என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » dmk executive meeting
நீங்கள் தேடியது "DMK executive meeting"
- தி.மு.க. செயற்குழு கூட்டம், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய்சாந்தி மகாலில் நடைபெறுகிறது.
- கலைஞர் 100-ம் ஆண்டு விழாவை ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய்சாந்தி மகாலில் நடைபெறுகிறது.
இதில் அணி அமைப்பா ளர்கள் அமைத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல், இணையதளம் மூலமாக இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்களையும் மக்கள் இடையே கொண்டு சேர்த்தல், கலைஞர் 100-ம் ஆண்டு விழாவை ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
எனவே இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை காலை நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெறுகிறது. #DMK
நாமக்கல்:
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் காந்தி செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் உடையப்பன் தலைமையில் நடைபெறுகிறது. சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏவும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டபேரவை உறுப்பினர்கள், நகர, ஒன்றிய பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK

திருச்சியில் 14-ந் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. என்று மாவட்ட செயலாளர் கேஎன் நேரு எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #knnehrumla
திருச்சி:
திருச்சியில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 14-ந் தேதி காலை 9 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட,மாநகர நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப் பாளர்கள், துணை அமைப் பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட அனை வரும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.
விழுப்புரத்தில் வருகிற 15-ந் தேதி நடக்கும் முப்பெரும் விழா, 18-ந் தேதி ஊழல் அ.தி.மு.க. அரசை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #knnehrumla
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுத்தரத்தினம் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் ஆதித்யன், பூமதி, பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் பேசு கையில், அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரும் மக்களை பற்றி சிந்திக்காமல் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். வெகு விரைவில் மக்கள் அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி யெறிய உள்ளனர். தி.மு.க. ஆட்சியின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும்.
எனவே தி.மு.க.வினர் கடுமையாக உழைத்து வரும் தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.
இதில் பூத் கமிட்டி அமைத்தல், கட்சி பணி, செயல்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிப்பது, தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பொறுப்பாளர்கள் ஆனந்தராஜன், ராமச்சந்திரன், சிவக்குமார், வக்கீல் கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் கலையரசன், லாடபுரம் செம்புலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் வெற்றி விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி முருகன் வரவேற்றார்.
இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வது, கருணாநிதி உயிரிழந்த செய்தி கேட்டு மரணமடைந்த தி.மு.க. தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வது, தி.மு.க.வை வழி நடத்த செயல் தலைவர் ஸ்டாலின் தலைவராக வேண்டும்.
வருகிற 26-ந்தேதி நெல்லையில் நடக்கும் தலைவர் நினைவேந்தல் கூட்டத்திற்கு மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சார்பில் 25 வாகனங்களில் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் காசிப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், ராமசந்திரன், விவேகானந்தன், சரவணன், அய்யப்பன், சுகுமார் மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. செயற்குழுவில் தலைமை செயற்குழு உறுப்பினர்களுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் 19 அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். #DMK
சென்னை:
கருணாநிதியின் மறைவை தொடர்ந்து தி.மு.க. தலைமை செயற்குழுவின் அவசரக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்துக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்களுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் 19 அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தலைமை கழக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கட்சித் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் மு.க.ஸ்டாலினை கட்சித் தலைவராக்க ஒருமித்த முடிவு எடுப்பதுடன் அடுத்த கட்டமாக பொதுக்குழுவை எப்போது கூட்டுவது என்பது பற்றியும் இதில் விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. #DMK

தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜி.வி.மாதையன் தலைமை தாங்கினார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், லட்சுமி மாது, சட்டதிருத்தக்குழு இணை செயலாளர் தாமரைசெல்வன், ஆதி திராவிடர் நலக்குழு இணை செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 3-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 1,450 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 முகவர்களை நியமித்து அற்கான பட்டியலை தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. பெரும்பாலான கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பு மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி அளவில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், சித்தார்த்தன், கோபால், குமரவேல், செல்வராஜ், தேசிங்குராஜன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் முத்துலட்சுமி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். திராவிடமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை நீலகிரி மாவட்டம் முழுவதும் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி முதல் தொடர்ந்து கொண்டாடுவது, 3-ந் தேதி அன்று நீலகிரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் பரிசளிப்பது, 95 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது, ஜூன் 5-ந் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி கிளைகளில் கொண்டாடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

×

X