search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drowning death"

    • மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஓட்டன்சத்திரம் 4 வழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வந்து குளித்து செல்கிறார்கள். இந்த நிலையில் ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் குண்டடம் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 6 மாணவர்கள் சுதந்திர தினவிழா விடுமுறையை கொண்டாட அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர்.

    அவர்கள் ஒன்றாக ஆற்றில் இறங்கி குளித்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்களில் 5 பேர் மட்டும் கரைக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் தங்களுடன் வந்த தாராபுரம் ராம்நகரை சேர்ந்த ராஜகோபாலின் மகன் ஜெரோமியா (வயது 16) என்பவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நண்பர்கள் சேர்ந்து ஆற்றில் இறங்கி தேடிபார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.

    உடனடியாக இதுபற்றி தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.

    பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் மூழ்கிய மாணவனை சுமார் 2 மணிநேரம் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆனதால் மாணவனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு மீண்டும் மீட்பு பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். அப்போது மாணவன் ஜெரோமியா தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடல் மிதந்தது. இதையடுத்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காசிமேட்டில் பாலிடெக்னிக் மாணவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை, நேரு நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஏஜாஸ் (17) அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தன்னுடன் படிக்கும் கிஷோர் குமார், ஜெகதீஷ், மகேஷ்குமார் ஆகியோருடன், காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில், வார்ப்பு பகுதியில் குளிக்க சென்றார்.

    அப்போது, நண்பர்களுடன் மேலிருந்து கீழே கடலில் குதித்து விளையாடியபோது நீரில் மூழ்கிய ஏஜாஸ் மீண்டும் மேலே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக அருகில் இருந்த மீனவர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவர்களும் கடலில் மூழ்கி மாயமான ஏஜாசை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மீனவர் ஒருவர் தேடும் போது நீருக்கு அடியில் மாணவனின் உடல் கிடைத்தது மாணவனின் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரனின் மகன் ஸ்ரீதர் (வயது 21), துரித உணவகம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அரக்கோணம் அசோக் நகரைச் சேர்ந்தவர் மதன்‌. நண்பர்களான இருவரும் நேற்று மதியம் மதுபானம் குடித்து விட்டு, போதையில் சித்தேரி பகுதியில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க சென்றனர்.

    ஏரியில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் ஸ்ரீதர் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி விட்டார். உடனே மதன், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். கிராம மக்கள் ஓடி வந்து ஏரியில் இறங்கி தேடி ஸ்ரீதரை பிணமாக மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார், ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூங்கில்துறைப்பட்டு:

    சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 40). விவசாயியான இவர் சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஏழுமலை திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஏரி கரையோரம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்த ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏழுமலை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சங்கராபுரம் போலீசார் அனுப்பி வைத்தனர். இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற ஏழுமலை ஏரியில் தவறி விழுந்து மூழ்கி பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தல் உள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலையில் வேலை பார்த்து வருபவர் ரஞ்சித்பிரசாத் (34).

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்பிரசாத் தனது மனைவி கீதாதேவி (28) மற்றும் குழந்தைகளுடன் சிப்காட் அருகில் உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    நேற்று காலை ரஞ்சித்பிரசாத் வேலைக்கு சென்றுவிட்டார். கீதாதேவி கடைக்கு சென்றார். குழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தன. கீதாதேவி வீடு திரும்பியபோது ரஜினிகுமாரி (4) என்ற பெண் குழந்தையை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியபோது சிறுமி ரஜினி குமாரி அருகில் தரையோடு தரையாக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அந்த குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரஞ்சித் பிரகாஷ்- கீதாதேவி தம்பதியருக்கு 4 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்தது. அந்த குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

    திருமுல்லைவாயலில் செல்போன் பேசியவர் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயல் இந்திராநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). பெயிண்டர்.

    நேற்று இரவு 9.30 மணி அளவில் மணிகண்டன் தனது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் சுவரில் உட்கார்ந்து செல்போனில பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர்.

    இதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அம்பத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மணிகண்டனை கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இரவு 11 மணியளவில் அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் உயிர் இழந்து விட்டதாக கூறினார்கள்.

    இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த மணிகண்டனுக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. மணிகண்டன் உடலை கண்டு உறவினர்கள் கதறிய காட்சி பரிதாபமாக இருந்தது.

    கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 80). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கிணறு அருகே நின்று கொண்டு இருந்தார். திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீரம்மாளின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள நீலாம்பூரை சேர்ந்தவர்வர் சிவக்குமார் (38). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஈஸ்வரன் காட்டு தோட்டத்தில் உள்ள கிணற்று சுவரில் படுத்து தூங்னார். அப்போது எதிர்பாரத விதமாக கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோட்டக்குப்பத்தில் நீச்சல் குளத்தில் குளித்த ஓட்டல் ஊழியர் நீரில் மூழ்கி பலியானார்.

    சேதராப்பட்டு:

    சென்னை ஆவடி நந்தவனம் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கட்டிட காண்டிக்டராக்டர்.இவரது மனைவி ஜீவாஆசிரியை. இவர்களது மகன் தினேஷ்குமார் (வயது24). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை படித்து விட்டு அங்குள்ள ஒரு பிரபல ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்கள் 4 பேருடன் புதுவைக்கு சுற்றுலா வந்தார்.

    கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து வந்தனர். நேற்று மதியம் அவர்கள் மதுஅருந்திவிட்டு தங்கி இருந்த ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளித்தனர். சாப்பிடுவதற்காக நண்பர்கள் நீச்சல் குளத்தில் இருந்து வெளியேறிய நிலையில் தினேஷ்குமார் மட்டும் தொடர்ந்து நீச்சல் குளத்தில் குளித்தார்.

    ஆனால் வெகுநேரமாகியும் தினேஷ்குமார் ஓட்டல் அறைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் நீச்சல் குளத்தில் இறங்கி பார்த்தனர். அப்போது நீரில் மூழ்கியபடி தினேஷ்குமார் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×