என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "drone strike"
- பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா [Caesarea] நகரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
- அடுத்த கட்ட போருக்கு தாங்கள் தயாராக உள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்தது
பாலஸ்தீனம் மீதும் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாடுகளில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் லெபனானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா [Caesarea] நகரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
இதனால் செசாரியா பகுதியில் நெதன்யாகு இல்லம் அமைத்துள்ள இடத்தின் அருகே உள்ள கட்டிடத்தின் மீது லெபனான் டிரோன் தாக்கியதாகவும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடத்த சமயத்தில் நேதன்யாகு அந்த இல்லத்தில் இருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை
மேலும் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு வடக்கே உலா கிலோட் பகுதியில் இரண்டு டிரோன்கள் பறந்ததாவும் அதை அழித்ததாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலைக்கு பின்னர் புதிய மற்றும் அடுத்த கட்ட போருக்கு தாங்கள் தயாராக உள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம்.
- இஸ்ரேல் ராணுவத் தளம் மீது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல்.
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளது.
அந்த இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானத்தை(டிரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் எல்லை நகரமான கிரியாத் ஷ்மோனாவில் உள்ள இஸ்ரேல் ராணுவத் தளம் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவித்தது.
- ஈரானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
- ஈரானின் 7 இடங்களில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 9 பேர் பலியாகினர்.
தெஹ்ரான்:
ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஈரானின் 7 இடங்களில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 9 பேர் பலியாகினர்.
தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் வம்சாவளி பயங்கரவாதிகள் எங்களுக்கு எதிராக நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. எனவே இந்த தாக்குதல் நடவடிக்கையை எடுப்பதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. அப்பாவி ஈரான் மக்களையோ, ஈரான் ராணுவத்தினரையோ குறிவைக்கவில்லை. ஈரான் எங்கள் சகோதர நாடு. அதன் மக்கள் மீது பாகிஸ்தான் மக்கள் மிகுந்த மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர். பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இரு நாடுகளின் எல்லையில் உள்ள ஈரானியர் அல்லாத கிராமவாசிகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே, நல்ல அண்டை நாடு மற்றும் சகோதரத்துவம் என்ற கொள்கையை கடைபிடிப்பதாகவும், தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான உறவுகளை எதிரிகள் சிதைக்க அனுமதிக்காது என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர், தற்போது ஈரானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல மாட்டார் என்று ஈரான் அறிவித்துள்ளது. தாக்குதல் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
- ருமேனியாவில் எந்த நேரத்திலும் ரஷியாவின் தாக்குதல் வழிமுறைகள் நேரடி ராணுவ அச்சுறுத்தல்களை உருவாக்கவில்லை.
- ருமேனியாவின் குறுக்கே உள் டான்யூப் நதியில் அமைந்து உள்ள துறைமுகம் அருகே ரஷியாவின் தாக்குதலின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே உக்ரைனின் டான்யூப் ஆற்றில் உள்ள துறைமுகம் மீது நள்ளிரவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ரஷியாவின் டிரோன்கள் ருமோனியா நாட்டு எல்லைக்குள் விழுந்து வெடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, "ருமேனியா பகுதியில் ரஷியாவில் டிரோன்கள் விழுந்து வெடித்துள்ளது. ருமேனியாவின் குறுக்கே உள் டான்யூப் நதியில் அமைந்து உள்ள துறைமுகம் அருகே ரஷியாவின் தாக்குதலின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு ஆதாரமாக புகைப்படங்கள் எங்களிடம் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
ஆனால் இதை ருமேனியா மறுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, "ரஷிய டிரோன்கள் ருமேனியாவின் பிரதேசத்தில் விழுந்திருக்கக் கூடும் என்ற தகவலை திட்டவட்டமாக மறுக்கிறோம். ருமேனியாவில் எந்த நேரத்திலும் ரஷியாவின் தாக்குதல் வழிமுறைகள் நேரடி ராணுவ அச்சுறுத்தல்களை உருவாக்கவில்லை" என்று தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான ருமேனியாவில் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க மற்ற உறுப்பு நாடுகள் களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்