search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr Ambedkar"

    • சட்ட மாமேதை அம்பேத்கரின் 132-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
    • பொன்னேரி அம்பேத்கர் திரு உருவச் சிலை முன் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் உறுதிமொழி எடுத்தது.

    பொன்னேரி:

    சட்ட மாமேதை அம்பேத்கரின் 132-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் திரு உருவச் சிலைக்கு 500-க்கும் மேற்பட்ட மக்களோடு அணிவகுப்பு நடத்தி திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கோ.தேவராசு, வழக்கறிஞர் அணி செயலாளர் அருள்தாசு, கொள்கை பரப்புச் செயலாளர் வெற்றிச்செல்வன், மையக்குழு உறுப்பினர் இளம்தென்றல் யாபேசு, ஒன்றிய செயலாளர் மோகன் மற்றும் ஆதித்தமிழர் கலைக்குழு மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்று புகழ் வணக்கம் செலுத்தினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். #AmbedkarDeathAnniversary #NarendraModi #VenkaiahNaidu #Tribute
    புதுடெல்லி:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



    அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின்னர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மத்திய மந்திரிகள் தாவர்சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.

    சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

    அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். நீதிபதி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரான அவர் சுதந்திரத்திற்கு பிறகு முதல் சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்தார். 1956ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மறைந்தார். மறைவுக்கு பிறகு அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. #AmbedkarDeathAnniversary #NarendraModi #VenkaiahNaidu #Tribute 
    அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பாராளுமன்றத்தில் உள்ள அவருடைய சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (வியாழக்கிழமை) மலர் தூவி மரியாதை செய்கிறார். #Ambedkar #NarendraModi #VenkaiahNaidu #Tribute
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6-ந் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்துகின்றனர். மத்திய மந்திரிகள் தாவர் சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.



    தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பகல் 11 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.

    நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் ஏற்பாடு செய்து உள்ளது.

    நிகழ்ச்சியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரத மர் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்துகொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    நாடாளுமன்ற வளாகத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான போலீசாரும், கமாண்டோ படையினரும் குவிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.  #Ambedkar #NarendraModi #VenkaiahNaidu #Tribute 
    ஆய்வுக்கூடம் படத்தில் நாயகனாக நடித்தவர் தற்போது புதிய படத்தில் அம்பேத்கர் வேடத்தில் நடிப்பதை, பொதுமக்கள் பலரும் நிஜ அம்பேத்கராக நினைத்து விட்டார்கள்.
    ‘ஆய்வுக்கூடம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ராஜகணபதி. இவர் தற்போது ‘பீம்’ என்ற படத்தில் அம்பேத்கராக நடிக்கவுள்ளார். அப்படத்தில் நடிக்க எடுக்கப்பட்ட புகைப்படம் அசல் அம்பேத்கரை உரித்து வைத்தது போல் இருக்கவே அதை அரசியல்வாதிகள் தங்கள் பேனர் மற்றும் கட்வுட்களில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

    சென்னை வள்ளலார் நகர், கொருக்குபேட்டை, வண்ணாரப்பேட்டை மற்றும் மகாராணி திரையரங்கம் எதிரே என முக்கிய பகுதிகளில் இந்த பேனர்களை காணலாம். மேலும் கரூர், சேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் இந்த பேனர்கள் மக்கள் கண்களில் தென்படுகின்றன.

    தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அவருடைய போட்டோ பிரபலம் ஆகியுள்ளது. அம்பேத்கர் சம்பத்தப்பட்ட இசை ஆல்பங்களிலும் அவருடைய படங்கள் தென்படுகின்றன. மேலும் அவருடைய போட்டோக்கள் உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் டெல்லியிலும் பரபரப்பாக ஒட்டப்பட்டு வருகின்றன. இவர் நடிகர் ராஜகணபதி என்று தெரியாமலேயே இந்த போட்டோ தான் அம்பேத்கார் என விரும்பி அரசியல்வாதிகளால், மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. 



    நடிகர் ராஜகணபதி இதை தனக்கு தன் வாழ்நாளில் கிடைத்தற்கறிய வரப்பிரசாதமாக எண்ணி பெருமை கொள்கிறார். நடிகர் ராஜகணபதியை தெரிந்த சில அரசியல் தலைவர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    பீம் படத்தை பற்றி நடிகர் ராஜகணபதி கூறும்போது, ‘சட்ட மேதை அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தலைவர் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தலைவராக விளங்கியவர். அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்றார்.
    ×