என் மலர்
நீங்கள் தேடியது "D.N.B.L. Festival"
- இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேலம்:
8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கோவை கிங்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக) வெற்றி பெற்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
கோவை அணியில் கேப்டன் ஷாருக்கான், பால சுப்பிரமணியன் சச்சின், சுஜய், முகிலேஷ், ராம் அரவிந்த், முகமது, தாமரை கண்ணன், எம்.சித்தார்த், ஜதவேஷ் சுப்பிரமணியன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் விஜய் சங்கர், டி.நடராஜன், சாய் கிஷோர், அஜித்ராம், ராதாகிருஷ்ணன், மதிவாணன், ஆர்.ரோகித், அனிருத் சீதாராம், துஷார் ரஹேஜா, கணேஷ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.