என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egg Price"

    • நாமக்கல் மற்றும் பல்லடத்தில் கறிக்கோழிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • பல ஆயிரக்கணக்கான பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் லட்சக்கணக்கான கறிக்கோழிகள், நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் 4 கோடிக்கு அதிகமான முட்டைகள் வடமாநிலங்கள் மற்றும் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் தமிழகத்தின் தேவைக்கும், சத்துணவுக்கும் முட்டைகள் இங்கு இருந்து விநியோகிக்கப்படுகிறது.

    இந்நிலையில், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 2 வாரமாக உயர்ந்து வருகிறது. நேற்று என்.இ.சி.சி மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தி அறிவித்தார். இதை அடுத்து முட்டை பண்ணை கொள்முதல் விலை 500 காசில் இருந்து 510 காசாக உயர்ந்துள்ளது.

    வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் குளிரால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல நாமக்கல் மற்றும் பல்லடத்தில் கறிக்கோழிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் லட்சக்கணக்கான கறிக்கோழிகள், நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் கறிக்கோழியின் விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    பல்லடத்தில் கறிக்கோழி கொள்முதல் விலை நேற்று 112 ரூபாயாக இருந்தது. இன்றும் அதே‌ விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் உரித்த கோழி ஒரு கிலோ 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் கறிக்கோழி தேவை அதிகரிக்கும் என்பதால் மேலும் விலை உயரும் என்று கறிக்கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • முட்டை உற்பத்தி நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விரிவாக விவாதித்தனர்.
    • 515 காசுக்கு விற்கப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் இருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 4 கோடிக்கும் அதிகமாக இங்கு முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்கிறது.

    அதன்படி நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விரிவாக விவாதித்தனர். இதை அடுத்து 515 காசுக்கு விற்கப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் காசுகளில் வருமாறு, சென்னை-540 காசுகள், ஹைதராபாத்-485, விஜயவாடா-504, பார்வாலா-504, மும்பை-550, மைசூர்-525, பெங்களூரு-525, கொல்கத்தா- 573, டில்லி-530 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதே போல நாமக்கல்லில் பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முட்டை கோழி விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் கிலோவுக்கு ரூ.95 என்ற அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையிலும் எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • கடந்த 1-ந்தேதி கொள்முதல் விலை ரூ.115 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

    இங்கு தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    அதன்படி கடந்த 1-ந்தேதி கொள்முதல் விலை ரூ.115 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் 5-ந் தேதி ரூ.106-ஆக சரிந்தது. 14-ந் தேதி மேலும் 10 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.96-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 98 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ ரூ.103-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது,

    கறிக்கோழி ஒரு கிலோ உற்பத்தி செய்வதற்கு ரூ.105 செலவாகிறது. அதற்கு மேல் கொள்முதல் விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது ரூ.103 என விலை நிர்ணயம் செய்தாலும் ரூ.95-க்கு கோழிகளை பிடிக்கின்றனர். ஒரு கிலோவுக்கு ரூ.8 இழப்பு ஏற்படுகிறது.

    கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதால் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பர். அதனால் முன்கூட்டியே இவற்றை எதிர்பார்த்து 20சதவீதம் வரை உற்பத்தியை நிறுத்தி விட்டனர். அதன் காரணமாக வாரம் 2.50 கோடி கிலோ உற்பத்தி செய்த நிலையில் தற்போது 2 கோடி கிலோ கறிக்கோழி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.

    இதற்கு இடையே நாமக்கல் மண்டல முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இந்த கூட்டத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முட்டை விலை நிலவரம் மற்றும் அதன் தேவை குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டைக்கு 5 காசுகள் உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் 530 காசுகளாக இருந்த முட்டையின் விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 535 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் முட்டை 6 ரூபாய் 50 காசு வரை விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

    • நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • தமிழகம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் 4 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்நிலையில், தேவை அதிகரிப்பால் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.

    அதன்படி முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்ந்து 550 காசுகளுக்கு விற்கப்பட்ட முட்டை விலை 555 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    • நாமக்கல்லில் இருந்து தினமும் 4 கோடிக்கு அதிகமான முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • குறிப்பாக வெளிநாடுகளுக்கு மட்டும் மாதத்திற்கு 10 கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோவுக்கு மேல் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகைக்கு முன்பு பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பண்ணை கொள்முதல் விலை ரூ.102 ஆக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையில் கிலோவுக்கு ரூ.14 குறைத்து முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.88 ஆக இன்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் கடந்த 14-ந் தேதி முதல் ரூ.87 ஆக இருந்த முட்டை கொள்முதல் விலையை, ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை கோழி விலை ரூ.92 ஆக உயர்ந்து உள்ளது.

    நாமக்கல்லில் இருந்து தினமும் 4 கோடிக்கு அதிகமான முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக வெளிநாடுகளுக்கு மட்டும் மாதத்திற்கு 10 கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் முதல்முறையாக கடந்த 9-ந் தேதி, ஒரு முட்டையின் விலை 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த விலை தற்போது வரை மாற்றமில்லாமல் அப்படியே நீடிக்கிறது.

    இதனால் சில்லறை கடைகளில் ரூ.6.50 வரை முட்டைகள் விற்பனையாகிறது. இதனால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் முட்டை விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.

    இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது.

    அந்த விலை படிப்படியாக சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ. 4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கோழிப்பண்ணைத் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல் மண்டல என்இசிசி கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 465, பர்வாலா 401, பெங்களூர் 455, டெல்லி 415, ஹைதராபாத் 415, மும்பை 470, மைசூர் 457, விஜயவாடா 423, ஹொஸ்பேட் 415, கொல்கத்தா 486.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 80 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 60 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • தினசரி 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் தினசரி 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடித்ததால் முட்டை வியாபாரிகள் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவான நெக் நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலைக்கே பண்ணையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் நெக் விலையில் இருந்து 25 முதல் 70 காசு வரை குறைத்தே கொள்முதல் செய்து வந்தனர்.

    இதை அடுத்து நாமக்கல் முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழுவான நெஸ் பேக் உருவாக்கப்பட்டு மைனஸ் விலையை பரிந்துரை செய்து வருகிறது. ஆனாலும் இந்த விலையில் இருந்து குறைத்தே வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் பண்ணையாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் முட்டை கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:-

    வியாபாரிகள் நெக் விலையில் இருந்து குறைத்து முட்டை கொள்முதல் செய்வதால், பண்ணையாளர்களுக்கு ஒரே மாதத்தில் ரூ.180 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது.

    மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் அரசே முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. அதேபோல் தமிழக அரசும் கொள்முதல், விற்பனை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.

    கோடை காலம் தொடங்கி உள்ளதால் மேலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அரசு உடனடியாக இது குறித்து முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
    • முட்டை விலையை 10 காசுகள் உயர்த்தப்பட்டு 455 காசுகளாக நிர்ணயம் செய்து ஒருங்கிணைப்பு குழுவில் அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இதில் முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. முட்டை விற்பனை சீராக இருப்பதால் பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கான மைனஸ் விலையை 30 காசுகளாக தொடர வேண்டும் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து முட்டை விலையை 10 காசுகள் உயர்த்தப்பட்டு 455 காசுகளாக நிர்ணயம் செய்து ஒருங்கிணைப்பு குழுவில் அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை 80 ரூபாயிலிருந்து 2 ரூபாய் உயர்த்தி 82 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டது.

    மேலும் நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், முட்டை கோழி விலையை 60 ரூபாயில் இருந்து 5 ரூபாய் குறைத்து, ரூ.55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    • நாமக்கலில் 8 கோடிக்கு மேலான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இதன் மூலம் தினசரி 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கலில் 8 கோடிக்கு மேலான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தியாவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடம் வகிக்கிறது. ஆனால் போதுமான விலை கிடைக்காததால் முட்டை உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடைவதாக கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் நோ மைனஸ் நெக் ரேட் வேண்டும் என்பதே பெரும்பான்மையான பண்ணையாளர்களின் கருத்தாக இருந்தது.

    அதேபோல் முட்டை விலை நிர்ணயம் தற்போதுள்ள நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்பது பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தாக இருந்தபோதிலும் நோ மைனஸ் நெக்ரேட் என்று வைக்கும் பொழுது அதனை சிறப்பாக மற்றும் சரிவர நடைமுறைப்படுத்த தினசரி விலை இருந்தால் தான் முடியும்.

    இதனால் தினசரி விலையும் நாமக்கல்லில் அமூல்படுத்தப்பட உள்ளது. இதே போல வரும் காலங்களில் என்.இ.சி.சி மட்டுமே விலை அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது பெரும்பான்மையான பண்ணையாளர்களின் கருத்தாக இருப்பதால் மற்ற அமைப்புகள் விலை அறிவிப்பு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    மேலும் லயன் மார்ஜின் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி என்.இ.சி.சி விலை மற்றும் தினசரி விலை என்பது மே 1-ந்தேதி முதல் அமுல்படுத்தப்படும். என்.இ.சி.சி விலை மற்றும் தினசரி விலையை அமல்படுத்த 50 லட்சம் கோழிகளுக்கு ஒரு குழு என்ற வகையில் நாமக்கல் மண்டலத்தில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தக் குழுக்களின் அறிவுரையின் படி வரும் காலங்களில் முட்டை விலை மற்றும் கோழி விலை நிர்ணயம் செய்வது மட்டுமல்லாமல் என்.இ.சி.சி விலை, அதாவது நோ மைனஸ் நெக்ரேட் மற்றும் தினசரி விலை கண்டிப்பாக நடைமுறைப் படுத்தப்படும்.

    பண்ணையாளர்கள் அனைவரும் நோ மைனஸ் நெக் ரேட் அமுல்படுத்தப்படும் பொழுது அதற்கான ஒத்துழைப்பை நல்கினால் மட்டுமே நோ மைனஸ் நெக்ரேட் என்பதை நடைமுறைப்படுத்த முடியும். எனவே என்.இ.சி.சி அமைப்பு பண்ணையாளர்களின் நலன் கருதி எடுக்கும் முடிவுகளை ஆதரித்து அனைவரும் இணைந்து பலனடைவோம் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    • முட்டை விலை 460 காசுகளாக நீடிப்பதால் நஷ்டம் ஏற்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் கூறி வருகிறார்கள்.
    • முட்டை மைனஸ் விலை 35 காசுக்கு மேல் குறைக்க கூடாது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக தீவன பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் முட்டை விலை 460 காசுகளாக நீடிப்பதால் நஷ்டம் ஏற்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முட்டை மைனஸ் விலை 35 காசுக்கு மேல் குறைக்க கூடாது. அப்படி எதுவும் வியாபாரிகள் குறைத்து கேட்டால் அந்த பகுதி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோடையில் கோழிகள் அதிக அளவில் தீவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உற்பத்தி 15 சதவீதம் சரிந்துள்ளது.
    • கடந்த மார்ச் 1-ந்தேதி 440 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து, 16-ந் தேதி 460 காசுகள் ஆனது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் 8 கோடி கோழிகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலம் நிர்ணயம் செய்கிறது. இந்த விலை நிர்ணயம் வாரத்திற்கு 3 நாட்கள் செய்யப்படுகிறது.

    கடந்த மார்ச் 1-ந்தேதி 440 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து, 16-ந் தேதி 460 காசுகள் ஆனது. தொடர்ந்து 25-ந் தேதி 10 காசு குறைந்து 450 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. 2 வாரத்துக்கு பின் நேற்று 30 காசு குறைந்தது. இதனால் முட்டை விலை 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணை தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

    கோடையில் கோழிகள் அதிக அளவில் தீவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உற்பத்தி 15 சதவீதம் சரிந்துள்ளது. மேலும் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை சரிந்துள்ளது. பெங்களூர், சென்னை பகுதிகளுக்கு ஹைதராபாத் முட்டைகள் வரத்து உள்ளன.

    நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலையை குறைக்காவிட்டால் விற்பனையின்றி முட்டைகள் பண்ணையிலேயே தேக்கமடைந்து விடும். அதனால் நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலை 30 காசு குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முட்டை விலை நாளுக்கு நாள் சரிந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    • 420 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசுகள் மேலும் குறைந்து 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மூட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை நாளுக்கு நாள் சரிந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் முட்டை தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசனைக்கப்பட்டது. பின்னர் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டது.

    அதன்படி 420 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசுகள் மேலும் குறைந்து 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. உற்பத்தி சரிவாலும், வடமாநிலங்களில் விலை குறைந்ததாலும் நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலை சரிந்துள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 30 காசு சரிந்த நிலையில், நேற்று மேலும் 20 காசு சரிந்து 3 நாட்களில் மட்டும் 50 காசுகள் சரிந்துள்ளதால் கோழி பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் கோழிப்பண்ணைக்கு தேவையான உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாது. பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மற்ற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் வருமாறு:

    சென்னை-435 காசு, விஜயவாடா-395, ஹைதராபாத்-370, விஜயவாடா-395, பார்வால-375, மும்பை-430, மைசூர்-415, பெங்களூர்-410, கொல்கத்தா-455, டெல்லி-405 காசுகள் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கறிக்கோழி மற்றும் முட்டை கோழி விலையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    ×