என் மலர்
நீங்கள் தேடியது "DMK Celebrity assassination"
- தொழில் போட்டியா? என போலீசார் சந்தேகம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள லத்தேரி அடுத்த பி. என். பாளையம் புதூர் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 41) தி.மு.க. பிரமுகரான இவர் பல ஆண்டுகளாக மேஸ்திரி தோப்பு பகுதியில் பால் கம்பெனி நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது கம்பெனியை பூட்டிவிட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கத்தியால் நாகேஷின் கழுத்து, கை ஆகிய இடங்களில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த நாகேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நாகேசை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
லத்தேரி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் சப்- இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட நாகேசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலையில் துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.