search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Duraimurugan"

    • நானும் ரஜினியும் எப்போதும் போல் நண்பர்களாக இருப்போம்.
    • துரைமுருகன் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது.

    நடிகர் ரஜினிகாந்த் பேட்டியை தொடர்ந்து பேட்டி அளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:

    நானும் ரஜினியும் எப்போதும் போல் நண்பர்களாக இருப்போம்.

    நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என்று கூறினார்.

    முன்னதாக, சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பேசி இருந்தார்.

    இதற்கு அமைச்சர் துரைமுருகன், மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதை மறந்துட்டு ஏதோ ரஜினிகாந்த் பேசுகிறார் என்று கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக ரஜினிகாந்த், துரைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும். துரைமுருகனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என்று கூறினார்.

    இருவரது பேச்சும் சர்ச்சையான நிலையில் இருவரும் தற்போது விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய் வாழ்த்துகள்.
    • துரைமுருகனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:

    விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியது குறித்த கேள்விக்கு,

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

    வயதான நடிகர்களால் சினிமாவில் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை என துரைமுருகன் கூறியது குறித்த கேள்விக்கு,

    துரைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும்.

    துரைமுருகனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என்று கூறினார்.

    முன்னதாக, சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

    இதுதொடர்பாக பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்,

    மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதை மறந்துட்டு ஏதோ ரஜினிகாந்த் பேசுகிறார் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் இந்த கருத்து மோதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • திமுக-வில் பழைய தலைவர்களை சிறப்பாக சமாளித்து விருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- ரஜினி.
    • வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது- துரைமுருகன்.

    சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

    இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துரைமுருகன் பதில் கூறியதாவது:-

    மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதை மறந்துட்டு ஏதோ ரஜினிகாந்த் பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி காந்த் பேசும்போது கூறியதாவது:-

    முதலமைச்சரின் கையில் புத்தகத்தை பெற்றது பெருமை அளிக்கிறது. கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி என்று கூறினால் சினிமா, இலக்கியம், அரசியல். கலைஞர் எனும் தாய் என்ற நூல் காவியமாக அமைந்துள்ளது.

    தமிழினத்திற்காக தொடர்ந்து போராடிய தலைவர் கருணாநிதி. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு ஆலமரம். கருணாநிதி மறைவுக்கு பிறகு அவரது புகழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

    எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக கையாண்டவர் கலைஞர். தற்போது அலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.

    பேச்சு, செயலில் தனக்கான பாணியை உருவாக்கியவர் அமைச்சர் உதயநிதி. அறிவார்ந்தவர்கள் சபையில் பேசாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் தற்போது பேசிதான் ஆக வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகில் எந்த தலைவருக்கும் இவ்வளவு சிறப்பாக விழா கொண்டாடியது கிடையாது.

    எதை பேச வேண்டும் என்பதைவிட, எதை பேசக் கூடாது என்பது முக்கியமானது. முதலமைச்சர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி.

    ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம். அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். பள்ளியில் புதிய மாணவர்களை விட, பழைய மாணவர்களை சமாளிப்பது கடினம். திமுகவில் பழைய தலைவர்களை சிறப்பாக சமாளித்து விருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஏதாவது விசயம் செய்து எப்படி இருக்கிறது என கேட்டால், சந்தோஷம் என்பார். நல்லா இருக்கிறது என்பதற்காக சந்தோசம் என சொல்கிறாரா? ஏண்டா இப்படி செய்கிறீர்கள் என்பதற்காக சந்தோசம் எனச் சொல்கிறாரா? என ஒன்னும் புரியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • சென்னை மண்டல பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
    • ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் இன்று (30.07.2024) சென்னை தலைமை செயலகத்தில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 13 மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, சென்னை மண்டல பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், ரூ.700 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வெள்ள தடுப்பு திட்டங்கள் மற்றும் ரூ.35 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய தூர்வாரும் பணிகள் மற்றும் RRR திட்டத்தின் கீழ் (செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல்) ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருமழைக்கு முன்பு விரைந்து முடிக்க நீர்வளத்துறை அமைச்சரால் உத்திரவிடப்பட்டது.

    இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், கூடுதல் செயலாளர் எஸ்.மலர்விழி, மன்மதன், முதன்மை தலைமைப் பொறியாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது). கண்காணிப்பு பொறியாளர்கள், மற்றும் அனைத்து நீர்வளத்துறை செயற்பொறியாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • கூட்டணி என்பது வேறு காவிரி பிரச்சினை என்பதும் வேறு.
    • நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் தான் தர வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் நிதிஉதவி பெறும் பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டி.எம்,சி தண்ணீரை திறக்க உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் தான் விடப்படும் என்று கூறுகிறார்கள்.

    கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் அவர்கள் தண்ணீரை தர மறுக்கி றார்கள். முதலமைச்சருடன் கலந்து பேசி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதா? அல்லது கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதுவதா? என்பதை இன்று முடிவு செய்வோம். கூட்டணி என்பது வேறு காவிரி பிரச்சனை என்பதும் வேறு.

    அ.தி.மு.க ஆட்சியில் இருந்த போது மட்டும் அவர்களுக்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்தாவிட்டது. இது காலம்காலமாக உள்ள பிரச்சனை. தற்போது இதுகுறித்து கவனம் செலுத்தி வருகிறோம்.

    எடப்பாடி பழனிசாமிக்கு இதுபற்றி எல்லாம் எதுவும் தெரியாது. கர்நாடகத்தில் தற்போது 4 அணைகளிலும் போதிய நீர் இருப்பு இருந்தும் அவர்கள் அலட்சியம் காட்டுகிறார்க்ள். இதற்கு நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் தான் தர வேண்டும். ஆனாலும் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்கமாட்டேன் என்கிறார்கள் என்ன செய்வது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்திய தண்டனைச் சட்டம் (IPC) தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

    மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இப்போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    போராட்டத்தில் பேசிய துரைமுருகன், ''ஒன்றிய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்று சட்டங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. நாக்கில் தர்ப்பைப் புல்லை தேய்த்தாலும் இந்த வார்த்தைகள் வாயில் வராது. இந்த கொடுமை வேண்டாம் என்பதற்காகதான் ஆதியிலிருந்து இந்தியை நாம் எதிர்க்கிறோம்" என்று பேசினார்.

    இதனையடுத்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "பிரிட்டிஷ் காலனிய சட்டங்களை தூக்கி எறிவதாக சொல்லித்தான் இச்சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். உண்மையில் காலனிய சட்டங்களை இயற்றிய மெக்காலேவுக்கும் சர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸுக்கும் இவர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். 90 முதல் 95 சதவிகிதம் வரை அந்தச் சட்டங்களிலிருந்து copy அடித்து இதில் ஒட்டி வைத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • கள்ளச்சாராயம் குடித்து 65 உயிர்களை இழந்து வாடும் பட்டியல் இன மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    • ஒரு மூத்த அமைச்சரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குறியது

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    சட்ட சபையில் துரை முருகன் பேச்சை கேட்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 உயிர்களை இழந்து வாடும் பட்டியல் இன மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    துரைமுருகன் டாஸ்மாக்கில் கிக் இல்லை, என்று கிறுக்குத்தனமாக அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குறியது.

    "டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை..." என ஒரு மூத்த அமைச்சர், அதுவும் சட்ட சபையில் முதலமைச்சரை வைத்துக் கொண்டே கூறுவது, கிறுக்குத்தனமான ஒரு செயலாகத் தான் மக்கள் அனைவருமே பார்க்கிறார்கள். மூத்த அமைச்சர் இப்படியொரு பதில் அளிப்பது மிக மிகக் கண்டனத்திற்குறியது.

    டாஸ்மாக் கடைகளில் கிக் இல்லை, என்றால் அந்த அளவுத் தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு நடத்துகிறது. இந்த தரம் இல்லாத அரசு தன் நிலையை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளது என்பதுதான் இதற்கு அர்த்தம். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குடியை மக்களுக்குக் கொடுத்துக் கோடிகளை நீங்கள் சம்பாதிக்க கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றுவது ஏற்புடையதல்ல. எனவே தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை இறப்புகளுக்கும் தற்போதைய தமிழக அரசு தான் காரணம் என்பதை துரை முருகன் அவர்கள் தன் வாயினாலே ஒப்புக்கொண்டார். ஒரு மூத்த அமைச்சரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குறியது என்று கூறியுள்ளார்.

    • தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.
    • மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது,

    "தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது'' என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும், "உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்" என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் கூறியிருக்கின்றனர். அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.

    தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.

    தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வந்து விடும்; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை.

    அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச்சாராய வணிகத்தை தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல்துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன. தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில் காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான். மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.

    அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரு லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • விரும்பத்தகாத சில நிகழ்வை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன.
    • கேள்வி நேரம் முடிந்த பிறகே பிரச்சினைகளை பற்றி பேச முடியும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அவை முன்னவரான துரை முருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் இன்று விரும்பத்தகாத சில நிகழ்வை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன. இது வருத்தமடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் பேசுவதற்கும், வாதாடுவதற்கும் உரிமை உண்டு. ஆனால் அது விதிமுறைகளுக்குட்பட்டுதான் இருக்க வேண்டும். சபை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது எதிர்க்கட்சி தலைவருக்கும் தெரியும். அவர் முதல்-அமைச்சராக இருந்தவர்.

    கேள்வி நேரம் முடிந்த பிறகே பிரச்சினைகளை பற்றி பேச முடியும். ஆனாலும் எதிர்க்கட்சி தலைவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்கலாம் என இருந்தேன். ஆனால் அவர்கள் யாரும் உட்கார வில்லை. விஷச்சாராயம் பற்றி பேசுவதற்கோ, ஆட்சியை பற்றி பேசுவதற்கோ எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு.

    ஆனால் கேள்வி நேரத்தில் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்க கூடாது. சட்டசபையை விட்டு வெளியே போகிற முனைப்புடனேயே அவர்கள் நடந்து கொண்டனர். அதற்காக ஆச்சரியப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    எதிர்க்கட்சியினர் ஜீரோ நேரத்தில் பேசலாம். இங்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விதி 55-ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் அக்ரி கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் அளித்துள்ளனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசுவதற்கு வாய்ப்புகள் இருந்த போதிலும் அவையில் பதாகைகளை கொண்டு வந்து காட்டுவது சட்டத்துக்கு புறம்பானது.

    அவர்கள் அனுமதியின்றி இங்கு நடந்து கொண்டது இந்த அவையின் மாண்பை மீறுவதாக இருந்ததால் இன்று ஒரு நாள் மட்டும் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    • ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். அதில், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டார். மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அமைச்சர் செஞ்சி மஞ்தானுக்கு புதிய பொறுப்பு வழங்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
    • கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

    நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை.
    • மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வந்து ஏதாவது மீன் சிக்காதா? என முயற்சி செய்கிறார். வட மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வுக்கு தோல்வி தான் மிஞ்சும். எனவே அடிக்கடி தமிழகம் வருகிறார்.

    இங்கு வந்து அவர் பேசுவது ஒரு பிரதமருக்கு அழகல்ல. மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என்றார்கள். தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக டெண்டர் வைத்துள்ளோம் என்கிறார்கள்.

    மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதுதான் அவர்களின் செயல்பாடு. மாநில உரிமையை பறிக்கிறார்கள். பா.ஜ.க.வினர், தி.மு.க. வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள்.

    உங்கள் குடும்பம் போல் தரித்திர நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா நாங்கள். இந்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்:-

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கோர்ட்டில் வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ள போது சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அணையை கட்ட உள்ளனர்.

    இவ்வாறு அணைக்கட்ட கூடாது என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடிதத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உச்ச கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்று சுட்டிக்காட்டி உள்ளேன்.

    அண்டை மாநிலமான எங்களோடு பேசியிருக்கலாம். பேசாமல் செய்வது தவறு என எழுதி உள்ளேன் என்றார்.

    ×