search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr Sivanthi aditanar college of engineering"

    • திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் வாக்காளர் உரிமை, கடமை, நேர்மை குறித்து உரையாற்றினார்.
    • 18 வயதான மாணவ-மாணவிகள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்காளர் உரிமை, கடமை, நேர்மை குறித்து உரையாற்றினார். வாக்களிப்பதின் அவசியம் குறித்து தாசில்தார் வாமனன் எடுத்துரைத்தார். சிறப்பு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் புதிய வாக்காளர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.

    18 வயதான மாணவ-மாணவிகள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட வருவாய்த்துறையினர் மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். மாணவி உலகேஸ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பப்பி வின்சென்ட் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 212 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் உலக பொதுமறையாம் திருக்குறள் கூறும் தலைமைப்பண்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 212 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் தொடக்க உரையாற்றினார்.

    தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் ஆகியோர் பேசினர். ஓய்வுபெற்ற ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன் தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்புகளை மேம்படுத்துதல் குறித்து பேசினார். தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் உலக பொதுமறையாம் திருக்குறள் கூறும் தலைமைப் பண்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    பொறியியல் கல்வியின் பயன்கள், வேலைவாய்ப்புகள் குறித்து டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி விளக்கி கூறினார். ஆசிரிய படிப்புகள் குறித்து டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி பேசினார். உதவி பேராசிரியை உமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள், பாலிடெக்னிக் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • பேச்சு, கவிதை, குழு நடன போட்டி ஆகியவற்றுக்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், தொழில் கல்வி படிக்கும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு மாநில அளவில் அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டிகள், தமிழ்-ஆங்கிலத்தில் பேச்சு போட்டி, கவிதை போட்டிகள் மற்றும் குழு நடன போட்டிகள் நடைபெற்றது.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள், பாலிெடக்னிக் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. இதில் ஏராளமான பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் தி.வெங்கட்ராம்ராஜ் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்ததுடன், சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். கல்லூரி செயலாளர் செள.நாராயணராஜன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி துடிசியா நிறுவன மேலாளரும், கல்லூரி முன்னாள் மாணவருமான எஸ்.மரிய சந்தான ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். பேராசிரியர் எஸ்.டார்வின் வரவேற்று பேசினார். மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் எஸ்.சிவனணைந்த பெருமாள் நன்றி கூறினார்.

    பரிசு

    பள்ளிகளுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சபரிவாசன், நித்தீஷ்குமார் ஆகியோர் முதல் பரிசும், சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி 2-வது பரிசும், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 3-வது பரிசும் பெற்றன. கமலாவதி மேல்நிலைப்பள்ளி, எலியட் டக்ஸ்போர்டு, காஞ்சி ஸ்ரீசங்கரா, சின்மயா வித்யாலயா, செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆறுதல் பரிசு பெற்றன.

    பாலிெடக்னிக் கல்லூரிகளுக்கான போட்டியில் நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல் 2 பரிசுகளையும், சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி 3-வது பரிசையும் பெற்றன. பேச்சு, கவிதை, குழு நடன போட்டி ஆகியவற்றுக்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    பயிற்சி பட்டறை

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை ஐ.இ.இ.இ. மாணவர்கள் பிரிவு சார்பில் ஐ.இ.இ.இ. மெட்ராஸ் பிரிவு போட்டானிக்ஸ் அமைப்பின் நிதியுதவியுடன் 'உருவகப்படுத்துதல் கருவிகளை பயன்படுத்தி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் போட்டானிக்ஸ் அமைப்பில் வடிவமைப்பு திறன் மேம்பாடு' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடைபெற்றது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர், இணை பேராசிரியர் இரா.மஞ்சித் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக திருச்சி கே.ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மூத்த உதவி பேராசிரியர் வினோத், மென்பொருள் பயிற்சி வழங்கினார். ராபீட் செமிகன்டைகர் தொழில்நுட்பத்தின் இணை நிறுவனர் கார்த்திகேயன் குறைகடத்தி தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து செய்முறை பயிற்சி வழங்கினார். துறை தலைவர் பெனோ வாழ்த்துரை வழங்கினார். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக 18-வது மண்டல விளையாட்டு ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

    2-வது இடத்தை தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணியும், 3-வது இடத்தை சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி அணியும் பிடித்தது. சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் தேவராஜூ ஆகியோரை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் முதுகலை மேலாண்மை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது.
    • தங்களது தொலைநோக்கு பார்வை சிறிதாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் தங்களது பங்களிப்பை அளித்தால் இலக்கை அடைந்து விடலாம் என்று தனராஜ் கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் முதுகலை மேலாண்மை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, கல்லூரியின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். கணிதத்துறை தலைவி வாசுகி வரவேற்று பேசினார். மேலாண்மை துறை தலைவர் அமிர்தகவுரி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் கலந்து கொண்டு பேசினார்.

    கல்லூரி முன்னாள் மாணவரும், பெங்களூரு ஹிட்டாச்சி எனர்ஜி பயன்பாட்டு மேலாளருமான தனராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 'மாணவர்கள் தங்களது தொலைநோக்கு பார்வையை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு தேவையான போட்டித்திறன், தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்களது தொலைநோக்கு பார்வை சிறிதாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் தங்களது பங்களிப்பை அளித்தால் இலக்கை அடைந்து விடலாம்' என்று கூறினார்.

    விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். வேதியியல் துறை தலைவி ஜோதி ஸ்டெல்லா நன்றி கூறினார்.

    • திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன் தலைமை தாங்கி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்.
    • கோவை பாரதியார் பல்கலைக்கழக வேலை வழிகாட்டி துறை ஆய்வாளர் சத்யா, உயர் கல்விக்கான வழிகாட்டுதல் பற்றி கருத்துரை வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 'நான் முதல்வன்' உயர்வுக்கு படி வழிகாட்டும் கருத்த ரங்கம் நடந்தது.

    கருத்தரங்கம்

    தமிழக முதல்- அமைச்சரின் 'நான் முதல்வன்' திட்டத்தின்படி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி தேடும் மாணவர்களுக்கான 'நான் முதல்வன்' உயர்வுக்கு படி வழிகாட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது. திருச் செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன் தலைமை தாங்கி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகை யில்,'கல்வியின் சிறப்பை யும், உயர் கல்வியின் அவசியத்தையும் எடுத்து ரைத்தார். ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்களை அனைத்து நிலைகளிலும் முதல்வனாக எண்ணிக் கொண்டு செயல்பட்டால் முதல்வனாக திகழ முடியும். அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டத்தின் அடிப்படை நோக்கம்' என குறிப்பிட்டார்.

    முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கோவை பாரதி யார் பல்கலைக்கழக வேலை வழிகாட்டி துறை ஆய்வாளர் சத்யா, உயர் கல்விக்கான வழிகாட்டுதல் பற்றி கருத்துரை வழங்கி னார்.

    விழிப்புணர்வு அரங்குகள்

    தூத்துக்குடி சமூகநல அலுவலர் ஷெலின், எட்டயபுரம் அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் ராஜேஷ் கண்ணா, திறன் பயிற்சி மைய உதவி இயக்குனர் ஏஞ்சல் விஜய நிர்மலா ஆகியோர் அரசு திட்டங்க ளை பற்றி எடுத்துரைத்தனர். முன்னதாக மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது நன்றி கூறினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி தமிழ் பேராசிரியர் கதிரேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    கருத்தரங்கில் திருச்செந்தூர் தாசில்தார் வாமணன் மற்றும் வருவாய் துறை, கல்வி துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஜெயராஜ் அன்னபாக்கியம் தொழில் நுட்ப கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, மர்காசியஸ் கல்லூரி, டான் பாஸ்கோ கல்லூரி, காமராஜ் பெண்கள் கல்லூரி, சாத்தான்குளம் அரசு கலைக்கல்லூரி, பள்ளிக் கல்வித்துறை, வேலைவாய்ப்புத்துறை, சமூக நலத்துறை, திறன் பயிற்சி மையம், இ-சேவை மையம், வங்கி கடன் வழங்கும் துறைகள் சார்பில் விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்று பயன் பெற்றனர்.

    • மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் விதமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
    • இக்கல்வியாண்டில் 30-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் தேசிய நிறுவனங்களில் இறுதியாண்டு மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    பாடப்பிரிவுகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை (சிவில்), எந்திரவியல் துறை (மெக்கானிக்கல்), கணினி அறிவியல் துறை (சி.எஸ்.இ), மின் மற்றும் மின்னணு துறை (இ.இ.இ), தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (இ.சி.இ) என 6 துறைகளில் இளநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

    முதுநிலை பட்ட மேற்படிப்பில் (எம்.இ.) கணினி அறிவியல் துறை, டிரைவ்ஸ் அமைப்புசார் பொறியியல் (வி.எல்.எஸ்.ஐ.) மற்றும் மேலாண்மை துறையில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பும் பயிற்று விக்கப்படுகிறது.

    செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் படிப்பு

    கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் என்னும் 4 ஆண்டு பி.டெக். பட்டப் படிப்பு தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அனுமதி வழங்கி உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் என்ற இப்புதிய பாடத்திட்டம் தற்காலத்தில் மிக முக்கியமான வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையாகும். மேலும் இது தொழில்நுட்பத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி ஆகும்.

    ஆற்றல்மிக்க லாபகரமான தொழில்நுட்ப துறையில் ஒன்றாக உருவெடுத்துள்ள இத்துறை பெரும்பாலும் நடைமுறை மற்றும் பயன்பாட்டு அடிப்ப டையிலான திறன் சார்ந்த ஆய்வை அடிப்படையாக கொண்ட படிப்பு ஆகும். புள்ளியியல், கணித பகுத்தறிவு, எந்திரம் கற்றல், காட்சிப்படுத்துதல், திறன் மற்றும் அறிவைக் கண்டறிதல் முதலிய வற்றுக்கும் நிஜ உலக சவால்களை தீர்ப்பதற்கும் இப்படிப்பு பயன்படுகிறது. மேலும் இதன்மூலம் தரவு விஞ்ஞானம், தரவு செயல்பாடு, தரவுக்கிடங்கு முதலிய பணிகள் மேற்கொ ள்ளப்படுகின்றன. இப்படி ப்பில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கலாம்.

    ஆராய்ச்சி மையம்

    இக்கல்லூரி டி.சி.எஸ். அங்கீகாரம் மற்றும் ஐ.எஸ்.ஓ. 9001:2015 தரச்சான்றி தழை பெற்றிரு க்கிறது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறையானது இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்து றைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. கல்லூரியின் அனைத்து இளநிலை துறைகளும், முதுநிலை கணினி துறையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நிரந்தரமாக அங்கீகரி க்கப்பட்டு உள்ளது. மேலும் கணினி துறை, மின்னணு வியல் மற்றும் தொடர்பியல் துறைக்கு ஆராய்ச்சி மையத்தி ற்கான அங்கீகா ரத்தை அண்ணா பல்கலைக் கழகம் வழங்கி உள்ளது.

    மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கு வதுடன் வேலை வாய்ப்பு களை பெற்று தரும் வகையில் பிரத்யேகமான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அமைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் விதமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் மாணவர்கள் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய துறைசார்ந்த அறிவு, தகவல் தொடர்பு, முடிவெடுக்கும் ஆற்றல் போன்ற திறனை மேம்படுத்தி கொள்ள வழிவகுக்கிறது.

    வேலைவாய்ப்பு

    மாணவர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்த ஆண்டுதோறும் பன்னாட்டு நிறுவனங்களின் மேலாள ர்களை அழைத்து கருத்த ரங்கு நடத்தப்படுகிறது. இக்கல்வியாண்டில் 30-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் தேசிய நிறுவன ங்களில் இறுதி யாண்டு மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்று ள்ளனர்.

    கல்லூரியில் மாணவர் களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் நவீன வசதி களுடன் உள்ளது. மேலும் கல்லூரி மற்றும் விடுதி வளாகம் முழுவதும் வை-பை கணினி இணைய தள சேவை வசதி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, சாயர்புரம், சாத்தான்குளம், திசையன்விளை, நாசரேத், உடன்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் கல்லூரிக்கு மாண வர்களை அழைத்து வரும் வகையில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு www.drsacoe.org என்ற கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இக்கல்லூ ரியில் சேர விரும்பும் மாணவர்கள் படிப்புகள் குறித்த விவரங்களை பெறுவதற்கு drsacoe@aei.edu.in, princyengg@aei.edu.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், கல்லூரி முதல்வரை நேரிலோ அல்லது 04639- 220700, 220702, 220715, 9443246150 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்காக இந்த போட்டி நடத்தப்படுகிறது.
    • இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://forms.gle/JJ6njTCh2cgqghJt6 என்ற இணைப்பின் மூலமாக காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை பங்கேற்கலாம்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வினாடி-வினா போட்டி வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்காக இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://forms.gle/JJ6njTCh2cgqghJt6 என்ற இணைப்பின் மூலமாக காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை பங்கேற்கலாம். மேலும் போட்டிகள் பற்றிய விவரம் அறிந்து கொள்ள ecesacoesiumevents@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 9443453030 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இணையவழி சான்றிதழ், அவர்களின் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.

    • திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் நாராயண ராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி கல்லூரி அறிக்கையை வாசித்தார். முன்னாள் மாணவரும், கல்லூரி மின்னணு தகவல் தொடர்பு துறை பேராசிரியரும், பயின்றோர் கழக செயலாளருமான ஜோஸ்வா பாபு வரவேற்று பேசினார். வேலைவாய்ப்பு அலுவலர் பொன்னுகிருஷ்ணன் வேலைவாய்ப்பு அறிக்கையை வாசித்தார்.

    முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கல்லூரியில் படித்த அனுபவங்களையும், தற்போது பணியாற்றும் பணிகள் குறித்தும் உரையாற்றினர். முன்னாள் மாணவர்களான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மூத்த துணை போக்குவரத்து மேலாளர் ரமேஷ், மூத்த தொழில்நுட்ப கட்டிட கலைஞர் ஸ்ரீராம் பாலாஜி, சென்னை இன்போசிஸ் நிறுவன அதிகாரி முகமது முனாவர் உசேன், சோகோ நிறுவன அதிகாரி முகமது இப்ராஹிம் அன்சாரி, அமேசான் நிறுவன அதிகாரி பிரபாகரன், டேட்டா என்ஜினீயர் ராஜாராம், ஆராய்ச்சி மாணவி நூர்பஸ்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியரும், பயின்றோர் கழக பொருளாளருமான சித்ராதேவி கணக்கு அறிக்கையை வாசித்தார். கணினி துறை பேராசிரியரும், பயின்றோர் கழக துணை செயலாளருமான ஜென்சி நன்றி கூறினார்.

    • கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னணு தொடர்பு துறை முதுநிலை இணை பேராசிரியர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • கருத்தரங்கில் 15 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னணு தொடர்பு துறை மற்றும் உள்தர உறுதிப்பிரிவு சார்பில், ''மின்னணு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் சமீபத்திய போக்குகள்'' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். பேராசிரியர் வளனரசு வரவேற்று பேசினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து மின்னணு தொடர்பு துறை தலைவர் பெனோ எடுத்துரைத்தார்.

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னணு தொடர்பு துறை முதுநிலை இணை பேராசிரியர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ''மாணவர்கள் தற்போதைய தொழில்நுட்பங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்'' என்று கூறினார். தொடர்ந்து அவர், மாநாட்டின் தொகுப்பு நூலை வௌியிட, அதனை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி பெற்று கொண்டார்.

    கருத்தரங்கில் 15 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் மணி, பேராசிரியர் வளனரசு ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு ஆராய்ச்சி கட்டுரைகளை ஆராய்ந்து வழிகாட்டினர். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, கருத்தரங்கின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து பேசினார்.
    • இதில் பங்கேற்ற பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினித்துறை மற்றும் தேசிய கணினித்துறை சார்பில், ''கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள்'' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, கருத்தரங்கின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து பேசினார். கணினித்துறை இணை பேராசிரியை ஜென்சி வரவேற்று பேசினார்.

    கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பி.சி.ஏ. துறைத்தலைவர் அனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நவீன கணினி தொழில்நுட்பங்களான சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், வயர்லெஸ் டெக்னாலஜி, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் அதை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறினார். இதில் பங்கேற்ற பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கணினித்துறை உதவி பேராசிரியை சிந்து, சிறப்பு விருந்தினர் அனிதா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு ஆராய்ச்சி கட்டுரைகளை மதிப்பிட்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

    கணினித்துறையின் மாணவர் சங்கம் சி.எஸ்.ஐ. சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், அச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர் அபிஷேக் நிமலன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், கணினித்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோ.பாலசந்திரன் ‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    திருச்செந்தூர்:

    தமிழ் கனவு தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமை யையும், சமூக சமத்துவத் தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்பு களையும் இளம் தலை முறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் மா பெரும் தமிழ் கனவு என்னும் பண்பாட்டு பரப் புரை நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடத்து வதற்கு தமிழக முதல்-அமைச்சர் உத்தர விட்டுள்ளார்.

    அதன்படி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெ க்டர் புகாரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோ.பாலசந்திரன் 'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்' என்ற தலைப்பிலும், இணைய தலைமுறையும் இட ஒதுக்கீடும் என்ற தலைப்பில் கார்த்திகை செல்வனும் சிறப்புரையாற்றினர்.

    இதில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி, நாசரேத் மா்கா சியஸ் கல்லூரி, சாயர்புரம் போப் கல்லூரி, தூத்துக்குடி ஜி.யு. போப் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீவைகுண்டம் குமரகுரு சுவாமிகள் கலை கல்லூரி ஆகிய கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில், பெருமித செல்வன் பெருமித செல்வி விருதுகளும், கேள்வியின் நாயகன், நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன. கல்லூரி வளாகத்தில் கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இதில், திருச்செந்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் சிறுதானியங்கள் மூலம் பாரம்பரிய உணவு, மகளிர் திட்ட மூலம் பனை சார்ந்த பொருட்களும், தூத்துக்குடி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அகழாய்வு குறித்து புகைப் படங்கள் வைக்கப் பட்டிருந்தன. நிகழ்ச்சிகளை ஆதித்தனார் கல்லூரி தமிழ் துறை தலைவர் கதிரேசன் ஒருங்கிணைத்து வழங் கினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் (பயிற்சி) பிரபு, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், வட்ட வழங்கல் அலுவலர் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் அமிர்த கண்ணன், கல்லூரி கண்கா ணிப்பாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி நன்றி கூறினார்.

    ×