search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dismiss"

    சுத்தமான பொது கழிப்பறை மனிதர்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SupremeCourt #PIL
    புதுடெல்லி:

    பல்வேறு வேலைகள் காரணமாக நாட்டின் முக்கியமான நகரங்களுக்கு வரும் பலர், சுத்தமின்மை காரணமாக பொது கழிப்பறைக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  

    இந்நிலையில், வழக்கறிஞர் அன்ஷுல் சவுத்ரி என்பவர், பொது கழிப்பறை அடிப்படை உரிமை எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தொடர்ந்தார். அந்த மனுவில், சுத்தமான பொது கழிப்பறை மனிதர்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். 

    இதை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுதாரரை கண்டித்ததுடன், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இதுபோன்ற பொதுநல வழக்குகளை போடவேண்டாம் எனவும் மனுதாரர்ருக்கு அறிவுறுத்தியது. #SupremeCourt #PIL
    கும்பகோணத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மத்திய- மாநில அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ 2500 வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு அரசு அறிவித்தபடி கடனை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி டெல்டாவை விவசாய பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும், டெல்டாவை பாலைவனமாக்கும் எண்ணை நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வர்ணகுமார் தலைமை தாங்கினார்.

    மாநில செயலாளர் தனபால் மற்றும் மாவட்ட தலைவர் பரசுராமன் உள்பட 50-க் கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, காய்ந்து கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். தென்பெண்ணை-பாலாறு நதிகளை இணைப்பு பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு விவசாயிகள் சென்றனர். கலெக்டர் ராமனை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

    ×