search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK administrators"

    • தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சரிடம் வாழ்த்து தெரிவித்தனர்.
    • தி.மு.க. அயலக அணி சிவகங்கை மாவட்ட தலைவராக ஆர்விஎஸ்.சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பத்தூர்

    தி.மு.க. அயலக அணி சிவகங்கை மாவட்ட தலைவராக ஆர்விஎஸ்.சரவணனும், துணைத் தலைவராக ஜான்பீட்டரும், அமைப்பாளராக அஜித் குமார், துணை அமைப்பா ளர்களாக நெடுஞ்செழியன், புகழேந்தி, சதீஷ்குமார், சிவசுப்பிரமணியன், ராஜ்குரு மற்றும் சீமான் சன் சுப்பையா ஆகியோரை பொதுச் செயலாளர் நியமனம் செய்துள்ளார்.

    நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் திருப்பத்தூரில் கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். புதிய நிர்வாகிகள் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர்.

    • தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
    • கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் புறப்பட்டு சென்றார். வழியில் பாளை கே.டி.சி.நகரில் அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    தி.மு.க. மாநில இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் புறப்பட்டு சென்றார். வழியில் பாளை கே.டி.சி.நகரில் அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் சுதா மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, கோபி என்ற நமச்சிவாயம்,

    கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, இளைஞரணி ஆறுமுகராஜா, தி.மு.க. இளைஞரணி செயலளர் வில்சன் மணிதுரை, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பாளை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியன், பொரு ளாளர் வண்ணை சேகர், நிர்வாகிகள் மணிகண்டன், மேகை செல்வன், சிவா, வினோத், சங்கர், மைதீன், வக்கீல் அருள் மாணிக்கம், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், ரவீந்தர், உலகநாதன், கிட்டு மற்றும் மணி, மாநகர இளை ஞரணி துணை அமைப்பாளர் மாயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக வண்ணாரப்பேட்டை விருந்தினர் மாளிகையில் இருந்து இன்று காலை புறப்பட்டு வந்தார்.
    • விவசாயம், இல்லம் தேடிக் கல்வி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், நான் முதல்வன் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு இலவச சிற்றுண்டி, ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையிலான பேனர்களை 11 மேடைகளாக அமைக்கப்பட்டு இடம்பெற்று இருந்தன.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக வண்ணாரப்பேட்டை விருந்தினர் மாளிகையில் இருந்து இன்று காலை புறப்பட்டு வந்தார்.

    அவருக்கு தி.மு.க.வினர் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மற்றும் தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் ஆகியோரது ஏற்பாட்டில் பாளை நீதிமன்றம் அருகே உள்ள ஒரு பள்ளி முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களை விளக்கி மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    விவசாயம், இல்லம் தேடிக் கல்வி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், நான் முதல்வன் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு இலவச சிற்றுண்டி, ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையிலான பேனர்களை 11 மேடைகளாக அமைக்கப்பட்டு இடம்பெற்று இருந்தன.

    அவற்றை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், மாநகராட்சி கவுன்சிலர் கோட்டையப்பன் மற்றும் நிர்வாகிகள் ஆ.க.மணி, பொன்னையா பாண்டியன், பகுதி செயலாளர் கோபி என்ற நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தும் முறை மற்றும் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு தலைமை கழகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற மகத்தான மக்கள் பயணம் கடந்த 9-ந்தேதி அன்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினால் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

    இக்கூட்டங்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை மட்டுமல்ல, கழகத்தின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உணர்த்துகிறது. இது ஒரு பக்கம் பெருமையையும், இன்னொரு பக்கம் கழகத் தோழர்களாகிய நமக்கு பொறுப்பு கூடி வருகிறது என்பதையும் உணர வேண்டும்.

    இந்த நல்வாய்ப்பை கழக நிர்வாகிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தலைமைக் கழகத்தின் வேண்டுகோள்.

    கழகத் தோழர்கள், நிர்வாகிகள் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் ஊராட்சிகளுக்கு செல்லும் போது முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது:-

    * ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, அந்த ஊராட்சிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஊராட்சி சபைக் கூட்டங்களுக்கு மக்களை இல்லந்தோறும் சென்று அழைத்திட வேண்டும்.

    அச்சமயம், தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டறிக்கையை ஊராட்சிகளில் உள்ள அனைவருக்கும் வழங்கிட வேண்டும். கூட்டத்தில் பங்கெடுக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கூட இந்த துண்டறிக்கை போய் சேர வேண்டும்.

    * கழகத் தோழர்கள், நிர்வாகிகள் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் அனைவரும் ஊராட்சி சபைக் கூட்டத்திற்கு செல்லும்போது, அனைத்து ஊராட்சிகளிலும் நிச்சயமாக இருவண்ணக் கொடியை புது கம்பத்தில் பட்டொளி வீசி பறக்க வைத்திட, மாவட்ட செயலாளர்களிடம் கலந்து பேசி ஏற்பாடு செய்திட வேண்டும். 12,617 ஊராட்சிகளிலும், இந்த கூட்டங்களை முடிக்கும் போது ஊராட்சி சபை கல்வெட்டுடன் அந்த கொடி கம்பங்கள் தமிழகம் முழுவதும் இருந்திட வேண்டும்.

    * கழகத் தோழர்கள், நிர்வாகிகள் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் அனைவரும் ஊராட்சி சபைக் கூட்டங்களுக்கு செல்லும் முன்பு ஊராட்சி செயலாளரின் இல்லம் சென்று, அந்த ஊராட்சிக்கு உட்பட்ட நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

    அச்சந்திப்பின் போது, அந்த ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பூத் கமிட்டிகளும் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அந்த பூத் படிவங்களை கையில் வைத்து கொண்டு சரிபார்க்க வேண்டும்.

    ஊராட்சி சபைக் கூட்டம் மூலம் மக்களைச் சந்திப்பது எவ்வாறு முக்கியமோ, அந்தளவுக்கு, பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி ஊக்கப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். அத்துடன், அந்த ஊராட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்திப்பது இன்னும் கூடுதல் பலன் தரும்.

    * இவ்வாறு நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தின் விவரங்களையும், புகைப்படங்களையும் வாரத்திற்கு ஒருமுறை, முறைப்படுத்தி தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK 
    நெல்லை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். கழக தேர்தல் பணி செயலாளர் குத்தாலம் கல்யாணம் கழக தீர்மானக் குழு இணை செயலாளர் தேனி ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அப்பாவு, மாவட்ட கழக துணை செயலாளர் எஸ்.ஏ.கே.சித்தி, மாவட்ட பொருளாளர் வள்ளியூர் ஒன்றிய கழக செயலாளர் ஞானதிரவியம், பொதுக்குழு உறுப்பினர் எம்.ஜோசப் பெல்சி, பேரூர் கழக செயலாளர்கள் டிம்பர் செல்வராஜ்,

    வி.எஸ்.எஸ்.சேது ராமலிங்கம், தமிழ்வாணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் எரிக் ஜீடு, வி.வி. ராமச்சந்திரன், ஆரோக்கிய எட்வின், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் முத்துராமன், ஜான் ரபீந்தர், முருகன், ஜோசப், சந்திரன், முரளி, நாகமணி, மார்த்தாண்டம்,

    மு.க.மாணிக்கம், ஜெயக்குமார், ஆனந்த், சுரேஷ், அசோக்குமார், வி.மூர்த்தி, குமார், தனபால், ஜி.பி.ராஜா, சுப்பையா, விஜயன், செந்தில்குமார், முன்னாள் பேரூர் செயலாளர் ஜெயராஜ், ரமேஷ், பணி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நெல்லை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் கழக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து ராதாபுரம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தர பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய, பேரூர், ஊராட்சி கழக வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக தோழர்கள் என 1500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் செய்திருந்தார்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் நாளை மறுநாள் அண்ணா அறிவாலயம் வருகிறார். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 26-ந்தேதி இரவு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அவருக்கு வலது கால் தொடை பகுதியில் நீர் கட்டி இருந்ததை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினார்கள்.

    சிகிச்சைக்கு பிறகு மறுநாள் (27-ந்தேதி) மதியம் 1.40 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.

    சிறிய அறுவை சிகிச்சை என்றாலும் அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள். அதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுத்து வருகிறார்.

    அவருக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்பதற்காக கட்சி நிர்வாகிகள் அவரை வீட்டுக்கு சென்று பார்க்கவில்லை. போனில் உதவியாளரிடம் பேசி நலம் விசாரித்துக்கொண்டனர்.

    மு.க.ஸ்டாலின் வீட்டில் இருந்தாலும் அரசியல் நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப நிர்வாகிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.


    தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் நாளை மறுநாள் (1-ந்தேதி) அண்ணா அறிவாலயம் வருகிறார்.

    கட்சியின் மூத்த நிர்வாகிகளை வரவழைத்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #DMK #MKStalin
    வீட்டில் படுத்து தூங்கிய திமுக நிர்வாகி மனைவியிடம் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவர் தி.மு.க.வில் ஆதி திராவிடர் நல பிரிவு அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி செல்வி (வயது 42).

    இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் குடும்பத்துடன் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த செல்வியின் கழுத்தில் கிடந்த 28 கிராம் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினான். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி திருடன்,திருடன் என சத்தம் போட்டார். இதையடுத்து அவனை துரத்தி சென்றனர். எனினும் மர்ம நபர் தப்பி சென்று விட்டான்.

    இது குறித்து சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு சொக்கம்பட்டி பகுதியில் சலவை தொழிலாளி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளார். இதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். மேலும் சொக்கம்பட்டி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த அப்துல் ரகீம் என்பவரது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    சொக்கம்பட்டி பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தி.மு.க.வில் சமீபத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, 10 மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு தொடர்பாக மாவட்ட வாரியாக கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், சில மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அந்த வகையில், கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு மாவட்டங்களில், சில இடங்களில் பகுதிக் கழக, ஒன்றிய கழக செயலாளர்கள் மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல், திருப்பூர் வடக்கு, நீலகிரி, ஈரோடு வடக்கு, சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, நாமக்கல் கிழக்கு ஆகிய மாவட்டங்களிலும், சில இடங்களில் மாநகரப் பொறுப்பாளர், பகுதி கழகப் பொறுப்பாளர், நகரக் கழகச் செயலாளர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் மாற்றப்பட்டு, அந்தப் பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக, கோவை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் இரா.தமிழ்மணி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தென்றல் செல்வராஜ் புதிதாக கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பார்.இளங்கோவன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, செ.காந்திசெல்வன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு நடத்தினார். இதில் முதல் கட்டமாக புதுவை வடக்கு மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். #DMK #MKStalin
    புதுச்சேரி:

    தமிழகத்தில் உள்ள 65 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார்.

    தமிழக தி.மு.க. அணி நிர்வாகிகளுடன், சென்னை அறிவாலயத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். இதனை தொடர்ந்து புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) கள ஆய்வு செய்தார்.

    புதுவை ஆனந்தா இன் ஓட்டலில் முதல் தளத்தில் கள ஆய்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புதுவை மாநிலத்தில் வடக்கு, தெற்கு மற்றும் காரைக்காலில் தி.மு.க. உள்ளது.

    இதில் முதல் கட்டமாக புதுவை வடக்கு மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். வடக்கு மாநில நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் என தனித்தனி அறையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

    அவர்களின் அறைக்கே சென்று மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் செய்தார். காலை 8.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரை வடக்கு மாநில தி.மு.க. நிர்வாகிகளிடம் கள ஆய்வு செய்தார்.


    பின்னர் 10.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை தெற்கு மாநில தி.மு.க. நிர்வாகிகளுடனும் கள ஆய்வு நடந்துகிறார். ஆய்வின் போது அந்தந்த பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிக்கையாளர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    மதியம் 12 மணிக்கு மேல் புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் அமர்ந்து மு.க.ஸ்டாலின் உணவு அருந்துகிறார். தொடர்ந்து மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை காரைக்கால் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடக்கிறது.

    மாலையில் கள ஆய்வினை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் கடலூர் வழியாக நாகப்பட்டினம் செல்கிறார். அங்கு தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார்.

    முன்னதாக நேற்று இரவு மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக புதுவை வந்தார். அவருக்கு புதுவை மாநில எல்லையான கோரிமேட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார் மற்றும் கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    நேற்று இரவு புதுவை அக்கார்டு ஓட்டலில் மு.க. ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுத்தார். #DMK #MKStalin
    ×