என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director"

    ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு அந்த ஒரு சில படங்களுக்கு பிறகு யாருமே நடிக்க வாய்ப்பு தரவில்லையாம். சரி வாய்ப்பு கிடைக்க சமூக வலைதளத்தில் ஒரு எண்ட்ரிய போடுவோம் என நினைத்த நடிகை கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி பட்டைய கிளப்பினாராம்.

    இந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்த இயக்குனர் ஒருவர் சரி போனாபோகட்டுமே என்று நடிகைக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாராம். இந்த படத்தில் நடித்து முடித்த நடிகைக்கு வேறு படங்கள் கைவசம் இல்லாததால் நேர்காணல்களில் இனி நடிக்கமாட்டேன் என்று கூறிவருகிறாராம். இதற்கு பலரும் நடிகை வாய்ப்பு கிடைக்காததால் இப்படி சொல்கிறார் என்கின்றனர்.

    பல படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு வயது ஏற ஆரம்பித்தவுடன் மார்க்கெட் குறைய ஆரம்பித்துவிட்டதாம். பிரபலமாகிவிட்டோமே அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என நினைத்த நடிகை சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சம்பாரித்து வந்தாராம். ஆனாலும் அவர் நினைத்த பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை என்றதும் ஆசை வார்த்தைகளை கூறி இயக்குனரை வளைத்துபோட்டு ஜாலியாக சுற்றி வருகிறாராம்.

    அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பல படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறாராம். நடிகையின் மீது ஆசை கொண்ட இயக்குனர்கள் பலர் அட்ஜஸ்ட்மென்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்டு வந்தார்களாம். இதற்கு மறுத்த நடிகை ஒரு நாள் காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் வேறு பக்கமாக திரும்பியதாம். இதனால் பயந்து போன நடிகை என்ன நடக்குமோ என்று நினைக்கும் போது ஒருவர் திடீரென காரின் முன் பாய்ந்து காரை நிறுத்தினாராம். உடனே கீழே இறங்கிய நடிகை அவர்களை பளார் என்று கண்ணத்தில் ஒன்று வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.

    • சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அவர் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    தொடர்ந்து அவர் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த உணவுப் பொருட்களின் தரம், பயன்படுத்தப்படும் காய்கறி அளவு, இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த உதவி இயக்குனர் அங்கிருந்த சமையல் பணியாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அவர் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த உணவு வகைகளையும் ருசி பார்த்தார். குழந்தைகளுக்காக இந்த உணவினை மிகுந்த கவனத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்திட வேண்டுமென உத்தரவிட்டார்.

    இந்த திடீர் ஆய்வின்போது பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம், பேரூராட்சி தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் முரளி மற்றும் முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    பிரபல இயக்குனர் முன்னணி நடிகரின் படத்தை இயக்கி வந்தாராம். இந்த படத்தில் கவர்ச்சி நடிகை கதாநாயகியாக கமிட்டானாராம். படப்பிடிப்புக்கு நடுவே கதாநாயகிக்கு ரூட் விட்ட இயக்குனர் அவர் மீது ஆசை கொண்டாராம். ஆனால் அதை நேராக சொல்ல தைரியம் இல்லாமல் தன் செயல்களில் காட்டி வந்தாராம்.

    ஒரு நாள் இயக்குனரும், கதாநாயகியும் பட விழாவில் கலந்து கொண்டிருக்கும்போது அனைவருக்கும் முன்னாள் இயக்குனர், கதாநாயகிக்கு பசக் என்று முத்தம் கொடுத்துவிட்டாராம். இதனால் நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாராம்.

    • தாரமங்கலம் நகராட்சியில் நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • அதனை தொடர்ந்து புதிய நகராட்சி அலுவலக கட்டிடம். எரிவாயு தகனமேடை.உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து புதிய நகராட்சி அலுவலக கட்டிடம். எரிவாயு தகனமேடை.உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது மண்டல இயக்குனர் பூங்கொடி அருமைக்கன்.மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன்.தாரமங்கலம் நகராட்சி ஆணையாளர் சேம் கிங்ஸ்டன். பொறியாளர் பிரேமா.மேட்டூர் நகராட்சி ஆணையாளர் நித்யா.நகராட்சி பொறியாளர் ஹரிகரன். குமாரபாளையம் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன். எடப்பாடி நகராட்சி பொறியாளர் முருகேசன். ராசிபுரம் பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

    சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை ஒரு சில படங்களுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினாராம். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறாராம். இதனால் ரசிகர்கள் பலர் நடிகையிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அது சர்ச்சையாகியும் உள்ளதாம்.

    இப்படி பரபரப்பாக சுற்றும் நடிகை ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றாராம். அங்கு இயக்குனர் நடிகையை பார்த்ததும் படுக்கையறைக்கு அழைக்கவே பயந்து போன நடிகை விட்டா போதும் சாமி என்று அங்கிருந்து தலைத்தெறிக்க ஓடிவிட்டாராம். 

    சமூக அக்கறை கொண்ட பிரபல இயக்குனர் தன் ஒரு சில படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாராம். இவரின் படங்கள் பல விருதுகளையும் குவித்ததாம். இவ்வாறு திரையுலகில் புகழை தன் வசம் கொண்டுள்ள இயக்குனர் தன் படத்தில் நடிக்க வந்த நடிகையை வலுக்கட்டாயமாக படுக்கையறைக்கு அழைத்தாராம்.

    நடிகை மறுத்தும் வந்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாராம். இதனால் பயந்து போன நடிகை படப்பிடிப்புக்கு வந்த ஒரே வாரத்தில் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகை இனி எந்த படத்திலும் நடிக்க போவதில்லை என்றும் கூறிவிட்டாராம்.

    • பணத்தை திரும்ப செலுத்தாததால், துருவ நட்சத்திரம் படம் இன்று வெளியாகவில்லை.
    • இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. பல வருடங்களாக சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில், இப்படம் இன்று ரிலீஸாக இருந்தது.

    ஆனால், கவுதம் மேனனுக்கு எதிரான வழக்கில் ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.2 கோடியை இன்று காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்காவிட்டால் படம் வெளியாக அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பணத்தை திரும்ப செலுத்தாததால், துருவ நட்சத்திரம் படம் இன்று வெளியாகவில்லை.

    இதனால், இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக இயக்குனர் கவுதன் மேனன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த விளக்கத்தில், " பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் இன்று படத்தை வெளியிடவில்லை.

    ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணம் திங்கள் அல்லது புதன்கிழமைகளில் திரும்ப செலுத்தப்படும்.

    பணத்தை செலுத்திய பிறகே துருவ நட்சத்திரம் படம் வெளியிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இயக்குனர் பார்த்திபன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
    • ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாதபோது, பேஷன் ஷோ எதற்கு?

    'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள் மற்றும் சின்னத்திரை பாலா மற்றும் பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    இவர்களை போன்று இயக்குனர் பார்த்திபன் சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அவர் அதுகுறித்த விடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். த(க)ண்ணீர் தேசம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.



    மேலும், இயக்குனர் பார்த்திபன் இதுகுறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பாபையிலும்(பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்)இதே நிலை.

    தனி மனிதனாகவும்,தமிழ்நாடாகவும்,வல்லரசு(?) நாடாகவும்,இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத)நாடு! தண்ணீர் இருக்கிறதா?என ஆராய,சந்திரனுக்கு சந்திரயானும்,செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்?ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே?

    அதிவேக புல்லட் ரயில்,அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை urine போக! அடிப்படை தேவைகள்,வேலை வாய்ப்புகள்,சாலை வசதிகள்,மாசற்ற காற்று,இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் இடரற்ற சக்தி,ஏழை மக்களும் எதற்கும் கையேந்தாமல் கவுரவமாக வாழும் உயர்நிலை இவைகளை வழங்க,வழங்கும் வரி பணத்தையெல்லாம் பயன்படுத்திவிட்டு பின்பு வுடலாம் ராக்கெட்டு! ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்ட போது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம்.ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலையில் சுதந்திர தின மூவர்ண பல்லி மிட்டாய்களும்,குடியரசுதின பைக் சாகச கொண்டாட்ட செலவினங்கள் எதற்கு?



    ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம் தொலைந்தது. நானோ,kpy பாலாவோ,அறந்தாங்கி நிஷாவோ இன்னும் சிலரின் உண(ர்)வு பொட்டலங்கள் செய்திக்கு செய்தி சேர்க்குமே தவிற, அடுத்த வேளை அடுப்புக்கு நெருப்பும்,அதில் பொங்க அரிசியும் சேர்க்காது. சமீபத்தில் கீர்த்தனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்… இன்னும் 50 ஆண்டுகளில் என் காலத்திற்கு பிறகும் இந்தியாவிலேயே பறக்கும் கார்கள்(இப்போது மிதக்கும் கார்கள்) போன்ற அதியற்புத வளர்ச்சியை காணலாமென.

    அதை விட… இந்திய வரைபடத்தில், வறுமை கோடும் அதனடியில் சில எலும்புக் கூடும் வாழும் நிலை மாற வேண்டும். (நான் குற்றஞ்சுமத்துவது அரசியல்வாதிகளை அல்ல.பொருளாதாரம் சார்ந்த அரசியலை.அதை சீர் செய்ய தொலைநோக்குள்ள தன்னலமற்றவர்கள் தகுதி பெற வேண்டும்!) இது ஒரு தனிமனித சிந்தனை எனவே தவறு இருக்கலாம்.இருப்பின் பொருட்படுத்தாதீர்கள். இன்றும் இயன்றதைச் செய்து இடர் குறைப்போம்!" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை விமர்சித்து பலரும் பதிவிட்டு வந்தனர்.

    இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் பார்த்திபன் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தேர்ந்தெடுக்கும் உடைகளில் ஒருவரது நாகரீகமும், பயன்படுத்தும் வார்த்தைகளில் அவர்களது தரமும் விளங்கும். என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அது தனிநபர் தாக்குதலோ,ஒரு கட்சி சார்ந்த சாடலோ அல்ல.சுதந்திர இந்தியாவை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. இன்றைய நிலைக்கு இதுவரை யாவும் காரணம். இது மாற… இனியொரு விதி செய்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • விஜயகாந்திற்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • இவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    90-களிம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.


    நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி " என்று பதிவிட்டுள்ளார்.

    • ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
    • இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

    சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் விதமாக (Talent Hunt Show Launch) 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' என்ற நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள குளோப் நெக்சஸ் நிறுவனம், அவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிப்பதோடு, திரைப்பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து அங்கீகரிக்க உள்ளது.

    'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' போட்டியில் பங்கேற்க, இதற்கான இணையதளத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வீடியோக்களில் சிறந்த திறமைசாலிகளை தேர்வு செய்ய திரை பிரபலங்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.


    ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்குவதோடு, அவர் திறமைக்கு ஏற்ப திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். அதேபோல் இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், மூன்றாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.2 லட்சமும், நான்காவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் மீனாட்சி அருண், நிகழ்ச்சி மேலாளர் பவித்ரா, பொது மேலாளர் தேவிபிரியா ஸ்டீபன், மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பிரபல பாடகரும், இசையமைப்பாளரும், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பவருமான அந்தோணி தாசன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.


    இதில் அந்தோணி தாசன் பேசியதாவது, "சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன், ஒரு ரசிகனாக கொண்டாடியிருக்கிறேன். இன்று நாட்டுப்புற கலையில் இருந்து வளர்ந்து, மக்களோட ஆசீர்வாதம், தெய்வத்தின் அருள், உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்கத்தால் இன்று ஒரு இயக்குனராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் பயணிக்கும் பாதை சரியானது என்று நான் கருதுகிறேன். கூத்து கலைஞராக மக்களை நேரடியாக மகிழ்வித்து இருக்கிறேன். ஒரு பாடகனாகவும், இசையமைப்பாளராகவும் மக்களை மகிழ்வித்திருக்கிறேன். இப்போது நான் எடுத்திருக்கும் இயக்குனர் அவதாரத்தையும் சிறப்பாக செய்வேன் என்று நான் வணங்கும் கடவுள் அருளால் நம்புகிறேன்.

    குளோப் நெக்சஸின் 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' நிகழ்ச்சி திறமைசாலிகளுக்கான மிகப்பெரிய வாய்ப்பு. விசில் சத்தம் மற்றும் கைதட்டல் தனக்கும் கிடைக்காதா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை போக்குகின்ற ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைய இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நான் இயக்கும் படத்தில் வாய்ப்பு வழங்குவது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் இயக்கும் படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் ஏப்ரல் 14 -ஆம் தேதி நடைபெறும் 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' இறுதிப் போட்டியில் அறிவிக்கப்படும், நன்றி என்றார்.

    ×