என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Election Commision"
- மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
- அத்துடன் 14 மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபைக்கான தேர்தலுடன் 14 மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இதையடுத்து, தேர்தல் அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.558 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பரிசு பொருட்கள், மதுபானம், போதை பொருட்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.
மகாராஷ்டிராவில் மட்டும் ரூ.280 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் இருந்து ரூ.158 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது தேர்தல் நடக்கும் 2 மாநிலங்களிலும் சேர்த்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் 3.5 மடங்கு அதிகரித்துள்ளது.
- கரும்பு விவசாயி சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
- நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்த மனு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த மனு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சி, 5.7 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ளது. விதிப்படி பாராளுமன்ற தேர்தலுக்கு 3 மாதத்துக்கு முன் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு விண்ணப்பித்தோம் என நாம் தமிழர் கட்சி சார்பில் வாதிடப்பட்டது.
முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேறு நபருக்கு அந்த சின்னத்தை ஒதுக்கிவிட்டோம். பொது சின்னங்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதுபோன்ற சின்னத்தை ஒதுக்க உத்தரவிட்டால் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யும் நிலை உருவாகும். கரும்பு விவசாயி சின்னம் வேண்டும் என்றால் கூடுதலான வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறட்டும் என தேர்தல் ஆணையம் பதிலளித்தது.
இதையடுத்து, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்தது.
- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 17-ம் தேதி உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
- அப்போது, ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
பெங்களூரு:
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கர்நாடக சட்டசபை தேர்தல் பா.ஜ.க. இணை பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் கடந்த 17-ம் தேதி காலை ஹெலிகாப்டரில் உடுப்பிக்குச் சென்றார். அதில் அவர் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இந்நிலையில், காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 17-ம் தேதி காலை ஹெலிகாப்டரில் உடுப்பிக்கு வந்தார். அவரது ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது. எந்த விதமான விதிமீறல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் அங்கிருந்து ஆசியன் ஓட்டலுக்கு காரில் சென்றார். அந்தக் காரில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஜி.எஸ்.டி. குழுவினர் கூட்டாக சோதனை நடத்தினர். அதில் ஒரு பை இருந்தது. அதில் சோதனை நடத்தியதில் 2 ஜோடி உடைகள், குடிநீர் பாட்டில்கள் இருந்தது. அங்கும் எந்த விதிமீறலும் இருக்கவில்லை.
அதைத்தொடர்ந்து அண்ணாமலை காரில் காபு தொகுதிக்குச் சென்றார். அவரது கார் உதயவாரா சோதனைச்சாவடியில் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக எதுவும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து காபு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை கலந்துகொண்டார். அங்கும் அவரது கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போதும் ஒன்றும் கிடைக்கவில்லை. அதை முடித்துக்கொண்டு அவர் மீண்டும் உடுப்பி ஆசியன் பியர்ஸ் ஓட்டலுக்கு வந்தார். அங்கு அவர் தங்கிய அறையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை. பின்னர் அவர் அந்த ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு சிக்கமகளூருவுக்கு புறப்பட்டுச் சென்றார். அதனால் அண்ணாமலை தங்கிய அறை மற்றும் பயணித்த ஹெலிகாப்டர், காரில் நடத்தப்பட்ட சோதனையிலும் எங்கும் விதிமீறல் இருக்கவில்லை என தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்