என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "employee killed"
- தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள இசலி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் சண்முகமுனீஸ்வரன் (வயது29). இவர் அருப்புக் கோட்டையிலுள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு கடந்த வருடம் யோகிதா (26) என்பவருடன் திருமணமானது. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார். இந்நிலை யில் நேற்று மாலை கரு மேகத்துடன் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
அப்போது சண்முக முனீஸ்வரன் புதியதாக கட்டிவரும் அவரது வீட்டு மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு வைத்து செட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது திடீரென மின்னல் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
சண்முக முனீஸ்வரனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவி னர்கள் மின்னல் தாக்கி படுகாயமடைந்தவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே சண்முக முனீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.
- டீ குடிப்பதற்கு அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார்.
- தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள விருத்தாசலம் சாலை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர். இவர் இன்று அதிகாலை டீகுடிப்பதற்கு அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக ந்த சுற்றுலா பஸ் பெரியசாமி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்தார்.விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வல்லம்:
தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள வல்லம் புதூர் கூத்தக்குடி ஏரி வடிகால் பாசன வாரியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றிய புகாரின்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? அவர் எந்த ஊரை சோந்தவர்? இறந்து கிடந்தவரின் இடது கை முறிந்திருந்ததால் அவரை யாரோ அடித்து கொலை செய்து உடலை தீவைத்து எரித்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள இ.பி.காலனியை சேர்ந்த போர்வெல் தொழிலாளி அருள்ராஜ் (வயது 55) என தெரிய வந்தது.
இதையடுத்து அருள் ராஜை கொலை செய்தவர்கள் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இதில் அருள்ராஜை அவரது மகன், மருமகன் ஆகியோர் கூலிப்படையுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
அருள்ராஜிக்கும், அவரது மனைவி சின்னம்மாளுக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்ராஜ், மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சின்னம்மாள், சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.
இதுபற்றிய தகவல் அருள்ராஜின் மகன் சியாம் இன்பென்ட்ராஜ் (19), மருமகன் சபரிநாதன் (37) ஆகியோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
இதனால் சம்பவத்தன்று இரவு அருள்ராஜை நைசாக இருவரும் பேசி வீட்டுக்கு வரவழைத்தனர். பின்னர் அங்கு வைத்து அவரை சரமாரியாக இருவரும் தாக்கினர். மேலும் கூலிப் படையை சேர்ந்த விளார் சேக் அப்துல்லா (26), ரெட்டிபாளையம் கணேசன் (34) ஆகியோரும் அருள் ராஜை தாக்கினர். அவர்கள் தொடர்ந்து தாக்கியதில் அருள்ராஜ் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருள்ராஜை உடலை வல்லம் புதூர் கூத்தக்குடி ஏரி வடிகால் பாசன வாரிக்கு கொண்டு சென்று அங்கு பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். பிறகு அங்கிருந்து அவர்கள் 4 பேரும் தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் அருள்ராஜை கொலை செய்த அவரது மகன் சியாம் இன்பென்ட்ராஜ், மற்றும் கூலிப்படையை சேர்ந்த சேக் அப்துல்லா, கணேசன் ஆகிய 4 பேரையும் வல்லம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.
தொழிலாளியை, அவரது மகன், மருமகன் ஆகியோர் கூலிப்படை உதவியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் வல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்:
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பஞ்சயம் கோட்டை பகுதியில் கல் குவாரி உள்ளது. இங்கு நெல்லை மாவட்டம் சுந்தரேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிபாண்டியன் (வயது 65) என்பவர் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே குவாரியில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள்மலை அடி வாரத்தை சேர்ந்த செல்வராஜ் (32) என்பவரும் கல் உடைக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே 2 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இசக்கிபாண்டியனின் செல்போனை செல்வராஜ் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
தற்போது கரூர் மாவட்டம் பஞ்சயம் கோட்டை கல்குவாரியில் பணியாற்றி வந்த போது, செல்வராஜ் தனது செல்போனை திருடியது தொடர்பாக இசக்கிப்பாண்டியன் சக தொழிலாளர்களிடம் கூறி வந்துள்ளார். இதனால் அவமானமடைந்த செல்வராஜ், இசக்கி பாண்டியனிடம் என்னை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றிரவு மது அருந்தி விட்டு வந்த செல்வராஜ், இசக்கிபாண்டியன் தங்கியிருந்த குடிசைக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், அருகில் கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து இசக்கிபாண்டியனின் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கி இசக்கிப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம்பா ளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இசக்கிப்பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கொலையாளி செல்வராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (38). துப்புரவு தொழிலாளி. இவரது உறவினர் முருகன் (26). இருவரது வீடுகளும் அருகருகே உள்ளது. இதனால் அடிக்கடி இடத்தகராறு இருந்து வந்தது.நேற்று மாலை இருவருக்கும் மீண்டும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், சரவணக்குமாரின் மார்பில் கத்திரிக்கோலால் குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த சரவணக்குமார் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.
இது குறித்து கோமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கன்னிவாடி அருகேயுள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் முத்தையா (வயது 45). இவர் அம்மாபட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரெட்டியபட்டியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவரின் விவசாய தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்தையா மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முத்தையாவுக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்