என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "drills"
- கனமழையின்போது இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை எப்படி மீட்பது என்று செயல்விளக்கம்
- மலைபாதையில் புதியதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகள் முன்பு புகைப்படம் எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தல்
அருவங்காடு,
நீலகிரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக குன்னூர் தீயணைப்பு தீயணைப்புநிலையத்தில் செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கனமழையின்போது எப்படி மீட்பது, இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை பாதுகாப்பாக மீட்டு காப்பாற்றுவது ஆகியவை குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை சோதனை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் குன்னூர் மலைப்பாதை மட்டுமின்றி நிலச்சரிவு, மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, மலை பாதையில் புதியதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகள் முன்பு சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க கூடாது, அருவிகளில் குளிக்கவும் செய்யக்கூடாது எனவும் போலீசார் அறிவுரை வழங்கினர்.