என் மலர்
நீங்கள் தேடியது "Dubai Stadium"
- விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது.
- கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், "இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசினாய் என்று விராட் கோலி என்னை பாராட்டியது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்" என்று பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது மனம் திறந்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அப்ரார் அகமது, "விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது. அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய பந்தில் முடிந்தால் சிக்ஸ் அடியுங்கள் என்று நான் அவரை சீண்டினேன். ஆனால் அவர் ஒருபோதும் கோவப்படவில்லை. கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட. போட்டிக்குப் பிறகு அவர் என்னிடம் நீ நன்றாக பந்துவீசினாய் என்று தெரிவித்தார். அவருடைய பாராட்டு என்னை மகிழ்ச்சியடைய செய்தது" என்று தெரிவித்தார்.
- இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
- இந்த பிட்சில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் (பிட்ச்) விவரம் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 23-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
இந்த பிட்சில் இந்திய அணி பாகிஸ்தாைன 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இறுதிப் போட்டியில் கள நடுவர்களாக பால் ரீபெல் (ஆஸ்திரேலியா), ரிச்சர்டு இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) செயல்படுவார்கள்.
ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்) 3-வது நடுவராகவும், தர்மசேனா (இலங்கை) 4-வது நடுவராகவும் இருப்பார்கள். மேட்ச் நடுவராக ரஞ்சன் மதுகல்லே செயல்படுவார்.
- நாங்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஆடுகளங்கள், போட்டியின் போது விளையாடும் ஆடுகளங்கள் வேறுபட்டவை.
- அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதாக இல்லை.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டது.
ஒரே மைதானத்தில் (துபாய்) விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமானது என்று கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள், மைக் ஆதர்டன், நாசர் உசேன் கூறி இருந்தனர். இதேபோல ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சும் ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு உகந்தது என்று தெரிவித்து இருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி போட்டி முடிவில் இந்த விமர்சனங்களுக்கு பயிற்சியாளர் காம்பீர் பதிலடி கொடுத்து இருந்தார். அதே நேரத்தில் ஒரே மைதானத்தில் ஆடுவது உதவிகரமாக இருப்பதாக வேகப்பந்து வீரர் முகமது சமி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் துபாயில் மட்டும் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை என்று பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷீ கோடக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா போட்டிகளில் வெற்றி பெறுவதை பார்த்த பிறகு, ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக இருப்பதாக பலரும் உணர்கிறார்கள். அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. போட்டியில் வெற்றி பெறுவதற்கு அன்றைய நாளில் அணிகள் நன்றாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். நன்றாக விளையாடி வெற்றி பெற்றால், சாதகமாக இருக்கிறதா? இல்லையா? என்று பேச வேண்டிய அவசியமே இருக்காது.
துபாயில் தங்கி பயிற்சி மேற்கொள்வதாலோ அல்லது அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுவதாலோ எங்களுக்கு ஆதாயம் இருப்பதாக நினைக்கவில்லை. நாங்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஆடுகளங்கள் வித்தியாசமானவை, போட்டியின் போது விளையாடும் ஆடுகளங்கள் வேறுபட்டவை. அது அனைவருக்கும் தெரியும். அதனால் எங்களது அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதாக இல்லை.
இவ்வாறு கோடக் கூறினார்.