என் மலர்
நீங்கள் தேடியது "Dressess"
- பிறந்த 4 குழந்தைகளுக்கும் தங்க கணையாழி வழங்கும் நிகழ்ச்சி.
- உட்புற நோயாளிகளுக்கு பால், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள்.
சீர்காழி:
சீர்காழியில் தி.மு.க. நகர இளைஞரணிஉதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்து வமனையில் நவம்பர் 27ஆம் தேதி பிறந்த 4 குழந்தைகளுக்கும் தங்க கணையாழி வழங்கும் நிகழ்ச்சி நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசே கரன், துணை தலைவர் சுப்ப ராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, ஜெயந்தி முன்னிலை வகித்தனர்.குழந்தைகளுக்கு தங்க கணையாழிகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
மேலும் உட்புற நோயாளிகளுக்கு பால், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும், பச்சிளம் குழந்தைகளுக்கு புத்தாடைகளும் வழ ங்கினார்.
நிகழ்ச்சியில்விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட மாணவ ரணி துணை அமைப்பாளர் செந்தில், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் செல்வமுத்து, பொறியாளர் தன்ராஜ், நகர பொருளாளர்கள் கோட ங்குடி சங்கர், பந்தல்.முத்து, முன்னாள் பொருளாளர் துரை, நிர்வாகிகள் லெனின், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடி வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன் நன்றிக் கூறினார்.