search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Encroachers"

    • மர்மநபர்கள் வடிகால்களில் குப்பைகள் கொட்டுவதும், ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது
    • பிரதான சாலையில் இருந்த வடிகால்கள் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.

    தூத்துக்குடி:-

    தூத்துக்குடி மாநகரில் மழைநீர், கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது,

    இந்நிலையில் சில இடங்களில் மர்மநபர்கள் வடிகால்களில் குப்பைகள் கொட்டுவதும், ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இதனால் பல இடங்களில் தண்ணீர் செல்வதில் தடைகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகரின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலுவலர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு வடிகால் ஆக்கிர–மிப்பாளர்கள் மீதும், குப்பைகள் கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குறிப்பாக தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதியில் ஊராட்சியாக இருந்தபோது போடப்பட்ட வடிகால்கள் மூலம் மழைநீர்,கழிவுநீர் சாலையில் தேங்காமல் சென்று வந்தது, ஆனால் தற்போது அந்த வடிகால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பினாலும், மணல் கொட்டி மூடியும் வைத்துள்ளனர். பல இடங்களில் குப்பைகளும் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சிறு மழை பெய்தாலும் தெருக்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. பிரதான சாலையில் இருந்த வடிகால்கள் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. அதன்பின் புதிதாக வடிகால் அமைக்காததாலும் தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலை மழை நீர் முழுமையாக தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் ஆறுகளாக மாறிவிடுகிறது.

    இதனால் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து உரிய கவனம் செலுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய வடிகால்களையும் உடனடியாக அமைக்க மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


    ×