என் மலர்
நீங்கள் தேடியது "drawing"
- 2019 ஆம் ஆண்டு சந்தீப் புதோலியா என்ற நபரை இப்பெண் திருமணம் செய்துள்ளார்.
- திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் 27 வயது பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். முதலில் இதை தற்கொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவளது கணவர் மற்றும் மாமியார் தான் தங்கள் மகளின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.
2019 ஆம் ஆண்டு சந்தீப் புதோலியா என்ற நபரை இப்பெண் திருமணம் செய்துள்ளார். கணவரின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் வரதட்சணை கொடுக்க பெண்ணின் தந்தை தெரிவித்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொடுமைப்படுத்த, இது தொடர்பாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளிக்க பின்னர் இருவீட்டாரும் சமரசத்துக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்தது அவளது மாமியாருக்கு பிடிக்கவில்லை என்று பெண்ணின் தந்தை தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த கொலையை நேரில் பார்த்த அப்பெண்ணின் 4 வயது மகள், தாயை அடித்துக்கொன்று தந்தை தூக்கில் தொங்கவிட்டது போன்று ஓவியம் வரைந்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச ஓவியப் பயிற்சி முகாம் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- சுமார் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேனி:
மதுரை மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் உலக ஓவிய தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச ஓவியப் பயிற்சி முகாம் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சியை கலை பண்பாட்டுத்தறை மதுரை மண்டல உதவி இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் முன்னிலை வகித்தார்.
5 வயது முதல் 8 வயது உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 9 வயது முதல் 12 வயது உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 13 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஓவிய ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை கணபதியை சேர்ந்த சக்திவேல், அனிதா தம்பதியின் மகன் தர்ஷன் (வயது 8). இவர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவனுக்கு ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஓவியம் வரைய திட்டமிட்டார். இதையடுத்து தனது தந்தையின் உதவியுடன் கடந்த 7-ந் தேதி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரைய தொடங்கி 14-ந் தேதி முடித்தார். இதில் அவர் மொத்தம் 1,050 ஓவியங்கள் வரைந்தார்.
இந்த ஓவியத்தில் விரலில் அழியாத மை வைப்பது போன்றும், அதை சுற்றிலும் தேசிய கொடியில் உள்ள நிறங்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர ஓவியங்களில் வாக்களிக்க தயார், உனது ஓட்டு, உனது உரிமை, வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன், நல்ல இந்தியா அமைய வாக்களியுங்கள், உங்கள் விரலின் வலிமை உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து சிறுவன் தர்ஷன் தனது ஓவியங்களுடன் கலெக்டர் ராஜாமணியை பார்த்தார். அப்போது கலெக்டர் சிறுவனின் திறமையை பாராட்டினார். இதுகுறித்து சிறுவன் தர்ஷன் கூறியதாவது:- எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. தற்போது நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் 1,050 வரைந்து உள்ளேன். இதற்கு 8 நாட்கள் ஆனது. வலிமையான நாடு அமைய அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.