என் மலர்
நீங்கள் தேடியது "Electricboard"
- பொதுமக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவான தீர்வு காண வேண்டும்
- மழைக்காலங்களில் மின்விபத்து ஏற்படாத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது
கடையநல்லூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கடையநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் பிரேமலதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி, பொதுமக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவான தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மழைக்காலங்களில் மின்விபத்து ஏற்படாத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உதவிசெயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.