என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drowned in"

    • காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி ஆற்றில் குளித்துள்ளார்.
    • அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் தாமஸ். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு கனிமொழி (15) என்ற மகள் உள்ளார். லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கனிமொழி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் காங்கேயம் பாளையம் காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி துணி துவைத்து விட்டு ஆற்றில் குளித்துள்ளார்.

    அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே கனிமொழி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×