என் மலர்
நீங்கள் தேடியது "Drinking water supply canceled"
- பொதுமக்கள் குடிநீர் வரும்பொழுது சேமித்து வைப்பதுடன் மிகவும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்.
- அனைத்து வார்டுகளுக்கும் அவசர தேவைகளுக்காக லாரி மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படும்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சியில் திருப்பூர் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் குடிநீர் வினியோகம் இருக்காது என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் நகரில், திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட குழாய், பதிக்கும் பணிகள் நடக்கின்றன. புதிய குடிநீர் திட்ட பம்பிங் மெயின் குழாய் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக வருகிற 29, 30, 31- ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது. மேலும் அனைத்து வார்டுகளுக்கும் அவசர தேவைகளுக்காக லாரி மூலம் அந்தந்த பகுதி நகர மன்ற உறுப்பினர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் குடிநீர் வரும்பொழுது சேமித்து வைப்பதுடன் மிகவும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டுமென நகர மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் மற்றும் நகராட்சி ஆணையாளர் வினோத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.