search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DOUBLE LIFE"

    • கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கொலை.
    • கணவர், அவரது தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு.

    கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சீதா என்ற பெண்ணை கொலை செய்து உடலையும் எரித்தனர்.

    கொலை தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன், கணவரின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    கடலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
    • மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 57). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 28.9.2021 அன்று 4 வயது மற்றும் 8 வயதுடைய 2 சிறுமிகளிடம், கடைக்கு சென்று வெற்றிலை, பாக்கு மற்றும் மிட்டாய் வாங்கி வருமாறு கூறி பணம் கொடுத்துள்ளார்.

    பின்னர் அவற்றை வாங்கி வந்த சிறுமிகளை வீட்டிற்குள் பூட்டி வைத்து மிட்டாய் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்‌. சிறுமியின் தாய், இது பற்றி அரியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அண்ணாதுரையை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த அண்ணாதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.7 லட்சம் இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அண்ணாதுரையை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்."

    ×