என் மலர்
நீங்கள் தேடியது "electricity distribution"
- ஃபெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது.
- திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
ஃபெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 3 துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட முத்து நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீர் இறைக்கும் மின் மோட்டார், கிரைண்டர், மிக்ஸி, ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதனால் மின்சார பழுதினை சீரமைத்து தட்டுபாடின்றி மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்ககோரி பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பெரம்பலூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மின்விநியோக குறைபாடை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.