search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egg Purchase Price"

    • நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இன்று மைனஸ் 30 என்ற அளவிற்கு மிகாமல் முட்டை விற்பனை செய்ய வேண்டும்.
    • ஈஸ்டர் முடிவடைந்ததால் வரும் நாட்களில் கேரளாவில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இன்று மைனஸ் 30 என்ற அளவிற்கு மிகாமல் முட்டை விற்பனை செய்ய வேண்டும்.

    அவ்வாறு எவரேனும் 30 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    ஈஸ்டர் முடிவடைந்ததால் வரும் நாட்களில் கேரளாவில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களை அனுசரித்து அறிவிக்கப்பட்ட மைனசிற்கு மட்டுமே முட்டைகளை விற்க வேண்டும்.

    அனைத்து பண்ணையாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த மைனஸ் என்ற விரும்பத் தகாத ஒன்றை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    எனவே பண்ணையாளர்கள் அறிவிக்கப்பட்ட மைனசுக்கு மட்டுமே முட்டை விற்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. 

    • கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடித்ததால் முட்டை வியாபாரிகள் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.
    • பண்ணையாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் தினசரி 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடித்ததால் முட்டை வியாபாரிகள் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவான நெக் நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலைக்கே பண்ணையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் நெக் விலையில் இருந்து 25 முதல் 70 காசு வரை குறைத்தே கொள்முதல் செய்து வந்தனர்.

    இதை அடுத்து நாமக்கல் முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழுவான நெஸ் பேக் உருவாக்கப்பட்டு மைனஸ் விலையை பரிந்துரை செய்து வருகிறது. ஆனாலும் இந்த விலையில் இருந்து குறைத்தே வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் பண்ணையாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் முட்டை கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:-

    வியாபாரிகள் நெக் விலையில் இருந்து குறைத்து முட்டை கொள்முதல் செய்வதால், பண்ணையாளர்களுக்கு ஒரே மாதத்தில் ரூ.180 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது.

    மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் அரசே முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. அதேபோல் தமிழக அரசும் கொள்முதல், விற்பனை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.

    கோடை காலம் தொடங்கி உள்ளதால் மேலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அரசு உடனடியாக இது குறித்து முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×