search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric Lamp"

    • தஞ்சை மாநகராட்சியில் பல இடங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை.
    • வெள்ளை பிள்ளையார் கோவில் ரவுண்டானாவில் இருந்து சரபோஜி மார்க்கெட் வரை செல்லும் சாலை பழுதடைந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மேயர்.சண் ராமநாதன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்:-

    திருவையாறு பஸ் நிறுத்தத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டில் உள்ளதா? எந்த நிலையில் உள்ளது என்று கேள்வி கேட்டார்.

    கவுன்சிலர் கோபால்:‌‌

    தஞ்சை மாநகராட்சியில் பல இடங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை.

    உடனே அனைத்து தெரு விளக்குகளையும் எரிய வைத்து அதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.

    கவுன்சிலர் காந்திமதி:

    கீழ அலங்கத்தில் 12 வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    அவர்கள் மாநகராட்சியில் பணிபுரிபவர்கள். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

    உடனடியாக அந்த 12 வீடுகளில் வசிப்பவர்களுக்கு அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வல்லம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்க வேண்டும்.

    வெள்ளைப் பிள்ளையார் கோவில் ரவுண்டானாவில் இருந்து சரபோஜி மார்க்கெட் வரை செல்லும் சாலை பழுதடைந்து உள்ளது.

    அதனைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் ரம்யா சரவணன்:

    3-வது மண்டலத்தில் உள்ள அண்ணாநகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு இயற்பியல் ஆய்வுக்கூடமும், கூடுதல் வகுப்பறை கட்டிடமும், தொடக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளும், வண்டிக்கார தெரு மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கிய மேயர், துணை மேயர், ஆணையர் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

    தொடர்ந்து கவுன்சிலர்கள் கேசவன், ஜெய்சதீஷ், கன்னுக்கினியாள் உள்ளிட்ட பலரும் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

    இதற்கு பதில் அளித்து மேயர் சண். ராமநாதன் பேசும்போது:-

    திருவையாறு பஸ் நிறுத்த வாகன நிறுத்தும் இடம் தற்போது இலவசமாக வானங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை வரை இந்த நிலை தொடரும்.

    அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

    நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டம் கடந்து சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதில் தினமும் ஆய்வு செய்ததில் சாலை வசதி, பாதாள சாக்கடை பிரச்சனை, பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

    இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிக்கு நிதி கூறப்பட்டுள்ளது.

    அதாவது வார்டு 1 முதல் 13-வரை உள்ள முதல் டிவிசனுக்கு ரூ.120 கோடியிலும், வார்டு 14 முதல் 28 வரையிலான இரண்டாம் டிவிசனுக்கு ரூ.155.44 கோடியிலும், வார்டு 29 முதல் 41 வரையிலான மூன்றாம் டிவிசனுக்கு ரூ.466.94 கோடியிலும், வார்டு 42 முதல் 51 வரையிலான நான்காம் டிவிசனுக்கு ரூ.211.40 கோடி என மொத்தம் நான்கு டிவிசனுக்கும் சேர்த்து ரூ.1100 கோடிக்கு வளர்ச்சி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கான நிதி வந்தவுடன் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்படும்.

    காமராஜர் மார்க்கெட் கடைகள் அமைப்பதற்கான ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    விரைவில் காமராஜர் மார்க்கெட், சிவகங்கை பூங்கா ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×