என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Droupathi Murmu"

    • சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நாடு முழுதுமுள்ள பெண்களுக்கு ஜனாதிபதி சர்வதேச மகளிர் தின வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.

    புதுடெல்லி:

    சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு முழுவதுமுள்ள அனைத்து பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெண் சக்தியின் சாதனைகள் மற்றும் நாட்டுக்கும், சமூகத்திற்கும் அவர்கள் தனித்துவ பங்காற்றியதற்காகவும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்வாக சர்வதேச மகளிர் தினம் உள்ளது.

    நம்முடைய குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு பெண்களே அடித்தளம் ஆக இருக்கிறார்கள். இன்னல்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டபோதும் பல்வேறு துறைகளில் தங்களுடைய அடையாளங்களை அவர்கள் பதித்து வெற்றி கண்டுள்ளனர்.

    எனினும், பெண்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்த நிறைய விஷயங்களைச் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் வகையில் மற்றும் சம வாய்ப்புகளைப் பெறும் வகையிலான சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    சாதனை படைத்த அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு சிறந்த வருங்காலம் அமைவதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • ஜனாதிபதி முர்மு இரண்டு நாள் பயணமாக அசாமுக்கு சென்றிருந்தார்.
    • முர்முவுக்கு புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் (பரிந்துரை மற்றும் ஆராய்ச்சி) இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் (பரிந்துரை மற்றும் ஆராய்ச்சி) இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் கூறுகையில், " அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என்று குறிப்பிட்டது.

    ஜனாதிபதி முர்மு இரண்டு நாள் பயணமாக அசாமுக்கு சென்றிருந்தார். இதன்போது, குவஹாத்தியில் உள்ள சக்திபீட காமாக்யா கோயிலுக்கு முர்மு வழிபாடு செய்தார்.

    • இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது.
    • இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது.

    இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) இன்று கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும்.

    இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. காந்தி ஜெயந்தி அன்று புதுடெல்லயில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை மகாத்மா ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

    • பெங்களூருவில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கிரையோஜெனிக் என்ஜினை தயாரிக்கும் 6-வது நாடாக இந்தியா உள்ளது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகம் வருகை தந்தார். மைசூரு தரசா விழாவை தொடங்கி வைத்த அவர், பின்னர் உப்பள்ளி சென்று ஐ.ஐ.டி. வளாகத்தை திறந்து வைத்திருந்தார்.

    இந்த நிலையில், உப்பள்ளி நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மாலையில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர் பின்பு ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலையில் பெங்களூரு விதானசவுதாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கர்நாடக அரசு சாா்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் இந்த பாராட்டு விழா நடக்கிறது.

    ஜனாதிபதி விதானசவுதாவுக்கு வருவதையொட்டி, பாதுகாப்பு கருதி அங்கு பணியாற்றும் அனைத்து அரசு ஊரியர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை அமைத்து கொடுக்க கடந்த 2013-ம் ஆண்டு எச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து இருந்தது.

    இதையடுத்து இந்த ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை ரூ.208 கோடி செலவில் கட்டி முடிக்க கடந்த 2016-ம் ஆண்டு இஸ்ரோ-எச்.ஏ.எல். இடையே மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருந்தது. இந்தநிலையில் பெங்களூருவில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திறந்து வைக்க உள்ளார்.

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, ரஷியா ஆகிய நாடுகளில் மட்டுமே கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கின. 2014-ம் ஆண்டு இந்தியா விண்ணில் ஏவிய ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.

    இதன்மூலம் கிரையோஜெனிக் என்ஜினை தயாரிக்கும் 6-வது நாடாக இந்தியா உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் கிரையோஜெனிக் என்ஜின்களுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை தயாரிக்க ரூ.860 கோடி ஒப்பந்தத்தை புதிய விண்வெளி இந்திய நிறுவனத்திடம் இருந்து எச்.ஏ.எல்.எல் அன்ட் டி நிறுவனங்கள் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.
    • எம்.பி.க்கள் தம்பிதுரை, என்.சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவை நேரில் சந்தத்து வாழ்த்து தெரிவித்தார்.

    அவருடன் எம்.பி.க்கள் தம்பிதுரை, என்.சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    ×