என் மலர்
நீங்கள் தேடியது "Dmk win"
- தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாளை நலத்திட்ட நாளாக சிறப்பாக கொண்டாட வேண்டும்.
- இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள கிருஷ்ணா ஹாலில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தீர்மானங்களை வாசித்தார்.
தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் மாரிச்சாமி, பராசக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, ஒன்றிய செயலாளர்கள் கிறிஸ்டோபர், மதிமாரிமுத்து, பெரியதுரை, சேர்மதுரை, ராமச்சந்திரன், புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதாமுன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். வெற்றிவிஜயன் தொகுத்து வழங்கினார்.
இதில் தென்காசி எம்.பி. தனுஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் செண்பகவிநாயகம், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையாபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாளை நலத்திட்ட நாளாக சிறப்பாக கொண்டாட வேண்டும், தி.மு.க. இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சரின் திட்டங்களை ஒன்றிய நகர, பேரூர், கழக நிர்வாகிகள் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும், தெருமுனை பிரசாரம் என்பது பொதுமக்களிடம் எளிதாக செல்லும் முறை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு தற்போது இருந்தே பணியை தொடங்கி தி.மு.க.வை வெற்றி பெற கடமையாக உழைக்க வேண்டும்.
வரும் 18-ந்தேதி கழகத்தின் இளைஞரணி செயலாளர் அறிவித்துள்ளபடி வாசுதேவநல்லூர் தொகுதி தேவர் மண்டபத்தில் திராவிட பாசறை கூட்டம் நடத்தப்பட உள்ளது. 22 -ந்தேதி சங்கரன்கோவிலில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .
கட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக மாவட்ட கழகத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். அனைவரும் இணைந்து கட்சிப் பணி ஆற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, மூத்த வழக்கறிஞர் சண்முகையா, அரசு வழக்கறிஞர்கள் கண்ணன், அன்புசெல்வன், ஜெயக்குமார் மூத்த முன்னோடிகள் அண்ணாவிப்பன், சோமசெல்வபாண்டியன், இளைஞரணி சரவணன், திலீப்குமார், வர்த்தக அணி முனியசாமி, சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, வீமராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், குமார் இளைஞரணி பசுபதிபாண்டியன், மாணவரணி கார்த்திக், நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட தொண்டரணி முத்து மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.