search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dinesh Chandimal"

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது.
    • ஒஷாடா பெர்னாண்டோ 50 ரன்னும், தினேஷ் சண்டிமால் 80 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கல்லே:

    பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கருணரத்னே ஆகியோர் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 92 ஆக இருந்தபோது, பொறுப்புடன் ஆடிய பெர்னாண்டோ அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 3 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கருணரத்னே 40 ரன்னில் அவுட்டானார்.

    தொடர்ந்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100வது டெஸ்ட் போட்டி ஆகும். அவரும் சண்டிமாலும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்த நிலையில், மேத்யூஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரை சதமடித்த சண்டிமால் 80 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தன்ஞ்செய டி சில்வா 33 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெலா 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 2விக்கெட் வீழ்த்தினார்.

    பல்லேகெலேயில் 14-ந்தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி கேப்டன் சண்டிமல் காயத்தால் இடம்பெறவில்லை. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது போட்டி பல்லேகெலேயில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் செய்யும்போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் 2-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இரண்டு வாரம் என்பதால் 23-ந்தேதி கொழும்பில் தொடங்கும் 3-வது போட்டியிலும் பங்கேற்பாரா? என்ற சந்தேகமே.


    சரித் அசாலங்கா

    சண்டிமலுக்குப் பதிலாக புதுமுக வீரர் சரித் அசாலங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ரோஷன் சில்வாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்திருந்த தனுஷ்கா குணதிலகா முதுகு வலி காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை தொடங்குகிறது. இந்த தொடருக்காக இலங்கை அணியில் தனுஷ்கா குணதிலகா இடம் பிடித்திருந்தார். இவர் முகுது வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.



    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்த அவர் உடனடியாக இலங்கை திரும்புகிறார். அவருக்குப் பதிலாக ஷெஹன் ஜெயசூர்யா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியின் முன்னணி வீரரான தினேஷ் சண்டிமல் கைவிரல் முறிவு காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் தினேஷ் சண்டிமலுக்கு இடம் கிடைக்கவில்லை. #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வருகிற சனிக்கிழமை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    இதற்கான இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேச அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன தினேஷ் சண்டிமலுக்கு இடம் கிடைக்கவில்லை.

    உள்ளூரில் நடைபெற்ற டி20 தொடரில் விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், இந்த காயம் குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என்பதால் அவர் அணியில் இடம் பெறவில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக நிரோஷன் டிக்வெல்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மேத்யூஸ், 2. குசால் பேரேரா, 3. குசால் மெண்டிஸ், 4. உபுல் தரங்கா, 5. தனுஷ்கா குணதிலகா, 6. திசாரா பெரேரா, 7. தசுன் ஷனகா, 8. தனஞ்ஜெயா டி சில்வா, 9. அகிலா தனஞ்ஜெயா, 10. தில்ருவான் பெரேரா, 11. அமிலா அபோன்சோ, 12. கசுன் ரஜிதா, 13. சுரங்கா லக்மல், 14. துஷ்மந்தா சமீரா, 15. லசித் மலிங்கா, 16. நிரோஷன் டிக்வெல்லா.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்டில் களம் இறங்க மறுத்ததால் ஐசிசி தடைவிதித்தது. இந்த தடை முடிந்து சண்டிமல் களம் இறங்க உள்ளார். #Chandimal
    இலங்கை அணி ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. 2-வது டெஸ்டின்போது இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பந்தை மாற்ற வேண்டும் என்று நடுவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை எதிர்த்து சண்டிமல் தனது அணியுடன் களம் இறங்க மறுத்துவிட்டார். இதனால் சுமார் ஒன்றரை மணி நேர ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி சண்டிமலுக்கு மூன்று டெஸ்ட், நான்கு ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிதித்தது.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டெஸ்ட் மற்றும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட், நான்கு ஒருநாள் போட்டியில் சண்டிமல் பங்கேற்கவில்லை. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான நேற்றைய 4-வது போட்டியுடன் சண்டிமல் தடை முடிவடைந்தது.



    இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் ஐந்தாவது போட்டியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டிக்கான இலங்கைய அணியில் இடம்பிடித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20-க்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மேத்யூஸ், 2. தசுன் ஷனகா, 3. குசால் பேரேரா, 4. தனஞ்ஜெயா டி சில்வா, 5. உபுல் தரங்கா, 6. குசால் மெண்டிஸ், 7. திசாரா பெரேரா, 8. ஷெஹன் ஜெயசூர்யா, 9. ஷெஹன் மதுஷங்கா, 10. ரஹிரு குமாரா, 11. தினேஷ் சண்டிமல். 12. அகிலா தனஞ்ஜெயா, 13. ஜெஃப்ரே வாண்டர்சே, 14. பினுரு பெர்னாண்டோ.
    இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. #Chandimal
    இலங்கை அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை கேப்டன் சண்டிமல் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதனால் மாற்றுப் பந்தை பயன்படுத்த நடுவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்து இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, அணி மானேஜர் அசாங்கா குருசிங்கா பீல்டிங் செய்ய மறுத்தனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேர ஆட்ட நேரம் பாதித்தது.



    இதுகுறித்து புகார் செய்யப்பட்டது. இதை எதிர்த்து சண்டிமல் அப்பீல் செய்திருந்தார். இந்த அப்பீல் விசாரணை முடிவில் மூன்று பேருக்கும் இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சண்டிமல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரக்கெட் தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் விளையாட முடியாது.
    2-வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் சண்டிமல். #WIvSL #chandimal
    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

    செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்த டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையின் முடிவில் சண்டிமல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக பகல்-இரவு ஆட்டமாக நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.



    இந்நிலையில் இலங்கை கேப்டன் சண்டிமல் ஐசிசி எடுத்துள்ள தடைஉத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். சண்டிமல் மேல்முறையீட்டை விசாரிக்க ஐசிசி சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும். இவர் விசாரணை நடத்தி இறுதி தீர்ப்பு வழங்குவார். இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்குகிறது. #WIvSL #SLvWI #DineshChandimal #BallTampering
    வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய இலங்கை அணி கேப்டன் தினேஷ் சந்திமல் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #WIvSL #SLvWI #DineshChandimal #BallTampering

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.

    இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி கேப்டன் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். 



    விசாரணையின் முடிவில் சந்திமல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக விளையாடப்பட உள்ளது.

    மேலும் போட்டிக்கான மொத்த ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே தென்னாப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #WIvSL #SLvWI #DineshChandimal #BallTampering
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை கேப்டன் சன்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி. கூறியுள்ளது. #ICC #DineshChandimal
    செயின்ட்லூசியா:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை கேப்டன் சன்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி. கூறியுள்ளது. இந்த பிரச்சினையால் இலங்கை அணியினர் களம் இறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.



    இந்த நிலையில் இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை வெடித்தது. 2-வது நாள் போட்டி தொடர்பான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த நடுவர்கள் அலீம் தரும், இயான் கவுல்டும் பந்தை மர்மபொருளால் தேய்த்து இருப்பதற்கான அடையாளத்தை கண்டுபிடித்தனர்.

    இந்த தகவலை இலங்கை அணியினருக்கு தெரிவித்த நடுவர்கள் 3-வது நாள் போட்டிக்கு முன்பாக வேறு பந்து பயன்படுத்தப்படும் என்று கூறினர். இதனால் அதிருப்தி அடைந்த இலங்கை வீரர்கள் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் களம் இறங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நடுவர்கள் மைதானத்திற்கு வந்த போது கூட, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறையிலேயே அமர்ந்து இருந்தனர். போட்டி நடுவர் ஸ்ரீநாத், இலங்கை பயிற்சியாளர் ஹதுருசிங்கா, அணி மேலாளர் அசன்கா குருசிங்கா, கேப்டன் சன்டிமால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்ரீநாத்துடன் அவர்கள் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர்.

    ஒரு வழியாக 2 மணி நேரத்திற்கு பிறகு தங்களது கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை வீரர்கள் தொடர்ந்து விளையாட சம்மதம் தெரிவித்தனர். ஆனாலும் பந்தை சேதப்படுத்தியதற்காக இலங்கை அணி மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக வெஸ்ட் இண்டீசுக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது.

    இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘எங்களது வீரர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று அணி நிர்வாகம் உறுதிப்பட மறுத்துள்ளது. ஆதாரமில்லாத எந்த குற்றச்சாட்டையும் கூறினால் வீரர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 300 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.

    இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பதிவில், இலங்கை கேப்டன் சன்டிமால் மீது ஐ.சி.சி. நடத்தை விதிமுறையை மீறி பந்தின் தன்மையை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே போட்டியின் முடிவில் சன்டிமாலுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் ஆகியோர் ஏற்கனவே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மாட்டிக்கொண்டு நடவடிக்கைக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.  #ICC #DineshChandimal #tamilnews 
    ×