search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employees strike"

    • முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் அவதி.
    • இந்தியா முழுவதும் சுமார் 70 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

    ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதனால், பெங்களூரு- டெல்லி, கோழிக்கோடு- துபாய் குவைத்- தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா கண்ணூரில் இருந்து தனது விமானங்களை ரத்து செய்தது. அதன்படி, கண்ணூரில் இருந்து மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, கொச்சி விமான நிலையத்திலிருந்து நான்கு சேவைகள் நிறுத்தப்பட்டன.

    அறிக்கைகளின்படி, திருவனந்தபுரம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் இருந்து சுமார் 70 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கச் சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தாலும், அதன் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தான் ரத்து செய்ய வழிவகுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 98 பேர் வேலை செய்து வருகின்றனர்
    • குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பேச்சுவார்த்தை

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் மொத்தம் 29 ஊராட்சிகள் உள்ளது. இதில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மொத்தம் 74 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையங்களில் 56 அங்கன்வாடி பணியாளர்கள், 42 உதவியாளர்கள் என மொத்தம் 98 பேர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது காவேரிப்பாக்கம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலராக பணியாற்றிவரும் விஜயலட்சுமி என்பவர் அங்கன்வாடி ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதகவும், இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் காவேரிப்பாக்கம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை மாற்றக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 36-வது நாளான புதுவை சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் போராட்டம் நடத்தினர்.
    • பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி பாசிக் ஊழியர்கள் 36 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     பாசிக் தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய 114 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு மாதம்தோறும் தொடர்ந்து சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 6-வது ஊழியக்குழு பரிந்துரைபடி அனைத்து ஊழியர்களுக்கும் விடுபட்ட சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    36-வது நாளான  புதுவை சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தில் பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தாராசு, மாணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குணசீலன், ராஜா, கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிலுவை சம்பளம் முழுவதையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.

    புதுச்சேரி:

    பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் மாநில தலைவர் தினேஷ் பொன்னையா மாநில கவுரவ தலைவர் அபிஷேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தராசு, மகேந்திரன், மணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குணசீலன், ராஜா,கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த, ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிலுவை சம்பளம் முழுவதையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.

    எதிர்வரும் காலங்களில் மாதம்தோறும் சம்பளம் வழங்கிட வேண்டும்.தினக்கூலி ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

    • பணி நிரந்தர செய்ய வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு சி ஐ டி யு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்திற்கு மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் ஜெகன் பொருளாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி ஐ டி யு மாவட்ட செயலாளர் பரசுராமன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தாமோதரன், மாவட்ட தலைவர் தர்மன் ஆகியோர் பேசினர்.

    புயல் பாதிப்புகளின் போது இரவு பகலாக பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அரசு அறிவித்தபடி தினக்கூலி ரூ.380 அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

    பல ஆண்டுகாலம் பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களை காலியாக உள்ள பணியிடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

    ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்ற பொய்யான அறிக்கை அனுப்புவது கைவிட வேண்டும் ஊதிய உயர்வு வேலைப்பளு பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடந்தது.

    • ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம்
    • மின்கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் பாதிப்பு

    வந்தவாசி:

    வந்தவாசி துணை மின் நிலையத்தில் ஊழியர்க ளான ராம்பிரகாஷ், பாபு, காண்டீபன், ஆகியோர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்து நபர் மின்சார ஊழியர்கள் மீது திடீரென தாக்கியுள்ளார்.

    இது குறித்து மின்சார ஊழியர்கள் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இன்று அனைத்து மின் ஊழியர்கள் பதிவேட்டில் கையொப்பமிடாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின் ஊழியர்கள் மீது தாக்கிய நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் ஊழியர்கள் வலியுறுத்தினர்.

    மின் ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் மின் கட்டணம் செலுத்துபவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.

    மின் ஊழியரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் போராட்டத்தால் வந்தவாசி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில பதிவாளர் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி 4 . 7 . 2022 முதல் 12.8.2022 வரை தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 18-ந் தேதி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் கவுரவ தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் விநாயகமூர்த்தி, மாவட்ட நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கிட வேண்டும்.

    கூட்டுறவு வங்கியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு ஊதியமாக 10,000, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உடன் கூடிய மாற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு 3:1 என்கிற விகிதத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 25 சதவீத பணியிடங்களை பதவி உயர்வுகள் மூலம் நிரப்ப வேண்டும்.

    எஸ்.ஆர்.பி மூலம் 2015-16 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • சம்பள நிலுவை தொகை வழங்கக்கோரி விற்பனைக்குழு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்தனர்.
    • தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    புதுச்சேரி:

    புதுவை ஏ.ஐ.டி.யூ.சி. விற்பனைக்குழு ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.

    பழைய பஸ் நிலையம், லாஸ்பேட்டை உழவர் சந்தைகள், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    போராட்டத்துக்கு சங்க தலைவர் பாஸ்கர பாண்டியன் செயலாளர் சண்முகம், பொருளாளர் பழனிராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். செயல் தலைவர் செல்வநாதன், துணைத்தலைவர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஊழியர்களின் 8 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். 81 தினக்கூலி ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 7-வது சம்பளக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். தட்டாஞ்சாவடியிலேயே ஒழங்குமுறை விற்பனைக்கூடம் தொடர்ந்து இயங்க செய்ய வேண்டும்.

    ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கியுள்ளது.

    ஊழியர்களின் போராட்டத்தால் உழவர்சந்தைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் வியாபாரிகளுக்கு டோக்கன் வழங்கி, தராசு, படிக்கல், விலைப்பட்டியலை ஊழியர்கள்தான் வழங்க வேண்டும். ஊழியர்களின் போராட்டத்தால் புதுவை உழவர்சந்தையில் விலைப்பட்டியல் வைக்கப்படவில்லை. தராசு, படிக்கல் வழங்கப்படவில்லை.

    இருப்பினும் விவசாயிகள் வழக்கம்போல கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர். பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

    லாஸ்பேட்டை உழவர்சந்தை திறக்கப்படவில்லை. நுழைவு வாயில் முன்பு ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் விவசாயிகள் உள்ளே செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் விவசாயிகளுக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஊழியர்கள் தாங்கள் ஏற்கனவே முன்னறிவிப்பு செய்தே போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டுவந்துவிட்டோம். எங்களை விற்க அனுமதியுங்கள் என்றனர்.

    பின்னர் காய்கறி மூட்டைகளுடன் மறியல் செய்தனர். லாஸ்பேட்டை சாலையில் கடைகள் அமைக்க முயற்சித்தபோது போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. விற்பனை குழு ஊழியர்கள் போராட்டத்தால் சுமார் ஒரு டன் காய்கறிகள் நஷ்டம் ஏற்படும் என அங்கு கடை வைத்திருந்த 40 வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ரேசன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
    • பழங்காநத்தம் ரவுண்டனா அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (7-ந் தேதி) முதல் 9-ந்தேதி வரை 3 நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் இன்று காலை தொடங்கியது. பழங்காநத்தம் ரவுண்டனா அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    'பொது விநியோக திட்டத்துக்கு என்று தனித்துறை உருவாக்க வேண்டும், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியுடன், அரசு பணியாளர்களுக்கான 31 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும், நியாயவிலை கடைகளில் புதிய 4ஜி சிம் வழங்க வேண்டும், இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், செல்லத்துரை உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    டெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் தங்களது பாதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். #JetAirwaysEmployees #Strike
    புதுடெல்லி:

    கடன்சுமை காரணமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் விமான சேவையை நிறுத்தி உள்ளது. இதனால் விமான பயணிகள் மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்களது பாதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் விமானிகள், பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டம் குறித்து நிறுவன அதிகாரி அசோக் குப்புசாமி கூறுகையில், “ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். சில காரணங்களால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத சூழல் ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இதை சமாளிக்க வங்கிகளிடம் கடன் தொகை கோரப்பட்டது. ஆனால் கடன் கிடைக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கடன் கிடைக்க உதவி செய்ய வேண்டும்” என்றார்.  #JetAirwaysEmployees #Strike
    ×