search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய கணினித்துறை கருத்தரங்கம்
    X

    கருத்தரங்கம் நடந்தபோது எடுத்த படம்

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய கணினித்துறை கருத்தரங்கம்

    • கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, கருத்தரங்கின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து பேசினார்.
    • இதில் பங்கேற்ற பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினித்துறை மற்றும் தேசிய கணினித்துறை சார்பில், ''கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள்'' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, கருத்தரங்கின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து பேசினார். கணினித்துறை இணை பேராசிரியை ஜென்சி வரவேற்று பேசினார்.

    கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பி.சி.ஏ. துறைத்தலைவர் அனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நவீன கணினி தொழில்நுட்பங்களான சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், வயர்லெஸ் டெக்னாலஜி, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் அதை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறினார். இதில் பங்கேற்ற பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கணினித்துறை உதவி பேராசிரியை சிந்து, சிறப்பு விருந்தினர் அனிதா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு ஆராய்ச்சி கட்டுரைகளை மதிப்பிட்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

    கணினித்துறையின் மாணவர் சங்கம் சி.எஸ்.ஐ. சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், அச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர் அபிஷேக் நிமலன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், கணினித்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×