என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Embankment"
- செக்கடி அகழியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடந்து முடிந்தன.
- புது ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையிலும் அகழிகள் கடந்த 2018-ம் ஆண்டு தூர்வாரப்பட்டது.
இதில் 18 மற்றும் 19-வது வார்டுக்கு உட்பட்ட செக்கடி பகுதியில் உள்ள அகழியும் தூர்வாரப்பட்டது.
இந்த நிலையில் புது ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் மழை நீர் தேக்கி வைப்பதற்காக செக்கடி அகழியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தன.
இதையடுத்து புது ஆற்றில் இருந்து தண்ணீர் அகழிக்கும் வந்தடைந்தது. அந்தத் தண்ணீர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அகழி தண்ணீரில் மலர் தூவி வரவேற்றார்.
இந்த தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மேத்தா, தமிழ்வாணன், சசிகலா அமர்நாத், உதவி பொறியாளர் கார்த்திக்கேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.