search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EB Workers"

    • போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மேல்சட்டை அணியாமலும், பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டியும் கலந்து கொண்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகர துணை கமிஷனர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பாளை தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம்

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மேல்சட்டை அணியாமலும், பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டியும் கலந்து கொண்டனர்.

    மாநில துணைத்தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார். அப்போது அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வினை மத்திய அரசு அளித்த தேதி முதல் நிலுவையுடன் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மின்வாரியமே ஏற்று நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பேச்சுவார்த்தை

    இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா்
    • 2011ம் ஆண்டில் இருந்து எந்தவொரு ஒப்பந்த தொழிலாளரும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.

    திருப்பூர் :

    தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுத் தொழிலாளா் நல அமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

    இது குறித்து அந்த அமைப்பின் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழக மின்வாரியத்தில் கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா். இதனிடையே, ஆட்சி மாற்றம் காரணமாக 2011ம் ஆண்டில் இருந்து எந்தவொரு ஒப்பந்த தொழிலாளரும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. இது தொடா்பாக எங்களது அமைப்பு சாா்பில் பல போராட்டங்களை நடத்தியும் கடந்த ஆட்சியில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தமிழக மின் வாரியத்தில் வயா்மேன், போா்மேன், பொறியாளா்கள், கள உதவியாளா்கள், கணக்கீட்டாளா்கள் என 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணி காலிப்பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. ஆகவே, தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×