search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Due to heavy snowfall"

    • நிலக்கோட்டை மற்றும் அதன்சுற்றுப்புற கிராமங்களில் புவிசார்குறியீடு பெற்ற மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • கடும் பனிப்பொழிவால் பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன்சுற்றுப்புற கிராமங்களில் புவிசார்குறியீடு பெற்ற மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையும் பூக்களுக்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளியூர்களிலும், வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

    மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பூக்களை பறிக்க முடியாமல் வாடியும், கருகியும் வருகிறது. அதிகாலையில் பூக்களை பறிக்க வருவதற்கு கூலியாட்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

    கார்த்திகை மாதம் என்பதால் திருமண விேஷசம் மற்றும் கோவில் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை ஒரு கிலோ ரூ.1700-க்கு விற்பனையானது. ஜாதிப்பூ ரூ.450, முல்லை ரூ.800, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.80, சம்பங்கி ரூ.40, கனகாம்பரம் ரூ.350, காக்கரட்டான் ரூ.250, செண்டுமல்லி ரூ.50, பட்டன்ரோஸ் ரூ.120, பன்னீர்ரோஸ் ரூ.120, சாதா ரோஸ் ரூ.80, கோழிக்கொண்டை ரூ.30, துளசி ரூ.30க்கு விற்பனையானது.

    பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×