என் மலர்
நீங்கள் தேடியது "DMK MP"
- மோடி அரசு செய்த துரோகங்கள் என்னென்ன தெரியுமா என்று வீடியோ.
- செல்லூர் ராஜூவின் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி நேற்று 3வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார். பிரதமரின் தலைமையின் கீழ் புதிதாக அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
இந்நிலையில், மோடி அரசு செய்த துரோகங்கள் என்னென்ன தெரியுமா என்று பெண் ஒருவர் பேசும் வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? திமுக கூட்டணி எம்.பிகள் குரல் எழுப்புவார்களா? பார்ப்போம் என்று பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடியை விமர்சித்து திமுக எம்.பியின் வீடியோவை பகிரிந்த செல்லூர் ராஜூவின் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு, `நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி' என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவுடன் கூடிய கருத்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இதையடுத்து, ஒரு சில மணி நேரத்தில் பதிவை செல்லூர் ராஜூ தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்றத்தில் திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லாவை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (CISF) தடுத்து நிறுத்தினர்.
- இந்தியா கூட்டணி எம்.பிக்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே பாராளுமன்றம் பாதுகாப்பு மத்திய பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டதா?
நேற்று பாராளுமன்றத்தில் நுழைந்த திமுக மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லாவை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (CISF) தடுத்து நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களை சபாநாயகர் ஜெகதீப் தன்கருக்கு எம்.பி எம்.எம்.அப்துல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "பாராளுமன்றவளாகத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என்னிடம் நடந்து கொண்ட வேதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன்னர் பாராளுமன்ற பாதுகாப்பு படையினர் இருக்கும் பொழுது இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றது கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வேலைகள் இல்லாமல் வேறு வேலைகளுக்காக கூட பாராளும்னறத்தில் நுழைய உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக எம்.பி பாராளுமன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு படை (CISF) வீரர்களால் திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா கூட்டணி எம்.பிக்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே பாராளுமன்றம் பாதுகாப்பு மத்திய பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டதா? மக்கள் பிரதிநிதியான மாநிலங்களவை உறுப்பினரை ஏன் பாராளுமன்றம் செல்கிறீர்கள் எனக் கேட்டது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு மே மாதம் பாராளுமன்ற பாதுகாப்பது பணியை பாராளுமன்ற பாதுகாப்பு படையிடமிருந்து மத்திய பாதுகாப்பு (CISF) படைக்கு மாற்றியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
- "பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா" இன்று நடைப்பெற்றது.
- சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா" சேலம் பத்மவாணி கல்லூரியில் இன்று நடைப்பெற்றது.
இவ்விழாவில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், "இயற்கை விவசாயம் மண் வளத்தை மட்டுமல்ல மனித குலத்தையும் வளமாக்குகிறது" என பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. இது மண் வளம் பற்றியது மட்டுமல்ல மனித குலத்தின் வளமும் அதில் தான் இருக்கிறது. மனிதர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அதிகப்படியான கூட்டம் மருந்து கடைகளில், மருத்துவமனையில் இருப்பதை பார்க்க முடிகிறது.
காரணம் மண் வளம் இல்லாமை. இன்றைய இயற்கை சீற்றங்கள் அனைத்திற்கும் நாம் தான் காரணம். 40 ஆண்டுகள் முன்பு கேன்சர் எங்கோ ஒருவருக்கு தான் இருந்தது.
இன்று ஊரெங்கும் கேன்சர் மருத்துவமனை, மலட்டுத்தன்மை நீக்கும் மருத்துவமனை பார்க்க முடிகிறது. இதற்கு இயற்கையை காக்க வேண்டும், அதை காப்பதற்காக தான் ஈஷா அறக்கட்டளை இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
மண் வளத்தை பெருக்க வேண்டும் என்பது தான் நோக்கம். இது உயர்ந்த நோக்கம் இதற்கு தலை வணங்குகிறோம், இதை ஈஷா மேலும் விரிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
- மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வரும் நவம்பர் 25ம் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள்.
எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று 'இந்தியா' கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் பேசுங்கள். நாம் தீர்மானத்தில் சொல்லியிருக்கும் கருத்துகள் பற்றியும் உங்கள் தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேசுங்கள்.
நம்முடைய தீர்மானத்தில், நாம் எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, தமிழ்நாட்டிற்கான தேவைகள் என்ன என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் பேச வேண்டும். மாநில அரசை நடத்துவதில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே நிதி நெருக்கடிதான்.
எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் உங்கள் பேச்சு அமைய வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசி, புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்தக் குரலை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும். மென்மையாகப் பேசக் கூடாது. கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடுகளை அறிக்கையாகத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் உங்களுக்கான இலக்காக இருக்க வேண்டும்.
எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளைவிடக் கழகத்தில் முக்கியமான பதவி என்றால், அது மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புதான். எனவே, அவர்களுக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோலதான், ஒன்றிய - பகுதி - பேரூர்க் கழகச் செயலாளர்களும். அவர்களுக்கும் உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் தந்து, உங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களைப் பங்கேற்க வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதிப் பார்வையாளர்கள் நியமனம் செய்திருக்கிறோம். அவர்களுடன் ஆலோசனை நடத்துங்கள். ஒரு தொகுதியைக்கூட இழக்கக் கூடாது என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்துங்கள். எம்.பி.க்கள் செயல்பாடு சிறப்பாக இருந்தால், நம்முடைய வெற்றி இன்னும் எளிதாக இருக்கும்.
கால அட்டவணைப்படி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் செய்யுங்கள். மாநில உரிமைகளுக்காக - தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளுக்காக - தொகுதி மக்களின் தேவைகளுக்காக - உங்கள் நாடாளுமன்றப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பச்சையப்பன் கல்லூரியில் நடந்த விழாவில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார்.
- அப்போது, கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர் என்றார்.
சென்னை:
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசுகையில், கம்யூனிச கொள்கை தோற்றுப்போய் விட்டது. கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது. கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போனது என தெரிவித்தார்.
இந்நிலையில், சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும்.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுயநலவாதிகள் என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசியது மிகவும் தவறானது என தெரிவித்தார்.
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.
- மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.
திமுக எம்.பி.வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததன் காரணமாக, PM Shri திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியானது மறுக்கப்பட்டு குஜராத் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.
புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் ஒன்றிய அரசு தனது அரசியல் கருத்துக்களையும், அழுத்தங்களையும், சித்தாந்தங்களையும் தமிழக அரசின் மீதும், தமிழக மாணவர்கள் மீதும் திணிக்க முயல்வதையே இது காட்டுகிறது.
இதன் மூலம் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பிற்கும் - ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளுக்கும் இடையேயான வேறுபாடு தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.
நாம் குழப்பமான மக்கள் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.
தமிழக மக்கள் நன்கு படித்தவர்கள், ஆணித்தரமானவர்கள், தெளிவான கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்டவர்கள். ஆகையால் மாண்புமிகு அமைச்சர் அவர்களே, நீங்கள் முதலில் உங்கள் குழப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
சில முடிவுகளை எங்கள் மீது திணிப்பது உங்கள் அரசாங்கத்தின் சூட்சமமான திட்டம் என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொண்டிருக்கிறோம்.
மாண்புமிகு அமைச்சர் அவர்களே..
உங்களது குழப்பங்கள் அனைத்தையும் நான் தீர்த்து வைக்கிறேன்.
அரசியல் சாசனச் சட்டத்தின் 73-வது பிரிவின்படி ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளும் எப்போதும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவை அல்ல!
கொள்கைகளானது தன்னிச்சையானதாகவும், விசித்திரமானதாகவும், கற்பனையானதாகவும், சட்டவிரோதமானதாகவும், பகுத்தறிவற்றதாகவும், சட்டத்திற்கு முரணானதாகவும் இருக்கும் போது அல்லது மாநிலத்தின் சட்டங்கள், சுயாட்சி மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றில் தலையிடும்போது அவை மாநில அரசைக் கட்டுப்படுத்தாது.
அந்த வகையில் அவற்றை மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.
குறிப்பாக மிரட்டல்கள், வற்புறுத்தல்கள் மூலம் திணிக்கப்பட்ட இதுபோன்ற பல கொள்கைகளை தமிழக அரசு நிராகரித்துள்ளது என்பதை வரலாறு காட்டும் நிலையில், ஒன்றிய அரசு திணிக்கும் கொள்கைகளை தமிழக அரசு கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
மும்மொழிக் கொள்கையை திணிப்பது, 1937-ம் ஆண்டிலேயே தமிழகம் நிராகரித்த இந்தி திணிப்பை நினைவூட்டுகிறது.
மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 ஆம் ஆண்டில் அலுவல் மொழிச் சட்டத்தில் ஒன்றிய அரசை திருத்தம் செய்ய வைத்ததோடு, இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழிகளாக காலவரையின்றி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தது. இது இந்தியக் குடியரசில் தற்போதுள்ள கிட்டத்தட்ட காலவரையற்ற இருமொழிக் கொள்கையை நிறுவிட வழிவகுத்தது.
இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை எப்படி வேறுபட முடியும்.
1960 களில் ஒன்றிய அரசு அளித்த உத்தரவாதங்களை பலவீனப்படுத்த இது பின்வாசல் வழியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறையா?
தமிழகம் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயம் ஏற்க வேண்டும் என நிர்பந்திக்கும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களின் இத்தகைய அரசியல் கருத்துக்கள், நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தின் வலுவான கல்வி முறையை பலவீனப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் உயர்ந்த கல்வித் தரத்தையும், கல்வியில் மாநிலம் கொண்டுள்ள முன்னணி நிலையையும் அச்சுறுத்துவதாக இருப்பதோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். இரு மொழிக் கொள்கையைத் தாண்டி கூடுதல் மொழிகளைக் கற்பதை தமிழ்நாடு எதிர்க்கவில்லை.
ஆனால், தமிழக மக்களுக்கான சிறந்த கல்வி எது என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள மாநில சுயாட்சியில் டெல்லியில் அமர்ந்து கொண்டு தலையிடும் ஒருவரால் தீர்மானிக்கப்படக் கூடாது.
ஒன்றிய அரசு அளிக்கும் நிதியானது அதன் சொந்த நிதி அல்ல.. மாறாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும்.
எனவே, அத்தகைய நிதியின் பயன்பாட்டை பகுத்தறிவற்ற கொள்கைகளால் நிர்பந்திக்க முடியாது. கல்வியை பொறுத்தவரை நாங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறோம்.
கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் விவகாரத்தில் ஒன்றிய அரசின் திணிப்பு மற்றும் நிர்ப்பந்தச் செயல்களுக்கு எங்கள் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்றும் அடிபணிய மாட்டார்.
ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்படும் நிதியானது நமது மாநிலத்திற்கும் நமது மாணவர்களுக்கும் உரித்தானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த நிதிகள் வரி செலுத்துவோரின் பணத்தை உள்ளடக்கியது.
மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களே, உங்களின் அரசியல் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் எங்கள் மீது நீங்கள் திணிக்க முடியாது.
இந்த நிதியானது எமது நியாயமான பங்கு மற்றும் அவற்றின் மீது சட்டப்படி எங்களுக்கு உரிமை உண்டு. இந்த நிதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தி.மு.க. எம்.பி. ராசா இந்து மதத்தையும் பெண்களையும் இழிவாக பேசியதை கண்டித்து புதுவை பராசக்தி ஆன்மீக இயக்க மகளிர் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.
- லாஸ்பேட்ைட உழவர் சந்தை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு பராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர் கனகவல்லி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
தி.மு.க. எம்.பி. ராசா இந்து மதத்தையும் பெண்களையும் இழிவாக பேசியதை கண்டித்து புதுவை பராசக்தி ஆன்மீக இயக்க மகளிர் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.
லாஸ்பேட்ைட உழவர் சந்தை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு பராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர் கனகவல்லி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பராசக்தி ஆன்மீக இயக்க முன்னணி நிர்வாகிகள் வள்ளி, வெண்ணிலா, மணிமேகலை, வசந்தா, கல்விக்கரசி, மீனா, மகாலட்சுமி, ஜெயா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி அய்யனார் கோவில் வரை சென்றது. அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராசா எம்.பி. படத்தை கிழித்து வீசினர்.