என் மலர்
நீங்கள் தேடியது "Electricity safety"
- புளியங்குடியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடையநல்லூர் கோட்டம் சார்பாக மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- நெல்லை மண்டல பாதுகாப்பு அதிகாரி பேச்சிமுத்து மின் விபத்துகள் நடக்கும் விதம் அதனை தவிர்த்திருக்க வேண்டிய வழி முறைகளை கோட்ட கள பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார்
புளியங்குடி:
புளியங்குடியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடையநல்லூர் கோட்டம் சார்பாக மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கடைய–நல்லூர் கோட்ட செயற் பொறியாளர் பிரேமலதா கலந்துகொண்டு கள பணியாளர்கள் பாதுகாப்பாக கவனமுடன் பணி புரிவதற்கு தேவையான வழி காட்டுதல்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நெல்லை மண்டல பாதுகாப்பு அதிகாரி பேச்சிமுத்து மின் விபத்துகள் நடக்கும் விதம் அதனை தவிர்த்திருக்க வேண்டிய வழி முறைகளை கோட்ட கள பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர்கள் பூபாலன், முத்தையா, முத்துகுமார் மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் கள பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.