search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drowned in water"

    • தேங்காதின்னிபட்டியை சேர்ந்தவர் அழகன் மகன் ஏழுமலை (40). லாரி லோடு மேனாக வேலை செய்து வந்தார்.
    • பெரியசாமி கோவில் போகும் வழியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார் அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேங்காதின்னிபட்டியை சேர்ந்தவர் அழகன் மகன் ஏழுமலை (40). லாரி லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவர் விடுமுறை தினமான நேற்று தனது நண்பர்களுடன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    இந்த நிலையில் அங்குள்ள நத்துக்குளிப்பட்டி - பெரியசாமி கோவில் போகும் வழியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார் அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது உடலை மீட்டனர்.

    தொடர்ந்து கொல்லிமலை செம்மேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ஏழுமலை உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளியே சென்ற பாலகிருஷ்ணன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • பள்ளத்தில் நீரில் மூழ்கி பாலகிருஷ்ணன் இறந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் அறிய சாந்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன்(39). இவரது மனைவி அந்தோணி அம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    தவிட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் பாலகிருஷ்ணன் வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது அருந்தி மீன் பிடிக்க செல்வது வழக்கம். அதேப்போல் சம்பவத்தன்று வெளியே சென்ற பால கிருஷ்ணன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஆர்.வி.எஸ்.நகர் அருகே மந்தக்காடு பகுதியில் உள்ள பள்ளத்தில் நீரில் மூழ்கி பாலகிருஷ்ணன் இறந்தது தெரிய வந்தது.

    அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால் பாரதி கிணற்றில் மூழ்கியுள்ளார்.
    • தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மூழ்கி இருந்த பாரதியை மீட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியங்கலம் அருகே உள்ள கஞ்ச நாயக்கனூரை சேர்ந்தவர் ரேணுகா தேவி (38). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது தாய் வீட்டில் தங்கி தனியார் டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் பாரதி (19). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். பாரதி தனது நண்பரும் உறவினருமான, அதே கல்லூரியில் படித்து வரும் பரணி (19) என்பவருடன் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.

    இருவரும் கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது, நீச்சல் தெரியாததால் பாரதி கிணற்றில் மூழ்கியுள்ளார்.இதனையடுத்து அவரை காப்பாற்ற முடியாமல் பரணி சத்தம் போட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மூழ்கி இருந்த பாரதியை மீட்டு, சத்தியங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • துட்டம்பட்டி கிராமத்தில் உள்ள குழந்தான்பட்டி ஏரிக்கு நேற்று மதியம் 1 மணி அளவில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
    • மறுக்கரைக்கு நீந்தி சென்று மீன் பிடிக்க போவதாக கூறிவிட்டு நீச்சல் அடித்து சென்றுள்ளார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் இடங்கனசாலை அருகே உள்ள கஞ்சமலையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 44) பரோட்டா மாஸ்டர்.

    இவரும் அதே பகுதியைசேர்ந்த நண்பர் குமார் (42) என்பவரும் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமத்தில் உள்ள குழந்தான்பட்டி ஏரிக்கு நேற்று மதியம் 1 மணி அளவில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

    ஏரியின் கிழக்கு கரையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது சுப்ரமணி அங்கிருந்த–வர்களிடம் மறுக்கரைக்கு நீந்தி சென்று மீன் பிடிக்க போவதாக கூறிவிட்டு நீச்சல் அடித்து சென்றுள்ளார்.

    அப்போது பாதி தூரம் சென்ற சுப்ரமணி மறுக்கரைக்கு செல்ல முடியாமல் திணறியுள்ளார். மேலும் திரும்பி வரமுடியாமலும் தவித்து தத்தளித்து கூச்சலிட்டுள்ளார்.

    கரையில் இருந்த நண்பர் மற்றும் அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முடியாமல் தவித்துள்ளனர். அப்போது சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி ஏரியில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரியில் 30 அடிமுதல் 40 அடிவரை ஆழம் இருப்பதால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    நீரில் மூழ்கிய சுப்ரமணி கதி என்ன? என தெரிய–வில்லை. தொடர்ந்து இன்று 2-வது நாளாக அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவரது உறவினர்கள் கதறி அழுத படி ஏரி கரையோரம் காத்திருக்கின்றனர்.

    • தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியானார்.
    • மேல்சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி கற்பக வல்லி (வயது 30). முனியசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கற்பகவல்லி தனது 5 வயது மகன் அய்யப்பனுடன் மாமியார் மாரியம்மாள் வீட்டில் வசித்து வந்தார்.

    கூலி வேலைக்கு சென்று குடும்பத்ைத காப்பாற்றி வந்த கற்பகவல்லி நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகன் அய்யப்பன், பாட்டி மாரியம்மாளுடன் வீட்டில் இருந்துள்ளான்.

    இந்நிலையில் நேற்று மாலை ஊருக்கு வடபுறம் வைரமுத்து என்பவர் கட்டி வரும் கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் அய்யப்பன் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளான். அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜேந்திரன் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • தணணீரில் இறங்கிய அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி தத்தளித்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). இவர் தனியார் நிறுவனத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று விடுமுறை என்பதால் அருகிலுள்ள துலுக்கனூர் ஏரிக்கு நண்பர்களுடன் சென்றார்.

    நண்பர்கள் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். அப்போது ராஜேந்திரனும் மீன்பிடிக்க வருவதாக கூறி ஏரியின் உள்ளே இறங்கினார். ராஜேந்திரன் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தணணீரில் இறங்கிய அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி தத்தளித்தார்.

    உடனடியாக நண்பர்கள் கரைக்கு அழைத்து வந்து அவருக்கான முதல் உதவிகளை அளித்தனர். பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

    இது குறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×