search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ECNOMIC"

    • பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை ஏற்பட மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    திருச்சி,:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை திருச்சி மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பில் உலக மக்கள்தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கலெக்டர் மா.பிரதீப் குமார் தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

    இன்றைக்கு உலக மக்கள் தொகை 800 கோடியாக இருக்கிறது. அதில் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி. தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடிக்கு மேலாக உள்ளது. மக்கள் தொகை அதிகமானால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எல்லோருக்கும் தெரியும்.

    ஆகவே மக்கள் தொகையை குறைப்பதற்காக இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. மக்கள் தொகை அதிகமானால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை ஏற்பட அதுவும் ஒரு காரணமாக இருக்கும். நான்கு பேர் இருக்க வேண்டிய வீட்டில் பத்து பேர் இருந்து, அதில் இரண்டு பேர் மட்டும் வேலை செய்தால் அந்த வீட்டில் கஷ்டம் ஏற்படும்.

    நம் நாட்டில் இருக்கக்கூடிய மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக இருக்கிறது. குறிப்பாக வேலை செய்யும் தகுதியுடைய 18 வயது முதல் 59 வயது உள்ளவர்களுடைய எண்ணிக்கை இங்கு கூடுதலாக இருக்கிறது.

    இதனால் உற்பத்தி அதிகரித்து ஜி.டி.பி. கூடும். இருப்பினும் மக்கள் தொகையின் பின் விளைவுகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேரணியில் நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமி, குடும்பநல துணை இயக்குனர் சாந்தி, மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு, மாவட்ட காசநோய் அலுவலர் சாவித்திரி, செவிலியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.


    ×