search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Polls"

    • பங்குசந்தை வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
    • பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் பங்குசந்தை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப் பட்டிருந்தது. அதேபோல இன்று காலை வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு நடந்த பிரி மார்க்கெட் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

    இதைத் தொடர்ந்து வர்த்தகம் தொடங்கி பின் கணிசமாகச் சரிந்தாலும் 2000 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

    இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2106 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 67 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 663 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 193 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு, நிப்டி குறியீடு வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது.

    தேர்தல் எதிரொலியால் கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் அதிகளவிலான சரிவையும், தடுமாற்றத்தையும் சந்தித் தன. கருத்துக்கணிப்பில் தேர்தல் முடிவு பா.ஜனதா வெற்றிக்குச் சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டதால் இன்று சந்தையில் சாதகமான வர்த்தக சூழ்நிலை நிலவுகிறது.

    வர்த்தக தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
    • கருத்துக்கணிப்புகள் கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.

    கொல்கத்தா:

    7 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அதன்பிறகு நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

    இதில் பா.ஜ.க ஹாட்ரிக் வெற்றி பெறும் என பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை விட பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தன. இந்த கருத்துக்கணிப்புகளை மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நிராகரித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை கடந்த 2016, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நாங்கள் பார்த்தோம். எந்த கணிப்பும் இதுவரை சரியாக இருக்கவில்லை.

    இந்த கருத்துக்கணிப்புகள் ஊடகங்களுக்காக சிலரால் 2½ மாதங்களுக்கு முன்னரே வீட்டில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவை கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.

    தேர்தல் களத்தில் பிளவுபடுத்துவதற்கு பா.ஜ.க. முயற்சித்த விதம் மற்றும் முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்கிறார்கள் என்று தவறான தகவலை பரப்பியது போன்றவற்றால் பா.ஜ.க.வுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

    மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியிருக்கும் என நினைக்கிறேன். இந்தியா கூட்டணிக்கான வாய்ப்பை பொறுத்தவரை, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

    மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலையிடாதவரை அந்த அரசில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இருக்காது. எங்களை அழைத்தால் செல்வோம். ஆனால் முதலில் தேர்தல் முடிவுகள் வரட்டும்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.

    ×