search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dispute with wife"

    புதுவை அருகே மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 44). இவரது மனைவி ராஜேஸ்வரி (39).இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    ராஜேந்திரன் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்தது. இதை கண்டிப்பதால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சில நாட்களுக்கு முன்பு இதேபோல் தகராறு ஏற்பட்டதால் மனைவியுடன் கோபித்து கொண்டு ராஜேந்திரன் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கேயே சில நாட்கள் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதுகுடித்து விட்டு கோவிந்தசாலையில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போதும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அவரை வீட்டுக்குள் விட மறுத்தனர்.

    பின்னர் சமாதானம் அடைந்து வீட்டுக்குள் அனுமதித்தனர். அங்கு ஒரு அறையில் அவர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவர் மனைவியின் சேலையால் தூக்கு மாட்டி தொங்கினார்.

    சத்தம் கேட்டு உள்ளே சென்ற மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை தூக்கில் இருந்து இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இறந்து விட்டார்.

    இதுகுறித்து உருளையன் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழியை அடுத்த தாழக்குடி பார்வதி புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியபிள்ளை என்ற சண்முகம் (வயது 55) தொழிலாளி.

    இவருக்கு மனைவி சிதம்பரம் மற்றும் பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் உள்ளனர். கணவன் - மனைவி மட்டும் இங்கு வசித்து வருகின்றனர். சண்முகம் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை மனைவி கண்டித்தார். மேலும் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் சண்முகம் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். 

    இந்த நிலையில் மனைவி வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது சண்முகம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வீடு திரும்பிய மனைவி இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.        
    ×