என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "elastic"
- நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
- நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி உழவர் சந்தை வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.10 நாணயம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் தானிய இயந்திரம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை அல்லது துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று துண்டு பிரசவங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவ ட்டத்தி லுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கள் , தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாடத்திட்டங்களுக்கும் டெக்ஸ்டைல் கமிட்டி அனுமதி வழங்கிவிட்டது.
- வெகு விரைவில் புதிய பாட திட்டத்துடன் எலாஸ்டிக் உற்பத்தி பயிற்சிகள் துவங்கும்.
திருப்பூர் :
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (டெமேட்டா), நிப்ட்-டீ கல்லூரியுடன் இணைந்து, நாட்டில் முதல் முறை எலாஸ்டிக்கிற்கான பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
எலாஸ்டிக் மெஷின் ஆபரேட்டர் மற்றும் ஓவன் எலாஸ்டிக் மெஷின் ஆபரேட்டர்களுக்கு செயல்வழி கற்றலுடன் கூடிய பயிற்சி அளிக்கும்வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு பாடத்திட்டங்களுக்கும் டெக்ஸ்டைல் கமிட்டி அனுமதி வழங்கிவிட்டது.கூடுதலாக குரோசெட் நேரோ பேப்ரிக் ஜூனியர் சூப்பர்வைசர், ஓவன் எலாஸ்டிக் சூப்பர்வைசர் பாடத்திட்டங்களுக்கும் அனுமதி எதிர்பார்க்கிறது எலாஸ்டிக் சங்கம்.
அந்தந்த நிறுவனங்களிலேயே பயிற்சி மையங்களை உருவாக்கி அல்லது பொதுவான பயிற்சி மையத்தை உருவாக்கி எலாஸ்டிக் உற்பத்தி பயிற்சி அளிக்க ஆலோசித்துவருகின்றனர். வெகு விரைவில் புதிய பாட திட்டத்துடன் எலாஸ்டிக் உற்பத்தி பயிற்சிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்