search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EB Line"

    • மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • தேவையான இடங்களில் மின் பாதைகளின் உயரத்தை உடனடியாக அதிகரிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    நெல்லை:

    வனவிலங்குகள் மின் பாதைகளுக்கு கீழே செல்லும் பொழுது மின்சாரம் தாக்காமல் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் சார்பாக கடந்த 27-ந்தேதி சிறப்பு ஆய்வு கூட்டம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தின் முடிவில் வன விலங்குகள் செல்லும் பகுதிகளில் தேவையான இடங்களில் மின் பாதைகளின் உயரத்தை அதிகரிப்பதற்கு வன அலுவலர்களுடன் இணைந்து மின் பாதைகளின் உயரத்தை உடனடியாக அதிகரிப்பதற்கான உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.

    அதன் தொடர்ச்சியாக கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் கல்லிடைக் குறிச்சி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் அருகில் உள்ள ஸ்ரீ ராமன் குளம் கிராமத்தில் வன விலங்குகள் மின் பாதையை கடக்கும் பொழுது பாதிக்காமல் இருப்பதற்காக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், உதவி செயற்பொறியாளர் மகேஷ் சுவாமிநாதன், உதவி மின் பொறியாளர் குமார் மற்றும் மின் பணியாளர்கள், வனத்துறையின் சார்பாக அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலர் வித்யா மற்றும் வனப் பணியாளர்களும் இணைந்து ஆய்வு பணி மேற்கொண்டனர்.

    அதன் தொடர்ச்சியாக புதிதாக 30 அடி உயரம் கொண்ட 2 மின்கம்பங்கள் உடனடியாக நடப்பட்டு வனவிலங்குகள் செல்லும் பகுதியில் மின் பாதைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டது.

    • நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்தின் ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகத்தில் இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.

    இதில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வன விலங்குகள் மின் பாதையில் தொடாமல் இருப்பதற்கு தேவைப்படும் இடங்களில் மின்பாதையின் உயரத்தை அதிகரிப்பதற்கு கள ஆய்வு செய்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடர்ந்து நடைபெற இருப்பதால் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க அனைத்து அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார்.

    நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

    கூட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது மற்றும் பொறுப்பு, கிராமப்புற கோட்டம்) வெங்கடேஷ்மணி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்னரசு, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், தென்காசி மற்றும் கடையநல்லூர் (பொறுப்பு) கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம், சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், மின் அளவி சோதனை பிரிவு செயற்பொறியாளர் ஷாஜஹான், மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவுகள் கையப்படுத்துதல் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி செயற்பொறியாளர்கள் சைலஜா, முத்துசாமி, சண்முகராஜ், உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து மற்றும் மத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லு நர்கள் கலந்து கொண்டனர்.

    • மின்சார வயர் கையில் தொடும் அளவிற்கு செல்லுகிறது.
    • மின்சார வயர் வாகனங்களில் சிக்கினால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூர் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாக செல்லும் சாலைபோக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் ஏ.எஸ்.என். மருத்துவமனை அருகே சாலையை கடந்து செல்லும் மின்சார வயர் கையில் தொடும் அளவிற்கு செல்லுகிறது.

    இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையாகும். இந்த மின்சார வயர் வாகனங்களில் சிக்கினால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்உள்ளது. இது குறித்து வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×