசனும் எங்களுக்கு மோசமான சீசனாக இருந்தது. அதிலிருந்து எப்படி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.
வீரர்களை மாற்றுவதில் அதிகமாக விருப்பம் காட்ட வேண்டியதில்லை. அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தாலே போதுமானது.
சிறப்பாக செயல்பட்ட மும்பை அணிக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.
- ரவி பிஷ்னோய் தனது முதல் 3 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
- அவருக்கு ரிஷப் பண்ட் வாய்ப்பு வழங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு ஓவரை கொடுத்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏப்ரல் 14-ம் தேதி லக்னோ- சென்னை அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 167 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. ஷிவம் துபே 43 ரன்களுடனும் கேப்டன் தோனி 26 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
இந்த போட்டியில் டெத் ஓவரில் ரவி பிஷ்னோயை பயன்படுத்தாதது தான் லக்னோவின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தெரிவித்தனர்.
அந்தப் போட்டியில் ரவி பிஸ்னோய் தனது முதல் 3 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அவருக்கு லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் டெத் ஓவரில் வாய்ப்பு வழங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு ஓவரை கொடுத்தார்.
இந்நிலையில் நீ கடைசி வரை பேட்டிங் செய்தால் ரவி பிஷ்னோய் பவுலிங் செய்ய வரமாட்டார் என்று தோனி கூறியதாக துபே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மஹி பாய் சில விஷயங்களை என்னிடம் சொன்னார். குறிப்பாக பிஸ்னோய்க்கு இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது. எனவே நீ கடைசி வரை விளையாடினால் பிஷ்னோய் பந்து வீச வர மாட்டார் என்று தோனி என்னிடம் சொன்னார். மறுபுறம் தோனி வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டார். அதைப் பயன்படுத்தி நான் விளையாடினேன்.
என்று துபே கூறினார்.
- பதிரனா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் அப்துல் சமதை தோனி அவுட் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
- அப்போட்டியின் முடிவில் அதை எப்படி செய்தீர்கள் என்று ரிஷப் பண்ட் ஆச்சர்யமாக கேட்டார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை 5 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்து தங்களது 2வது வெற்றியை பெற்றது.
முன்னதாக அந்தப் போட்டியில் எம்எஸ் தோனி விக்கெட் கீப்பிங்கில் தலா 1 கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட் செய்து வெற்றியில் பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக பதிரனா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் அப்துல் சமதை அவர் அவுட் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் அப்போட்டியின் முடிவில் அதை எப்படி செய்தீர்கள் என்று ரிஷப் பண்ட் ஆச்சர்யமாக கேட்டார். அதற்கு தோனி. "சாதாரணமாக ஸ்டம்பை பார்த்து பந்தை தூக்கி எறிந்தேன். அது ஒன்று அடிக்கலாம் அல்லது தவறப்படலாம். அது போன்ற மனநிலையில் தான் பந்தை எறிந்தேன்" என்று சொன்னார்.
அதைக் அருகில் இருந்த கேட்ட லக்னோ ஆலோசர் ஜஹீர் கான் "அவ்வளவு சுலபமாவா செய்தீர்கள்?" என்ற வகையில் ஆச்சரியத்துடன் தோனி போல வெறுங்கை யை தூக்கி எறிந்து செய்துப் பார்த்தார். இறுதியில் ரிஷப் பண்ட் "நான் ரன் எடுப்பதற்காக வேகமாக ஓடினேன். அப்போது ரன் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்துடன் திரும்பிச் சென்றேன்" என தோனியிடம் ஜாலியாக கூறினார்.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
- ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக தோனி சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி முதலில் ரன்களை குவித்தாலும் அடுத்த சிறிது நேரத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த நிலையில் தோனி, ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறவைத்தனர்.
இந்தப் போட்டியில் கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட், கேப்டன்சி, பேட்டிங் என அசத்திய தோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக தோனி சாதனை படைத்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் சேஸிங்கில் 30 முறை நாட் அவுட் (ஆட்டமிழக்காமல்) இருந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். மொத்தமாக 41 முறை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி அதில் 30 முறை ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்தவர்கள்:-
1. எம்.எஸ்.தோனி -30
2. ரவீந்திர ஜடேஜா - 27
3. தினேஷ் கார்த்திக் -24
4. டேவிட் மில்லர் - 23
5. விராட் கோலி - 22
- அவரது விக்கெட் கீப்பிங் எனக்கு எந்த விதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.
- தோனி மிக நீண்ட காலமாக ஒரே மாதிரியாக விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை 19.3 ஓவரில் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதுவரை மொத்தம் ஏழு போட்டிகளில் இரண்டாவது வெற்றியை சிஎஸ்கே பெற்று இருக்கிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகான சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தோனி தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் எனவும், அவரது கேப்டன்சி துல்லியமாக இருந்ததாகவும் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தோனி எப்போது ஒரு நகரத்தில் இருந்தாலும் அங்கு மிகவும் சத்தமாக இருக்கும். அவரது விக்கெட் கீப்பிங் எனக்கு எந்த விதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்பும் இதை சொல்லி இருக்கிறேன். இப்போதும் அவர் உலகின் மிகச்சிறந்த கீப்பர்.
தோனி மிக நீண்ட காலமாக ஒரே மாதிரியாக விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அது மிகவும் அற்புதமானது. இன்று அவரது கேப்டன்சியும் துல்லியமாக இருந்தது. மிடில் ஓவர்களில் இரண்டு ஸ்பின்னர்களையும் பயன்படுத்திய விதம், ஓவர்களை வேகமாக வீசி முடித்தது அதன் மூலம் எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது என அவரது கேப்டன்சி சரியாக இருந்தது.
இன்று நடந்த சிறந்த விஷயம் தோனியின் கேப்டன்சி தான். அவர் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டார். அதற்கு ஏற்ப மாற்றங்களை செய்தார். அவரது சுழற் பந்துவீச்சாளர்களை வரிசையாக வீசவைத்தார். இதைத்தான் தோனி தனது கிரிக்கெட் வாழ்வு முழுவதும் செய்து இருக்கிறார். ஒரு கேப்டனாக இன்று இரவு களத்தில் தோனி செயல்பட்ட விதம்தான் இந்த போட்டியை நமக்கு சிறப்பாக விவரிக்கும்.
என்று மைக்கேல் கிளார்க் கூறினார்.
- நாங்கள் இந்த தொடரில் பவர்பிளேவில் மோசமாக விளையாடினோம்.
- பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நாங்கள் நினைத்த தொடக்கத்தை பெறமுடியவில்லை.
ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற பின்பு பேசிய டோனி, "இது போன்ற தொடர்களில் ஆடும் போது உங்களுக்கு வெற்றி என்பது மிகவும் முக்கியம். துரதிர்ஷ்டவசமாக ஆரம்ப கட்டங்களில் எங்களால் சரியாக விளையாட முடிய வில்லை. அதற்கு நிறைய விஷயங்களை சொல்லலாம். வெற்றி பெற்றது ஒட்டு மொத்த அணிக்கும் நம்பிக்கையை அளிக்கிறது.
இதன் மூலம் எந்த துறையில் இன்னும் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதற்கு இந்த வெற்றி உதவியாக இருக்கும். கிரிக்கெட்டில் நாம் நினைத்தது போல் நடக்க வில்லை என்றால் கடவுள் நமக்கு அனைத்தையும் கடினமாக மாற்றிவிடுவார். இந்த ஆட்டம் கூட எங்களுக்கு கடினமாகதான் இருந்தது.
நாங்கள் இந்த தொடரில் பவர்பிளேவில் மோசமாக விளையாடினோம். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நாங்கள் நினைத்த தொடக்கத்தை பெறமுடியவில்லை. சில நேரங்களில் தவறான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து விடுகின்றோம். இது எல்லாம் எங்கள் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது.
சேப்பாக்கம் ஆடுகளமும் கொஞ்சம் தோய்வாக இருந்தது. நாங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியே விளையாடும்போது எங்கள் அணியின் பேட்டிங் நன்றாகவே இருக்கிறது. இதுபோன்ற பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாட வேண்டும் என்று நினைக்கின்றோம். இதன் மூலம் எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய ஷாட் ஆடுவதற்கான நம்பிக்கை கிடைக்கும்.
இதேபோல அஸ்வின் மீது நாங்கள் அதிக நெருக்கடியை அளிக்கிறோம் என்று நினைக்கின்றேன்.முதல் 6 ஓவர்களில் அவர் 2 ஓவர்கள் வீசுகிறார். எனவே இந்த ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்து பார்ப்போம் என்று எங்களுக்கு தோன்றியது. பவுலிங் தாக்குதல் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதே போன்று பேட்டிங்கிலும் நாங்கள் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தை பெற வேண்டும்.
ஷேக் ரசித் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கின்றேன். அவர் சில ஆண்டுகளாக எங்கள் அணியில் இருந்தார். தற்போது அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்து இருக்கிறது. இயல்பான ஷாட்களை ஆடியே அவர் பவுலர்களை ஆதிக்கம் செலுத்த முடியும். எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்கிறது. இதை சொன்னவுடன் எனக்கு ஏன் இந்த விருது தருகிறார்கள் என்று தான் யோசித்தேன். ஏனென்றால் நூர் அகமது அபாரமாக பந்துவீசினார்" என்று தெரிவித்தார்.
- லக்னோவுக்கு எதிரான போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார் சிஎஸ்கே கேப்டன் தோனி
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் தோனி அசத்தியிருந்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் 43 வயதான எம்.எஸ். தோனி, ஐபிஎல் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற மிக வயதான வீரர் சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் 43 வயதான எம்.எஸ். தோனி, ஐபிஎல் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற மிக வயதான வீரர் சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி யில் பிரவீன் தாம்பே 42 வயது 208 நாட்களில் ஆட்ட நாயகன் விருது பெற்றதே சாதனையாக இருந்தது.
6 ஆண்டுகளுக்கு பிறகு டோனிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 2019-ல் டெல்லி கேப்பிடல்சுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் அவர் இந்த விருதை பெற்று இருந்தார்.
ஆட்ட நாயகனை விருது வென்ற பின்பு பேசிய எம்.எஸ். தோனி, "எனக்கு ஏன் விருதை வழங்குகிறார்கள் என்றுதான் நினைத்தேன். நூர் அகமது மிகவும் சிறப்பாக பந்து வீசினார்.
ஒட்டு மொத்தத்தில் டோனி 18-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் அவர் வீராட்கோலியை சமன் செய்தார். அதிகபட்சமாக ரோகித் சர்மா 19 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் டோனி, கோலி , யூசுப் பதான் (16), ஜடோஜா (16) ஆகியோர் உள்ளனர்.
ஆட்ட நாயகனை விருது வென்ற பின்பு பேசிய எம்.எஸ். தோனி, "எனக்கு ஏன் விருதை வழங்குகிறார்கள் என்றுதான் நினைத்தேன். நூர் அகமது மிகவும் சிறப்பாக பந்து வீசினார்" என்று தெரிவித்தார்.