search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disconnected"

    • நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன.
    • வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன. இவற்றின் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 27 கோடி வருவாய் கிடைக்கிறது.

    இதனைக்கொண்டு நகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம், மின் இணைப்பு கட்டணம் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி, தொழில்வரி வசூல் செய்யப்பட்டு வருகின்றன.

    இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில் இதுவரை 35 சதவீத தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 65 சதவீத தொகை நிலுவையாக உள்ளது.

    பொதுமக்களில் பெரும்பாலானோர் வரி மற்றும் கட்டணங்களை மார்ச் மாதம் செலுத்த வேண்டும் என தவறுதலாக கருதி வருகிறார்கள். தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் திருந்திய சட்டத்தின் படி முதல் அரையாண்டுக்கான வரி இனங்கள் ஏப்ரல் 30ந் தேதிக்கு முன்னரும், இரண்டாம் அரையாண்டிற்கான தொகையினை அக்டோபர் மாதம் 31ந் தேதிக்கு உள்ளும் செலுத்தி இருக்க வேண்டும்.

    20232024ம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு உரிய தொகையினை முழுவதுமாக கடந்த 31ந் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். எனவே தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும் வருகிற 30ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்தி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அதிகாரி எச்சரிக்கை
    • நிலுவைத்தொகை, மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை கிராம கோட்டம் (தெற்கு) செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின்துறை தீவிர மின் துண்டிப்பு மேற்கொள்ள இருப்பதால் கிராமம் (தெற்கு) கோட்டம் அலுவலகத்துக்கு உட்பட்ட அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோவில், வாதானூர், கரியமாணிக்கம், கரையாம்புத்தூர் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் நிலுவைத்தொகை, மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க வேண்டும். நிலுவைத்தொகை முழுமையாக செலுத்திய பிறகே மின் இணைப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கயம் நகராட்சியில் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது
    • நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சியில் 2020 -ம் நிதியாண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கொடுத்த கால அவகாசத்தைத் தாண்டியும் இன்னும் நிலுவை தொகை செலுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, காங்கயம் நகரில் உடையாா் காலனி, பொன்னி நகா் உள்ளிட்ட பகுதிகளில் 7 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா்க் குழாய் துண்டிப்பு நடவடிக்கையைத் தவிா்த்துக் கொள்ளவும். குடிநீா்க் கட்டணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா். குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால், கடந்த ஒரு வாரத்தில் காங்கயம் நகரில் 40 வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கயம் நகராட்சி வாடகைதாரர், குத்தகைதாரர் நகராட்சி வருவாய் ஆய்வாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட குத்தகை, வாடகை கடைக்காரராகிய நாங்கள் மாத மாதம் வாடகை செலுத்தி வரும் நிலையில், இப்போது வாடகை தாமதமானால் மாதம் 10-ந் தேதிக்குள் கட்டவில்லை எனில் தண்ட வட்டியாக 18 சதவீதம் வசூலிப்பதாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இந்த அறிக்கையின்படி எங்களால் வாடகை மட்டுமே செலுத்த முடியும் நிலையில் நாங்கள் அனைவரும் உள்ளோம். இந்நிலையில் 18 சதவீதம் தண்ட வட்டியை எங்களால் கட்ட இயலாது. எங்களுக்கு வாடகை செலுத்த 3 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது.எனவே பழைய முறையை பின்பற்றி வாடகை வசூலிக்க வேண்டும். புதிய உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சட்டவிரோத கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர்-மின் இணைப்பை துண்டித்து, அதை பிறருக்கு வழங்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt #DrinkingWater
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம், சென்னீர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் உள்பட சிலர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தங்களின் நிலங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, ‘மனுதாரர்களின் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு பட்டா கேட்பதால், அவர்களது கோரிக்கையை நிராகரித்து கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கில் ஐகோர்ட்டு தடை எதுவும் விதிக்காத பட்சத்தில், தங்கள் முன்புள்ள கோரிக்கை புகார் மனுவை அதிகாரிகள், வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி முடித்து வைக்கக்கூடாது.

    ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். விரைவில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது. எனவே, இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கும், சட்டவிரோத கட்டிடங்களுக்கும் வழங்கப்படும் குடிநீர் இணைப்பை துண்டித்து, அந்த குடிநீரை வேறு நபர்களுக்கு வழங்கலாம். இந்த வழக்கை முடித்துவைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    ×