என் மலர்
நீங்கள் தேடியது "Dmk activist meeting"
- சங்கரன்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- திராவிட மாடல் பாசறை கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், துணைச் செயலாளர்கள் ராஜதுரை, மனோகரன், புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
இதில் தி.மு.க. தலைவராக மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வடக்கு மாவட்டம் சார்பில் நன்றி தெரிவிப்பது எனவும், 15-ம் கழகப் பொதுத் தேர்தலில் வடக்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சருக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், வாக்குச்சாவடி முகவர்கள் அமைக்கும் பணியை (பிஎல் ஏ 2) சிறப்பாக செய்ய வேண்டும் எனவும், நகரம், ஒன்றியம், பேரூர் பகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியை துரித படுத்த வேண்டும் எனவும், நவம்பர் 27-ல் பிறந்தநாள் காணும் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும், ஒன்றிய, நகர, பேரூர், கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டங்களை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ள மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான கூட்டங்களை தென்காசி வடக்கு மாவட்டத்தில் சிறப்பாக நடத்த வேண்டும் எனவும், திராவிட மாடல் பாசறை கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும், தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்காசி வடக்கு மாவட்ட கழகத்தின் அனைத்து பணிகளையும் சிறப்பாக நடைபெற அனைத்து நிர்வாகிகளும் தீவிர முயற்சியோடு களப்பணி ஆற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, மதிமாரிமுத்து, ராமச்சந்திரன், வெற்றிவிஜயன், கிறிஸ்டோபர், சேர்மதுரை, முத்தையாபாண்டியன், பூசைபாண்டியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, தேவதாஸ், மாரிச்சாமி, பராசக்தி, பா.மாரிச்சாமி, சாகுல்ஹமீது, வேல்சாமிபாண்டியன், நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் திருவேங்கடம் மாரிமுத்து, ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபி பாலசுப்பிரமணியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, ராயகிரி சேர்மன் இந்திரா விவேகானந்தன், சிவகிரி சேர்மன் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.