என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Discharge"

    • நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு குடிசைவீடு தீப்பிடித்து எரிந்தது.
    • தீ மளமளவென கூரை முழுவதும் பரவியதால் வீட்டில் வைத்திருந்த பணம், துணிகள் பொருள்கள் எரிந்து சாம்பலானது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அகர கீரங்குடி ஊராட்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் கிருபாகரன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.

    தூங்கிக்கொண்டிருந்த கிருபாகரன் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    தீ மளமளவென எரிந்து கூரை முழுவதும் எரிந்ததால் உயிர்சேதம் தவிர்த்து, வீட்டில் வைத்திருந்த பணம், துணிகள் பொருள்கள் எரிந்து சாம்பலானது.

    இத்தகவலை அறிந்த மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

    மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் முத்துசாமி, தாசில்தார் சார்பாக அரசு வழங்கும் முதல் கட்ட நிவாரணமாக ரூ. 5 ஆயிரமும் அரிசி, பாய், போர்வை, மண்ணை வழங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வீட்டுப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். #NepalPM #KPSharmaOli
    காத்மாண்டு:

    நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர் மருத்துவ கவனிப்புக்கு பிறகு உடல்நிலை தேறியது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாலும், இருதயத்தில் நோய்த் தொற்று காரணமாகவும் சமீபகாலமாக அவர் கடும் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில வாரங்களாக அவர் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
     
    இதற்கிடையே, பிரதமர் கே.பி.ஒலியின் உடல்நிலை மோசமடைந்தது. சளி இருமல் அதிகரித்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதால் உடனே மகராஜ்கஞ்ச் நகரில் உள்ள மன்மோகன் கார்டியோ வாஸ்குலார் மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. ஒலியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் பரிந்துரையின்படி ஒலி நேற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

    இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், சர்மா ஒலியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அவர் இரண்டொரு நாட்களுக்கு பிறகு அவர் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளனர். #NepalPM #KPSharmaOli
    குட்கா ஊழல் வழக்கில் கைதான சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #GutkhaScam #CBI
    சென்னை:

    தமிழகத்தின் மிக முக்கிய ஊழல் வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்படும் குட்கா வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் உட்பட பல முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் இந்த வழக்கு மிகத்தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப்படும் இந்த வழக்கில் மாதவராவ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கடந்த மாதம் சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்.



    இதையடுத்து, சமீபத்தில் ஜாமீன் கோரி சிவக்குமார் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு குறித்து சிபிஐ தனது பதிலை சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. அதில் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், சிபிஐ தரப்பு பதிலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
    மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், சிகிச்சை முடிந்து இன்று பாட்னா திரும்பினார். #LaluPrasadYadav
    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்சி காலத்தில் பீகாரில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் பல கோடி ஊழல் செய்துள்ளார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு அவருக்கு 5 வழக்குகளில் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே லாலு பிரசாத் யாதவுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மகன் திருமணத்துக்காக 3 மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மகனது திருமணம் முடிந்ததும் கடந்த திங்கட்கிழமை அவர் மும்பை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது இந்த ஜாமீனை மருத்துவ காரணங்களுக்காக மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று லாலு சார்பில் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு லாலு பிரசாத்துக்கு ஜாமீன் நீடிப்பு வழங்க முடியாது என்று மறுத்ததுடன், வரும் 30-ம் தேதி அவர் கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்நிலையில், மும்பை ஏசியன் ஹார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், இன்று சிகிச்சை முடிந்து விமானம் மூலம் பாட்னாவுக்கு திரும்பினார். #LaluPrasadYadav
    ×