என் மலர்
முகப்பு » Disappearence
நீங்கள் தேடியது "Disappearence"
- பாளை மகாராஜாநகர் செய்யது காலனியை சேர்ந்தவர் பால்வண்ணன். இவரது மனைவி ராமு (வயது 77).
- பழக்கடைக்கு சென்று ஜூஸ் குடித்துவிட்டு பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றுள்ளார்.
நெல்லை:
பாளை மகாராஜாநகர் செய்யது காலனியை சேர்ந்தவர் பால்வண்ணன். இவரது மனைவி ராமு (வயது 77). இவர் நேற்று கிருஷ்ணாபுரம் சுகன்யாநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வண்ணார்பேட்டை வந்துள்ளார்.
பின்னர் அருகில் இருந்த பழக்கடைக்கு சென்று ஜூஸ் குடித்துவிட்டு பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
X